புல்புல் சக்கரவர்த்தி

புல்புல் சக்ரவர்த்தி (Bulbul Chakraborty) பிராண்டீஸ பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஆவார். இவர் குருணை போன்று காட்சியளிக்கும் பொருள்கள், சீருறாத் திண்மம், மற்றும் புள்ளியியல் இயற்பியல் போன்ற துறைகளில் சமநிலைக்குத் தொலைவில் உள்ள மென் சுருங்கு பொருள் பற்றிய ஆய்வுகளுக்காக நன்கு அறியப்படுகிறார். இவர் அமெரிக்க இயற்பியல் கழகம் மற்றும் அமெரிக்க அறிவியல் மேம்பாட்டுக் கழகம் ஆகியவற்றின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினரும் ஆவார்.

புல்புல் சக்கரவர்த்தி
துறைசுருங்கிய பொருள் இயற்பியல்
மென்மையான பொருட்கள்
பணியிடங்கள்பிராண்டீஸ் பல்கலைக்கழகம்
கல்வி கற்ற இடங்கள்இந்திய தொழில்நுட்பக் கழகங்கள்
நியூ யார்க் அரசுப் பல்கலைக்கழகம்
விருதுகள்அமெரிக்க அறிவியல் மேம்பாட்டு கழகத்தின் உறுப்பினர் (2020)
கருத்தியல் இயற்பியலின் சைமன்ஸ் உறுப்பினர்(2018)
அமெரிக்க இயற்பியல் கழகத்தின் உறுப்பினர்(2008)

கல்வி வாழ்க்கை

1974 ஆம் ஆண்டு கரக்பூர், இந்தியத் தொழல்நுட்பக் கழகத்தில் சக்கரவர்த்தி தனது இளங்கலை இயற்பியல் பட்டத்தைப் பெற்றார். இவர் 1979 ஆம் ஆண்டில் ஸ்டோனி புரூக்கில் உள்ள நியூயார்க் ஸ்டேட் பல்கலைக்கழகத்தில் தனது ஆராய்ச்சிக்கான முனைவர் பட்டத்தைப் பெற்றார். இவரது ஆராய்ச்சிப் பட்டத் தலைப்பானது “திண்மங்களின் மின்னணுவியல் பண்புகளில் வெப்ப ஒழுங்கின்மையின் தாக்கம்” என்பதாகும்.[1] இவர் ஆர்கோன் தேசிய ஆய்வகத்தில் தனது முனைவர் பட்ட ஆய்விற்குப் பிந்தைய ஆய்வினை மேற்கொண்டார். NORDITA, Denmark மேலும், இவர் இந்திய அறிவியல் நிறுவனத்தின் இணை ஆராய்ச்சியாளரகாவும் பணிபுரிந்தார். இவர் 1984-1986 காலகட்டத்தில் இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தின் பொருள் அறிவியல் ஆராய்ச்சிக்கூடத்தில் அறிவியல் அலுவலராகப் (உதவிப் பேராசிரியர் நிலை) பணியாற்றினார். 1987-1989 முடிய உள்ள காலகட்டத்தில் யேல் பல்கலைக்கழகத்தில் பயன்பாட்டு இயற்பியலில் இணை ஆராய்ச்சி இயற்பியலாளர் மற்றும் விரிவுரையாளராகப் பணியாற்றினார். 1989 ஆம் ஆண்டில், சக்கரவர்த்தி பிராண்டீஸ் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் துணையில் கல்வியாளராகச் சேர்ந்தார். இங்கு இவர் 2000 ஆண்டிலிருந்து முழுநேரப் பேராசிரியராகப் பணியாற்றினார்.[2]

ஆய்வுப் பங்களிப்புகள்

சக்கரவர்த்தி சீருறாத் திண்மங்களின் மாற்றங்களில் ஏற்படும் தேக்கநிலையைப் புரிந்து கொள்வதில் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்துள்ளார். இவரது ஆய்வுக்குழு நறுக்குவதற்கு இயலா கெட்டிப்பட்ட மற்றும் அடர்த்தியாக இறுக்கப்பட்ட துகள் பொருள்களின் பண்புகளைப் புலனறிய புள்ளியியல் மாதிரி வடிவமைப்புகளைப் பயன்படுத்தினர்.[3][4] [5][6][7]

இவ்வாறான ஆய்வுகளின் போது இவர் ஒழுங்கற்ற அமைப்புகளில் வெப்ப விளைவில்லா ஏற்ற இறக்கங்களின் போது மீட்சித்தன்மை மற்றும் உராய்வுகள் எவ்வாறு ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டுள்ளன என்பதைக் கண்டறிந்தார்.[8] இவரது வழிகாட்டுதலில் பல மாணவர்கள் முனைவர் பட்ட ஆராய்ச்சி மற்றும் முனைவர் பட்டத்திற்குப் பிந்தைய ஆய்வுகளில் ஈடுபட்டுள்ளனர். இவரது தற்போதைய ஆய்வுகள் குருணை போன்று காட்சியளிக்கும் பொருள்கள் வெளிப்புற அழுத்தத்திற்காற்றும் எதிர்வினைகள் குறித்து கவனம் செலுத்துகின்றன.[9]

கூகுள் ஸ்காலரின் தரவின் படி இவரது வெளியீடுகள் 4000 முறை மேற்கோளிடப்பட்டுள்ளன. இவரது எச்-குறியீட்டெண் 34 ஆக உள்ளதெனத் தெரிவிக்கிறது.[10]

விருதுகள் மற்றும் கௌரவங்கள்

சக்கரவர்த்தி பிராண்டீஸ் பல்கலைக்கழகத்தில் எனிட் அண்ட் நேட் ஆன்செல் இயற்பியல் பேராசிரியர் ஆவார்.[11] இவர் சுருங்கிய பொருள் இயற்பியலில், தடுமாறும் காந்தங்கள், உலோகங்களில் ஒளித்துகள்களின் விரவல், கண்ணாடியில் மாற்றம், குருணை போன்ற பொருள்களில் இயக்கத்தடை போன்றவை உட்பட பல்வேறுபட்ட கருப்பொருள்களில் இவரது கருத்தியல் பங்களிப்புகளுக்காக அமெரிக்க இயற்பியல் கழகத்தின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[12] 2018 ஆம் ஆண்டில் சைமன்ஸ் அமைப்பு சக்கரவர்த்திக்கு சைமன்ஸ் உறுப்பினர் நிலைத் தகுதியை கருத்தியல் இயற்பியலில் இவரது பங்களிப்பிற்காக வழங்கி கௌரவித்தது.[13][14]சக்கரவர்த்தி அமெரிக்க அறிவியல் மேம்பாடு கழகத்தின் உறுப்பினராக 2020 ஆம் ஆண்டில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[15]

மேற்கோள்கள்

🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்