பெருநாரை

பெருநாரை
குப்பை மேட்டில் ஒரு பெருநாரை
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
Ciconiiformes
குடும்பம்:
Ciconiidae
பேரினம்:
Leptoptilos
இனம்:
L. dubius
இருசொற் பெயரீடு
Leptoptilos dubius
(Gmelin, 1789)
  Breeding range
  Resident non-breeding range
  Seasonal non-breeding range
வேறு பெயர்கள்

Leptoptilus argala
Ardea dubia
Leptoptilus giganteus
Argala migratoria[2]

பெருநாரை[3] (Greater Adjutant, Leptoptilos dubius) என்பது பெயருக்கு ஏற்றபடியே நாரைக் குடும்பத்தைச் சேர்ந்த பெரிய பறவையாகும். இவை ஒரு காலத்தில் தெற்காசியா முழுவதும் (குறிப்பாக இந்தியாவில்) பரவலாக காணப்பட்டன. ஆனால், தற்போது இந்தியாவின் கிழக்கிலிருந்து போர்னியோ வரை காணப்படுகின்றன. இவை இந்தியாவில் குறிப்பிடும்படியாக அசாத்தில் காணப்படுகின்றன. இவற்றின் அலகுகள் மஞ்சள் நிறத்தில் ஆப்புப் போன்ற நான்குபக்க வடிவில் இருக்கும். இதன் நெஞ்சில் ஒரு தனித்துவமான செந்நிறப் பை தனித்த அடையாளமாக உள்ளது. இந்தப் பை மூச்சுடன் சம்பந்தப்பட்ட காற்றுப்பையாகும். இவை சிலசமயம் இறந்த விலங்குகளை உண்ணும் கழுகுகளுடன் இணைந்து உணவு உண்ணும். இவை தரையில் நடக்கும் போது சிப்பாய் போல மிடுக்குடன் நடக்கும்.

விளக்கம்

இப்பறவைகள் 145-150 செ. மீ. (57-60 அங்குலம்) உயரம் உள்ளவை. சராசரி நீளம் 136 செ.மீ (54 அங்குலம்) ஆகும். இறகு விரிந்த நிலையில் 250 செ. மீ. (99 அங்குலம்) அகலம் இருக்கும். சிவப்பு நிறமுள்ள கழுத்தும் முடிகளற்ற, செந்நிறத் தலையும் கொண்ட இவற்றின் மேற்புறம் அழுக்குக் கருப்பு நிறத்திலும் கீழ்புறம் அழுக்கு வெள்ளை நிறத்திலும் இருக்கும். இதனுடைய கூடுகளை உயர்ந்த பாறை இடுக்குகளிலோ உயர்ந்த மரங்களின் மீதோ கட்டும்.

மேற்கோள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=பெருநாரை&oldid=3477154" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்