பெருமாட்டி பிரபோர்ன் கல்லூரி

பெருமாட்டி பிரபோர்ன் கல்லூரி (Lady Brabourne College) என்பது இந்தியாவின் கொல்கத்தாவில் உள்ள பெண்கள் கல்விக்கான ஒரு நிறுவனம் ஆகும். இக்கல்லூரி இளங்கலை மற்றும் பாடங்களில் மாணவிகளைச் சேர்க்கிறது. கொல்கத்தா பல்கலைக்கழக இணைவு பெற்ற கல்லூரியாக இது செயல்படுகிறது. இக்கல்லூரி மேற்கு வங்காள மாநில அரசாங்கத்தால் நிர்வகிக்கப்படும் கல்லூரியாகும்.[1]

பெருமாட்டி பிரபோர்ன் கல்லூரி
பெருமாட்டி பிரபோர்ன் கல்லூரி நுழைவாயில்
வகைஇளநிலை பட்டப்படிப்பு கல்லூரி
உருவாக்கம்1939; 85 ஆண்டுகளுக்கு முன்னர் (1939)
சார்புகொல்கத்தா பல்கலைக்கழகம்
முதல்வர்சைலி சர்க்கார்
அமைவிடம்
பி-1/2, சுகார்வார்தி பகுதி, பெனியாப்புகுர்
, , ,
700017
,
22°32′44″N 88°22′08″E / 22.5454875°N 88.3689926°E / 22.5454875; 88.3689926
வளாகம்நகரம்
இணையதளம்ladybrabourne.com
பெருமாட்டி பிரபோர்ன் கல்லூரி is located in மேற்கு வங்காளம்
பெருமாட்டி பிரபோர்ன் கல்லூரி
Location in மேற்கு வங்காளம்
பெருமாட்டி பிரபோர்ன் கல்லூரி is located in இந்தியா
பெருமாட்டி பிரபோர்ன் கல்லூரி
பெருமாட்டி பிரபோர்ன் கல்லூரி (இந்தியா)

வரலாறு

பெருமாட்டி பிரபோர்ன் கல்லூரி 1939ஆம் ஆண்டு சூலை மாதம் கல்கத்தாவில் (இப்போது கொல்கத்தா ) பார்க் சர்க்கஸில் உள்ள வாடகை வீடு ஒன்றில் அன்றைய வங்காளத்தின் பிரதம மந்திரி ஏ. கே. பசுலுல் ஹக்கின் முயற்சியைத் தொடர்ந்து நிறுவப்பட்டது.[2] வங்காளத்தின் ஆளுநராக இருந்த 5வது பரோன் பிரபோர்னின் மனைவியான ஆங்கிலோ-ஐரிஷ் உயர் குடியினரான டோரின், பரோனஸ் பிரபோர்னின் நினைவாக இக்கல்லூரிக்குப் பெயரிடப்பட்டது.[2]

பிரபோர்ன் பிரபு 23 பிப்ரவரி 1939-ல் இறந்தார். அடுத்த ஆளுநரான சர் ஜான் ஹெர்பர்ட் 1939 ஆகத்து 26 அன்று இக்கல்லூரிக்கு அடிக்கல்லை நாட்டினார். இக்கல்லூரியில் 50 சதவீத இடங்கள் முசுலிம் பெண்களுக்கும், மீதமுள்ள இடங்கள் இந்துக்கள், பார்சிகள், சீக்கியர்கள், சைனர்கள் மற்றும் பிற இன சமூகத்தினருக்கும் ஒதுக்கப்பட்டது.[2]

விடுதி வசதி முசுலிம்களுக்கென பிரத்தியேகமாக வழங்கப்பட்டிருந்தது. முசுலீம் மாணவர்கள் குறைந்த அளவில் சேர்ந்ததால், கல்லூரியில் இந்து மாணவர் சேர்க்கை தொடங்கியது.[3] அனைத்திந்திய சிறுபான்மை சங்க கருத்தின்படி முசுலிம் மாணவர்கள் கல்லூரியில் சேருவது கடினமானது.[4] 2017-ல் இக்கல்லூரி, கொல்கத்தா பல்கலைக்கழகத்துடன் இணைந்த முனைவர் பட்டம் பெறுவதற்கான படிப்பினை வழங்குவதற்கான அனுமதியினை வழங்கியது.

குறிப்பிடத்தக்க முன்னாள் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள்

1948-ல் பெருமாட்டி பிரபோர்ன் கல்லூரி மாணவர்கள்

மேலும் பார்க்கவும்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

அதிகாரப்பூர்வ இணையதளம்

🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்