புத்ததேவ் பட்டாசார்யா

இந்திய அரசியல்வாதி

புத்ததேவ் பட்டாசார்யா (வங்காள மொழி: বুদ্ধদেব ভট্টাচার্য புத்தொதேப் பொட்டாசார்ஜோ) (சிலநேரங்களில் புத்ததேவ் பட்டாசார்ஜி ; Buddhadeb Bhattacharjee) (பிறப்பு: மார்ச்சு 1, 1944) ஓர் இந்தியபொதுவுடமை அரசியல்வாதி. நவம்பர் 6, 2000 முதல் மே 18, 2011 வரை மேற்கு வங்காள முதலமைச்சராகப் பணியாற்றினார். சி.பி.எம் கட்சியின் பொலிட்பீரோ உறுப்பினராகவும் பங்காற்றி வருகிறார்.

புத்ததேவ் பட்டாசார்யா
বুদ্ধদেব ভট্টাচার্য
2006இல் புத்ததேவ் பட்டாசார்யா
மேற்கு வங்காள முதலமைச்சர்
பதவியில்
6 நவம்பர் 2000–மே 18 2011
முன்னையவர்ஜோதி பாசு
பின்னவர்மம்தா பானர்ஜி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1 மார்ச்சு 1944 (1944-03-01) (அகவை 80)
கொல்கத்தா, பிரித்தானிய இந்தியா
அரசியல் கட்சிஇந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்)
வாழிடம்(s)பாம் அவெனியூ, கொல்கத்தா
இணையத்தளம்www.cpim.org
As of சனவரி 27, 2007
மூலம்: [1]

இளமையும் கல்வியும்

1944ஆம் ஆண்டு கொல்கத்தாவில் ஓர் பெருமை வாய்ந்த குடும்பத்தில் பிறந்தார். புகழ்பெற்ற புரட்சிக்கவி சுகந்தா பட்டாசார்யா இவரது தந்தையின் ஒன்றுவிட்ட சகோதரர்.துவக்கக் கல்வியை சைலேந்திர சர்க்கார் வித்தியாலயாவில் பெற்றார்.[1] கொல்கத்தாவின் பிரெசிடென்சி கல்லூரியில் வங்காள இலக்கியம் பயின்று இளங்கலைப் பட்டம் பெற்றவர்.[2]

அரசியல் வாழ்வு

1964ஆம் ஆண்டு தமது பட்டப்படிப்பை முடித்தவுடன் அரசியலில் சிபிஎம் முதன்மை உறுப்பினராக நுழைந்தார்.விரைவிலேயே சனநாயக இளைஞர் கூட்டமைப்பின் மாநில செயலராக நியமிக்கப்பட்டார். 1977ஆம் ஆண்டு மாநிலச் சட்டப் பேரவைத் தேர்தல்களில் காசிப்பூர் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். அம்முறை முதன்முறையாக இடதுசாரி அமைச்சு மாநிலத்தில் பொறுப்பேற்றது. இவ்வமைச்சில் தகவல் மற்றும் பண்பாட்டுத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றார். வங்காள இலக்கிய மேம்பாட்டிற்கு சிறப்பாகப் பணியாற்றினார்.1982ஆம் ஆண்டு தேர்தலில் காசிப்பூர் தொகுதியில் தோல்விகண்டபின் 1987ஆம் ஆண்டு ஜாதவ்பூர் தொகுதிக்கு மாறி அங்கு வெற்றி கண்டார்.

விருது

  • பத்ம பூசண் விருது (2022)[3]
முன்னர்மேற்கு வங்கமுதலமைச்சர்
2000 - 2011
பின்னர்

மேற்கோள்

🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்