பெருநிறுவன விவகாரங்கள் துறை அமைச்சகம்

பெருநிறுவன விவகாரங்கள் துறை அமைச்சகம் (Ministry of Company Affairs, MCA) இந்திய அரசின் ஓர் அமைச்சரகம் ஆகும். இந்திய தனியார்த்துறை நிறுவனங்களைக் கட்டுப்படுத்தும் இந்திய நிறுமங்கள் சட்டம், 1956 மற்றும் தொடர்புடைய சட்டங்களை செயற்படுத்துவது இந்த அமைச்சகத்தின் பொறுப்பு ஆகும். இந்தியாவின் தொழில் மற்றும் சேவைத்துறை நிறுவனங்களை கட்டுப்படுத்தும் முதன்மை பொறுப்பு இந்த அமைச்சரகத்திற்கு உள்ளது. இதன் அமைச்சராக தற்போது நிர்மலா சீதாராமன் பொறுப்பேற்றுள்ளார். தீவிர மோசடி விசாரணை அலுவலகம் இந்த அமைச்சகத்தின் கீழ் இயங்குகிறது.

இந்தியக் குடியரசு
பெருநிறுவன விவகாரங்கள் துறை அமைச்சகம்
துறை மேலோட்டம்
ஆட்சி எல்லைஇந்திய அரசு
தலைமையகம்சாசுத்திரி பவன்
, புது தில்லி
அமைப்பு தலைமை
வலைத்தளம்mca.gov.in

நிர்வாகம்

இந்த அமைச்சகம் கீழ்வரும் சட்டங்களின் செயலாக்கத்தை நிர்வகிக்கிறது:

  • இந்திய நிறுமங்கள் சட்டம், 2013
  • இந்திய நிறுமங்கள் சட்டம், 1956
  • போட்டிச் சட்டம், 2002
  • ஓராண்மை மற்றும் கட்டுற்ற வணிக முறைகள் சட்டம் 1969
  • பட்டயக் கணக்காளர் சட்டம், 1949 [பட்டயக் கணக்காளர் (திருத்தம்) சட்டம், 2006இன்படி திருத்தப்பட்ட]
  • நிறுமச் செயலர் சட்டம், 1980 [நிறுமச் செயலர் (திருத்தம்) சட்டம், 2006இன்படி திருத்தப்பட்ட]
  • ஆக்கச்செலவும் பணிகளும் கணக்காளர் சட்டம்,1959 [ஆக்கச்செலவும் பணிகளும் கணக்காளர் (திருத்தம்) சட்டம் 2006இன்படி திருத்தப்பட்ட]
  • நிறுவனங்கள் (தேசியக் கொடை) நிதியம் சட்டம் 1951
  • இந்தியகூட்டாண்மைச் சட்டம், 1932
  • சங்கங்கள் பதிவு சட்டம் 1860
  • நிறுமங்கள் திருத்தச் சட்டம், 2006
  • வரையறுக்கப்பட்ட பொறுப்பு கூட்டாண்மைச் சட்டம், 2008

ஆகத்து 2013-இல் இந்திய நிறுமங்கள் சட்டம், 2013 நிறைவேற்றப்பட்டது. இது பெருநிறுவனங்கள் ஈடுபடும் ஏமாற்றுக்களை கட்டுப்படுத்தும். இந்தியாவில் நிகழ்ந்த சத்தியம் நிறுவன ஊழல் போன்ற கணக்கு மரபு நயக்கேடுகளைத் தவிர்ப்பது இதன் நோக்கமாகும்.[1] இது 21-ஆவது நூற்றாண்டுப் பிரச்சினைகளை எதிர்கொள்ளவியலாத 1956-இன் நிறுமங்கள் சட்டத்திற்கு மாற்றாக அமையும்.[2]

இதனையும் காண்க

மேற்சான்றுகள்

வெளி இணைப்புகள்


🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்