பெடிடே
பெடிடே | |
---|---|
பேடிசு பேடிசு | |
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | அனாபேன்டிபார்மிசு |
குடும்பம்: | பெடிடே பார்லவ், லியெம் & விக்லெர், 1968 |
பேரினம்[1] | |
|
பெடிடே (Badidae)(பச்சோந்தி மீன்கள்) என்பது சுமார் 30 சிற்றினங்களைக் கொண்ட மீன் குடும்பம் ஆகும். இது அனபான்டிபார்மிசு வரிசையில் வைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், உலகில் உள்ள மீன்கள் நூலின் 5வது பதிப்பு, இந்த மீனைப் பெயரிடப்படாத மற்றும் தரவரிசைப்படுத்தப்படாத ஆனால் ஒற்றைத்தொகுதி மரபு உயிரினக் கிளையில் உள்ள நாண்டைடே மற்றும் பிரிஸ்டோலெபிடிடே ஆகியவற்றுடன் சேர்த்து அனபான்டிபார்மிசின் சகோதர குடும்பமாக வகைப்படுத்துகிறது. இது பரந்த பெர்கோமார்பாவில் உள்ள ஓவலன்டேரியாவின் சகோதர குழுவாகும்.[2] இந்தக் குடும்பத்தைச் சேர்ந்த மீன்கள் வங்காளதேசம், பூட்டான், சீனா, இந்தியா, லாவோஸ், மியான்மர், நேபாளம், பாக்கித்தான் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளில் காணப்படுகின்றன.[3][4] இவை சிறிய வகை நன்னீரில் வாழும் மீன்கள் ஆகும். இவை 7.5 cm (3 அங்) வரை உடல் நீளத்தை அடையக்கூடியன. இவற்றில் பெரியது பெடிசு அசாமென்சிசு[5] சிறியது, டேரியோ டாரியோ (2 cm (0.8 அங்).[6]