பெல்லாரி

பெல்லாரி (Bellary) அதிகாரப்பூர்வமாக பள்ளாரி, பெயரிடப்பட்ட இது தென்னிந்திய மாநிலமான கர்நாடகாவின் பெல்லாரி மாவட்டத்திலுள்ள ஓர் நகரம் ஆகும். புகழ் மிக்க சிவன் கோயில் ஒன்று இங்குள்ளது. இதன் பெயராலேயே இவ்வூர் இப்பெயர் பெற்றதாகக் கூறுவர். புகழ் பெற்ற புராதன நகரமான அம்பி இதன் அருகில் உள்ளது.

பெல்லாரி
Bellary
ಬಳ್ಳಾರಿ
நகரம்
நாடு இந்தியா
மாநிலம்கர்நாடகா
பகுதிபயாலுசீமே
,மாவட்டம்பெல்லாரி
பரப்பளவு
 • நகரம்85.95 km2 (33.19 sq mi)
ஏற்றம்485 m (1,591 ft)
மக்கள்தொகை
 (2011 census)[2]
 • நகரம்4,09,644
 • தரவரிசைமதிப்பிடப்படாதது
 • அடர்த்தி4,800/km2 (12,000/sq mi)
 • பெருநகர்
5,55,944
மொழி
 • அலுவல்கன்னடம்
நேர வலயம்ஒசநே+5:30 (இ.சீ.நே.)
அஞ்சல் குறியீட்டு எண்
583 10x[3]
தொலைபேசிக் குறியீடு(+91) 8392[4]
வாகனப் பதிவுகேஏ-34
பாலின விகிதம்1.04[2] ஆண்/பெண்
கல்வியறிவு79%[2]%
இணையதளம்www.bellarycity.gov.in

இது மாநில தலைநகரான பெங்களூரில் இருந்து 306 கி.மீ. (190 மைல்), ஐதராபாத்திலிருந்து 351 கி.மீ. (218 மைல்) தொலைவிலும் உள்ளது. பெல்லாரியின் நகர்ப்புற மக்கள் தொகை 4,23,424 எனவும், மெட்ரோ மக்கள்தொகை 4,77,537 எனவும் கணக்கெடுக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவின் அதிக மக்கள் தொகை கொண்ட நகரங்களில் இதுவும் ஒன்றாகும். ஜெ.ர.தா. டாட்டாவால் 1932-ஆம் ஆண்டு அக்டோபர் 15-ஆம் தேதி கராச்சியிலிருந்து சென்னைக்கு இயக்கப்பட்ட முதல் இந்திய வணிக விமானத்தின் ஒரு பகுதியாக பெல்லாரி இருந்தது.

வரலாறு

பல்லாரி நகராட்சி 2004இல் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.[5] அக்டோபர் 2014இல் நகரத்தின் பெயரை மாற்றுவதற்கான முன்மொழிவுக்கு[6] இந்திய அரசாங்கத்தின் மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்தது மற்றும் பெல்லாரி 1 நவம்பர் 2014 அன்று "பல்லாரி" என மறுபெயரிடப்பட்டது.[7]

தட்பவெப்பம்

பெல்லாரி, 15.15°N 76.93°Eஇல் அமைந்துள்ளது. இது சராசரியாக 495 மீட்டர்கள் (1,624 அடி) உயரத்தில் உள்ளது. நகரம் ஒரு பரந்த, கறுப்பு பருத்தி மண்ணின் சமவெளியின் மத்தியில் உள்ளது.[8] கருங்கல் பாறைகளும் மலைகளும் பெல்லாரியின் முக்கிய அம்சமாகும். இந்த நகரம் முக்கியமாக பெல்லாரி குட்டா , கும்பரா குட்டா ஆகிய இரண்டு கருங்கல் மலைகளை சுற்றி பரவியுள்ளது.

பெல்லாரி குடா கிட்டத்தட்ட 2 மைல்கள் (3.2 கிமீ) சுற்றளவும் 480 அடி (150 மீ) உயரமும் கொண்டது. இந்தப் பாறையின் நீளம் வடகிழக்கிலிருந்து தென்மேற்கு வரை சுமார் 1,150 (350 மீ) அடியாகும். கிழக்கிலும் தெற்கிலும் ஒரு ஒழுங்கற்ற கற்பாறைகள் உள்ளன. மேற்கில் ஒரு உடைக்கப்படாத ஒற்றைப்பாதை உள்ளது. மேலும், வடக்கே வெற்று, கரடுமுரடான முகடுகளாலான ஒரு சுவர் உள்ளது.

கும்பரா குட்டா தென்கிழக்கில் இருந்து மனித முகத்தைப் போல் தெரிகிறது. இது 'முகமலை' என்றும் அழைக்கப்படுகிறது.

தட்பவெப்ப நிலைத் தகவல், பெல்லாரி
மாதம்சனபிப்மார்ஏப்மேசூன்சூலைஆகசெப்அக்நவதிசஆண்டு
பதியப்பட்ட உயர்ந்த °C (°F)34.6
(94.3)
37.0
(98.6)
41.0
(105.8)
45.0
(113)
44.0
(111.2)
41.0
(105.8)
37.0
(98.6)
39.0
(102.2)
38.0
(100.4)
38.0
(100.4)
35.0
(95)
35.0
(95)
45
(113)
உயர் சராசரி °C (°F)30.0
(86)
32.0
(89.6)
35.0
(95)
38.0
(100.4)
37.0
(98.6)
33.0
(91.4)
32.0
(89.6)
32.0
(89.6)
32.0
(89.6)
32.0
(89.6)
30.0
(86)
29.0
(84.2)
32.67
(90.8)
தினசரி சராசரி °C (°F)23.1
(73.6)
25.4
(77.7)
28.7
(83.7)
31.7
(89.1)
31.5
(88.7)
28.5
(83.3)
27.4
(81.3)
27.2
(81)
27.1
(80.8)
27.2
(81)
24.5
(76.1)
22.4
(72.3)
27.06
(80.71)
தாழ் சராசரி °C (°F)16.3
(61.3)
18.9
(66)
22.5
(72.5)
25.4
(77.7)
26.1
(79)
24.0
(75.2)
22.9
(73.2)
22.5
(72.5)
22.6
(72.7)
23.0
(73.4)
18.5
(65.3)
15.8
(60.4)
21.4
(70.5)
பதியப்பட்ட தாழ் °C (°F)7.8
(46)
12.0
(53.6)
14.0
(57.2)
18.0
(64.4)
19.0
(66.2)
19.0
(66.2)
20.0
(68)
17.0
(62.6)
13.0
(55.4)
13.0
(55.4)
10.0
(50)
10.0
(50)
7.8
(46)
பொழிவு mm (inches)2.7
(0.106)
3
(0.12)
15
(0.59)
23
(0.91)
61
(2.4)
61
(2.4)
72
(2.83)
88
(3.46)
131
(5.16)
100
(3.94)
44
(1.73)
14
(0.55)
610
(24.02)
ஈரப்பதம்54464041485863666771676357
சராசரி மழை நாட்கள்0.30.41.02.35.25.87.28.09.07.93.51.452
சூரியஒளி நேரம்279.5285.5304.5306.8285.6178.0156.6150.7180.6206.6226.0250.82,811.2
[சான்று தேவை]

[1][9]

மக்கள்தொகை

2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்புப்படி பெல்லாரி நகர்ப்புறத்தின் மக்கள்தொகை 477,537 ஆக இருந்தது. இது கர்நாடகாவின் 7வது அதிக மக்கள் தொகை கொண்ட நகரமாகும்.[10] 2001இல் மக்கள் தொகை 316,766 ஆக பதிவு செய்யப்பட்டது.[11]

தொழில்கள்

பருத்தியானது வரலாற்று ரீதியாக பெல்லாரியைச் சுற்றியுள்ள முக்கிய விவசாயப் பயிர்களில் ஒன்றாக இருப்பதால், நகரம் பருத்தி அரவை ஆலை, நூற்பாலை, நெசவுத் தொழில்நுட்பம் போன்ற பருத்தி பதப்படுத்தும் தொழில் செழித்து வருகிறது. ஆரம்பகால நீராவி பருத்தி நூற்பு ஆலை 1894இல் நிறுவப்பட்டது, இது 1901 வாக்கில் 17,800 விசைத்தறிகளைக் கொண்டிருந்தது. மேலும் 520 கைத்தறி நெசவுகளும் இருந்தது.[12]

போக்குவரத்து

சாலைப் போக்குவரத்திற்கு ஏதுவாக மாநில நெடுஞ்சாலையும், ரயில் நிலையங்களும் உள்ளன.

குறிப்பிடத்தக்கவர்கள்

  • பசவராஜேஸ்வரி - அரசியல்வாதி, தொழிலதிபர்.
  • இரவி பெலகரே - நடிகர், எழுத்தாளர், புதின ஆசிரியர், பத்திரிகையாளர், ஹாய் பெங்களூரு என்ற இணைய இதழின் வெளியீட்டாளர்
  • நவீன் சந்திரா - தெலுங்கு திரையுலகில் நடிகர்
  • மஞ்சுளா செல்லூர் - கல்கத்தா உயர்நீதிமன்றத்தின் முதலாவது பெண் தலைமை நீதிபதி
  • நாகரூர் கோபிநாத் - இந்தியாவில் இருதய அறுவை சிகிச்சையின் முன்னோடிகளில் ஒருவர். 1962இல் இந்தியாவில் திறந்த இதய அறுவை சிகிச்சையின் முதல் வெற்றிகரமான செயல்பாட்டிற்கு பெருமை சேர்த்தவர். பத்மசிறீ (1974), மரு. பி. சி. ராய் விருது (1978) ஆகியவற்றைப் பெற்றவர்
  • ஜெயந்தி - திரைப்பட நடிகை, பெல்லாரியில் பிறந்தவர்
  • கே.சி. கொண்டையா - அரசியல்வாதி, தொழிலதிபர்
  • ஆற்காடு ரங்கநாத முதலியார் - பெல்லாரியின் முன்னாள் துணை ஆட்சியர். அரசியல்வாதி, இறையியலாளர் . 1926 முதல் 1928 வரை சென்னை மாகாணத்தின் பொது சுகாதாரம் மற்றும் கலால் துறை அமைச்சராக பணியாற்றினார்.
  • ஏ. சபாபதி முதலியார் - புரவலர்; இவர் மருத்துவமனைக்கு நிலத்தையும் கட்டிடத்தையும் நன்கொடையாக வழங்கியதைத் தொடர்ந்து, பெண்கள் மற்றும் குழந்தைகள் மருத்துவமனை அல்லது மாவட்ட மருத்துவமனைக்கு ஆரம்பத்தில் இவரது பெயரிடப்பட்டது.
  • பெல்லாரி ராகவா (1880-1946) - பிரபல நாடகாசிரியர். பெல்லாரியில் உள்ள ராகவ கலா மந்திர் கலையரங்கம் இவரது பெயரால் அழைக்கப்படுகிறது.
  • சுவர்ணா ராஜாராம் - இசுடோனி புரூக் பல்கலைக்கழகத்தில் உளவியல் துறையின் புகழ்பெற்ற பேராசிரியர்.
  • தர்மவரம் இராமகிருஷ்ணமாச்சாரியலு (1853-1912) - பிரபல நாடகக் கலைஞர்.
  • பார்கவி ராவ் - கன்னடம்-தெலுங்கு மொழிபெயர்ப்பாளர். மதிப்புமிக்க கேந்திர சாகித்ய அகாதமி விருது வென்றவர்.
  • கோலாச்சலம் சீனிவாச ராவ் (1854-1919) - பிரபல நாடகக் கலைஞர்
  • கலி ஜனார்தன் ரெட்டி - முன்னாள் அமைச்சர். இந்தியாவின் பணக்கார அரசியல்வாதிகளில் இவரும் ஒருவர்.
  • ஸ்ரீராமுலு - கர்நாடகாவின் தற்போதைய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர்.மக்களவை உறுப்பினர். 1952 முதல் தொடர்ச்சியாக மூன்று முறை தேர்ந்தெடுக்கப்பட்டார். பிரதமர் ஜவகர்லால் நேருவின் அரசியல் செயலாளராகவும் இருந்தார்.
  • இப்ராஹிம் பி. சையத் - இந்திய-அமெரிக்க கதிரியக்க நிபுணர்.

சான்றுகள்

வெளி இணைப்புகள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
பெல்லாரி
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=பெல்லாரி&oldid=3806420" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்