புனித லாரன்சு வளைகுடா

புனித லாரன்சு வளைகுடா(The Gulf of Saint Lawrence (French: Golfe du Saint-Laurent) அமெரிக்கப் பேரேரிகளின் நீரை புனித லாரன்சு ஆற்றின் வழியாக அத்திலாந்திக்கு பெருங்கடலுடன் கலக்கின்ற வளைகுடாவாக இருக்கிறது. இந்த வளைகுடாவானது பகுதி மூடப்பட்ட பகுதியாக உள்ளது. இந்த வளைகுடா பகுதியானது 226000 சதுர கிலோமீட்டர்  (87000 சதுர மைல்கள்) பரப்பளவை உடையதாகவும் மற்றும் 34500 கன கிலோமீட்டர்கள் (8300 கன மைல்கள்) நீரைக் கொண்டதாகவும் இதன் விளைவாக சராசரியாக 152 மீட்டர் (499 அடி) ஆழமுடையதாகவும் உள்ளது.[1]

கனடா நில வரைபடத்தில் புனித லாரன்சு வளைகுடா.

புவியியல்

நோவா ஸ்கோசியாவில் உள்ள பிளசண்ட் குடா கடற்கரை

புனித லாரன்சு வளைகுடாவானது வடக்கில் லாப்ரடார் மூவலந்தீவு மற்றும் கியூபெக் கிழக்கில் புனித பியரி நியூ பவுண்ட்லாந்திலும், தெற்கில் நோவா ஸ்காேசியா மூவலந்தீவு மற்றும் கேப பிரேடன் தீவு மற்றும் மேற்கில் காஸ்பே மூவலந்தீவு, நியூ பிருன்ஸ்விக் மற்றும் கியூபெக் ஆகியவற்றால் சூழப்பட்டுள்ளது. புனித லாரன்சு வளைகுடாவைப் பொறுத்த வரை, ஆண்டிகோஸ்டி தீவு, பி.இ.ஐ (PEI), மேக்டேலன் தீவுகள், கேப் பிரேடன் தீவு, புனித பியரி தீவு, மற்றும் மிக்யுலான்-லாங்லேடு தீவு ஆகிய குறிப்பிடத்தக்க தீவுகள் உள்ளன.

கனடாவின் பாதிக்கும் மேற்பட்ட மாகாணங்கள் இந்த வளைகுடாவுடன் இணைந்துள்ளன: நியூ பிருன்ஸ்விக், நோவா ஸ்கோசியா, இளவரசர் எட்வர்டு தீவு, (நியூ பவுண்ட்லாந்து மற்றும் லாப்ரடார்), மற்றும் கியூபெக்.

புனித லாரன்சு ஆற்றையும் தவிர, குறிப்பிடத்தக்க நதிகள் இந்த புனித லாரன்சு வளைகுடாவில் கடலுடன் சங்கமிக்கின்றன. அவற்றில் மிராமிச்சி ஆறு, நாடாஸ்குவான் ஆறு, ரோமைன் ஆறு, ரெஸ்டிகெளச் ஆறு, மார்கரி ஆறு, மற்றும் அம்பெர் ஆறு ஆகியவை அடங்கும்.

இந்த வளைகுடாவானது சாலியர் குடா, ஃபார்ச்சூன் குடா, மிராமிச்சி குடா, புனித ஜார்ஜ் குடா,(நோவா ஸ்கோசியா),புனித ஜார்ஜ் குடா (நியூபவுண்ட்லாந்து மற்றும் லாப்ரடார்), தீவுகளின் குடா, மற்றும் நார்தம்பெர்லாந்து நீரிணை ஆகியவற்றையும் உள்ளடக்கியது.

புற வழிகள்

இந்த வளைகுடாவானது அத்திலாந்திக்கு பெருங்கடலில் பின்வரும் வழிகள் வாயிலாக இணைகிறது:

  • லாப்ரடார் மற்றும் நியூபவுண்ட்லாந்து இவற்றுக்கிடையேயான பெல்லே தீவு நீரிணை: 15 கி.மீ (9.3 மைல்கள்) நீளம் மற்றும் 60 கி.மீ (37 மைல்கள்) இவற்றுக்கிடைப்பட்ட அகலம் - 60 மீ (200 அடி) ஆழம் (அதிக ஆழமுள்ள பகுதி)
  • நியூபவுண்ட்லாந்து மற்றம் புனித பியரி மிக்யுலன் மற்றும் கேப் பிரேடன் தீவு ஆகியவற்றுக்கிடையேயான காபோட் நீரிணை:104 கி.மீ (65 மைல்கள்) அகலம் - 480 மீ (1570 அடி) ஆழம் (அதிக ஆழமுள்ள பகுதி)
  • கேப் பிரேடன் தீவு மற்றும் நோவா ஸ்கோசியா மூவலந்தீவு ஆகியவற்றுக்கிடையேயான கேன்சோ நீரிணை: 1 கி.மீ (0.6 மைல் அகலம் மற்றும் 60 மீ (200 அடி) ஆழம் (அதிக ஆழமுள்ள பகுதி).

1955 ஆம் ஆண்டில் நீரிணையின் குறுக்காக கேன்சோ காஸ்வே கட்டப்பட்டதன காரணமாக அதற்குப் பிறகு புனித லாரன்சு வளைகுடா மற்றும் அத்திலாந்திக்குப் பெருங்கடல் இவற்றுக்கிடையே நீர் பரிமாற்றம் தடுக்கப்பட்டுள்ளது.

கலாச்சார முக்கியத்துவம்

இந்த வளைகுடாவானது, பல நூறு ஆண்டுகளாக இதன் கரையோரம் வாழ்ந்த மக்களுக்கும், அருகமை மாகாணங்களுக்கும் மீன்பிடித் தளமாகவும், நீர் வழிப் போக்குவரத்துப் பாதையாகவும் பயன்பட்டு வந்துள்ள சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இடமாக உள்ளது. இந்த வளைகுடாப் பகுதியின் முதல் ஆவணப்படுத்தப்பட்ட ஐரோப்பியர் ஒருவரின் கடற்பயணமானது, பிரஞ்சு ஆராய்ச்சியாளர், ஜாக் கார்டியரால் 1534 ஆம் ஆண்டில் எழுதப்பட்ட நூலாகும். கார்டியர் புனித லாரன்சு ஆற்றின் கரையோரத்தை கனடியர்களின் நாடு என்று குறிப்பிடுகிறார். கனடா என்ற வார்த்தை மரபு வழி மக்களின் கிராமம் அல்லது குடியிருப்பு என்ற பொருளைத் தருகிறது.[2] அதே காலகட்டத்தில், பாஸ்க் இன மக்கள் இங்கு அடிக்கடி திமிங்கல வேட்டை மற்றும் இங்கிருந்த முதல் தேசத்தின் மக்களான நவீன கனடிய அத்திலாந்திக்கு மற்றும் கியூபெக் மாகாண மக்களுடன் வியாபாரம் செய்தல் ஆகிய நோக்கங்களுக்காக வந்து சென்றுள்ளனர். அவர்கள் தங்களின் வருகையினை மற்றோர் உணர்ந்து கொள்ளும் விதமாக பல பகுதிகளில் (கப்பல் தளங்கள், உலைகள், புதைகுழிகள் போன்றவை) தங்கள் எச்சத்தை விட்டுச்சென்றுள்ளனர்.

மேற்கோள்கள்

🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்