பூவெல்லாம் உன் வாசம்

எழில் இயக்கத்தில் 2001 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

பூவெல்லாம் உன் வாசம் (Poovellam Un Vaasam) 2001ல் வெளிவந்த தமிழ்த் திரைப்படம். இந்தப் படத்தில் கதாநாயகனாக அஜித் குமாரும், கதாநாயகியாக ஜோதிகாவும் நடித்துள்ளனர். எழில் இயக்கிய இந்தத் திரைப்படத்திற்கு வித்யாசாகர் இசையமைத்துள்ளார். இந்தத் திரைப்படத்தில் முன்னாள் உலக அழகி யுக்தாமுகியும் நடித்திருந்தார். சிறந்த நடிகைக்கான சினிமா எக்சுப்ரசு விருது ஜோதிகாவுக்கு கிடைத்தது.[1][2]

பூவெல்லாம் உன் வாசம்
இயக்கம்எழில்
தயாரிப்புஆஸ்கர் பிலிம்ஸ்
கதைஎழில்
இசைவித்யாசாகர்
நடிப்புஅஜித் குமார்
ஜோதிகா
நாகேஷ்
சிவகுமார்
விவேக்
சுகுமாரி
யுக்தாமுகி
கோவை சரளா
வி. எஸ். ராகவன்
வெளியீடு17 ஆகஸ்ட் 2001
நாடு இந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்

தயாரிப்பு

அஜித் குமார் பிரவீன்காந்தின் ஸ்டார் திரைப்படத்தில் இருந்து விலகியதும் இந்த திரைப்படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார்.[3] இத்திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்க சிம்ரன், ஜஸ்வர்யா ராய், பிரீத்தி சிந்தா போன்ற நடிகைகள் மறுத்துவிடவே இப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு நடிகை ஜோதிகாவிடம் சென்றது.[4] முன்னால் உலக அழகியான நடிகை யுக்தாமுகியும் இப்படத்தில் சிறப்புத் தோற்றத்தில் தோன்றினார்.[5] இத்திரைப்படத்தில் நடிப்பதற்கு முன்பாகவே அஜித் குமார் ஒரு அதிரடி நடிகராக புகழ் பெற்றுவிட்டதால், அஜித் போன்ற அதிரடி நாயகனுக்கு இப்படிப்பட்ட குடும்பக் கதாபாத்திரத்தில் நடிப்பது ஒத்துவருமா என இப்படத்தின் தயாரிப்பாளர் ரவிச்சந்திரன் இயக்குநர் எழிலிடம் கேட்டார். அதற்கு எழில் அஜித் எப்படிப்பட்ட கதாபாத்திரத்திலும் சிறப்பாக நடிக்கும் திறமை பெற்றவர் எனக் குறிப்பிடுகிறார்.[6]

கதைக்கு தேவையான இரட்டை பங்களாக்களை இயக்குநர் எழில் வேறு எங்கும் கண்டுபிடிக்க முடியாததால் அப்படிபட்ட இரட்டை பங்களாக்கள் கலை இயக்குனர் பிரபாகரனால் பிரசாத் ஸ்டுடியோவில் தற்காலிகமாக உருவாக்கப்பட்டன.[7][8][9] இப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது அஜித்துக்கு சென்னை நகர மருத்துவமனையில் முதுகெலும்பு அறுவை சிகிச்சை நடந்ததால் இப்படத்தின் வெளியீடு ஒருமாதம் தாமதமானது.[10]

பாடல்கள்

வித்யாசாகர் இசையமைத்த இத்திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்களைக் கவிஞர் வைரமுத்து எழுதியிருந்தார்.

எண்பாடல்பாடலாசிரியர்பாடகர்(கள்)
1காதல் வந்ததும்வைரமுத்துகே. ஜே. யேசுதாஸ், சாதனா சர்கம்
2புதுமலர் தொட்டுச் செல்லும்ஸ்ரீராம் பார்த்தசாரதி
3திருமண மலர்கள் தருவாயாசுவர்ணலதா
4தாலாட்டும் காற்றே வாசங்கர் மகாதேவன்
5செல்லா நம் வீட்டுக்குசுஜாதா மோகன், மலேசியா வாசுதேவன், ஹரிஷ் ராகவேந்திரா
6யுக்தாமுகிதேவன் ஏகாம்பரம், கிளிண்டன் ஸ்ரீஜோ

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்