புனித பேட்ரிக்கின் நாள்

புனித பேட்ரிக்கின் நாள் (Saint Patrick's Day) அல்லது புனித பேட்ரிக்கின் விழா (Feast of Saint Patrick, ஐரிய மொழி: Lá Fhéile Pádraig) என்பது ஆண்டுதோறும் மார்ச் 17 அன்று கொண்டாடப்படும் கத்தோலிக்க சமய மற்றும் கலாச்சார விடுமுறை நாள் ஆகும். அயர்லாந்தின் பாதுகாவலரான புனித பேட்ரிக்கின் (அண். கிபி 385–461) இறப்பை நினைவு கூரவும், அயர்லாந்தில் கிறித்துவத்தின் வருகையை நினைவுகூரவும்[3] ஐரிய மக்களின் கலாச்சாரம் மற்றும் பண்பாட்டை சிறப்பிக்கவும்[4] இவ்விழா கொண்டாடப்படுகின்றது.

புனித பேட்ரிக்கின் நாள்
புனித பேட்ரிக்கின் உருவம் பொறிக்கப்பட்ட ஆலய கண்ணாடி, புனித பெனின் ஆலயம், அயர்லாந்து
அதிகாரப்பூர்வ பெயர்புனித பேட்ரிக்கின் நாள்
பிற பெயர்(கள்)புனித பேட்ரிக்கின் விழா
பேட்ரிக்கின் நாள்[1][2]
கடைபிடிப்போர்ஐரிய மக்கள் மற்றும் ஐரிய பூர்வீகம் உடையோர்,
கத்தோலிக்க திருச்சபை, ஆங்கிலிக்க ஒன்றியம், கிழக்கு மரபுவழி திருச்சபை, லூதரனியம்
வகைகிறித்தவம், கலாச்சாரம், நாடு சார்
முக்கியத்துவம்புனித பேட்ரிக்கின் விழா, அயர்லாந்தில் கிறித்துவத்தின் வருகையை நினைவகூர[3]
கொண்டாட்டங்கள்பேரணிகள், பச்சை நிற உடையணிதல், ஐரிய பியர் அல்லது விஸ்கி அருந்துவது
அனுசரிப்புகள்திருப்பலி அல்லது பிற வழிபாடுகள்
நாள்17 மார்ச்
நிகழ்வுஆண்டுதோறும்

புனித பேட்ரிக்கின் நாள் ஒரு கிறித்தவ விழா நாளாக 17ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் கொண்டாடப்பட்டது. இது தற்போது கத்தோலிக்க திருச்சபை, ஆங்கிலிக்க ஒன்றியம் (குறிப்பாக அயர்லாந்து திருச்சபை),[5] கிழக்கு மரபுவழி திருச்சபை மற்றும் லூதரனியம் ஆகிய சபைகளில் கொண்டாடப்படுகின்றது.

இந்நாளில் பொதுவாக பேரணியில் செல்வது, ஐரிய மக்களின் மரபு இசை, நடனம், பச்சை நிற உடைகள் அணிவது வழக்கமாகும்.[6] கிறித்தவர்கள் ஆலய வழிபாட்டில் பங்கேற்பர்.[4][7] இவ்விழா பொதுவாக தவக் காலத்தில் நிகழ்வதாலும், இவ்விழாவன்று நோன்புக்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதாலும் இந்த நாள் மது அருந்துவதோடு அதிகம் தொடர்புபடுத்தப்பட்டது.[4][6][8][9]

அயர்லாந்து குடியரசு,[10] வட அயர்லாந்து,[11] நியூஃபவுன்லாந்து மற்றும் லாப்ரடோர் மற்றும் மொன்செராட் ஆகிய இடங்களில் இது பொது விடுமுறை நாளாகும். அயர்லாந்து மக்கள் அதிகம் வசிக்கும் கனடா, அமெரிக்க ஐக்கிய நாடு, அர்கெந்தீனா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய இடங்களிலும் இது பெருவாரியாகக் கொண்டாடப்படுகின்றது.

உலகெங்கும் கொண்டாட்டங்கள்

அயர்லாந்தில் கொண்டாட்டங்கள்

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்