பி. இராச்சையா

இந்திய அரசியல்வாதி

பசவையா இராச்சையா (Basavayya Rachaiah) (10 ஆகஸ்ட் 1922 - 14 பிப்ரவரி 2000[3] ) ஓர் இந்திய அரசியல்வாதியாவார். இவர் கர்நாடக சட்டமன்ற உறுப்பினராகவும்[4] [5] கர்நாடகாவிலிருந்து மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்தார்.[6] இவர் 1977இல் கர்நாடகாவின் சாமராஜநகரிலிருந்து மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[7] இவர் கேரளா, இமாச்சல பிரதேசத்தின் ஆளுநராக இருந்தார்.[8] [9] எஸ். நிஜலிங்கப்பா, பசப்பா தனப்பா ஜாட்டி, தேவராஜ் அர்ஸ், வீரேந்திர பாட்டில், இராமகிருஷ்ணா ஹெக்டே, சோ. ரா. பொம்மை ஆகிய முதலைமைச்சர்களின் தலைமையிலான கர்நாடக மாநில அமைச்சரவை உறுப்பினராக இருந்தார்.

பசவையா இராச்சையா
கேரள ஆளுநர்
பதவியில்
20 திசம்பர் 1990 – 9 நவம்பர் 1995
முன்னையவர்சரூப் சிங்
பின்னவர்பி. சிவ சங்கர்
இமாச்சலப் பிரதேசத்தின் 6வது ஆளுநர்
பதவியில்
16 பிப்ரவரி 1990 – 19 திசம்பர் 1990
முன்னையவர்எச். ஏ. பிராரி
(கூடுதல் பொறுப்பு)
பின்னவர்வீரேந்திர வர்மா
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை
பதவியில்
1977–1980
முன்னையவர்எஸ். எம். சித்தையா
பின்னவர்சிறீநிவாச பிரசாத்
தொகுதிசாமராஜநகர், கருநாடகம்
நாடாளுமன்ற உறுப்பினர், மாநிலங்களவை
பதவியில்
1974–1977 [1]
தொகுதிகருநாடகம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1922-08-10)10 ஆகத்து 1922
ஆலுர், சாமராசநகர் மாவட்டம், பிரித்தானிய இந்தியா
இறப்பு14 பெப்ரவரி 2000(2000-02-14) (அகவை 77)[2]
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு, ஜனதா தளம்
மூலம்: [1]

இராச்சையா 1922இல் சாமராசநகரில் பிறந்தார். இவர், தொழிலில் வழக்கறிஞராக இருந்தார். இவருடைய மருமகன்களில் ஒருவரான பி. பி. நிங்கையா, ஜே. ஹெச். படேல் தலைமையிலான அரசாங்கத்தில் அமைச்சராக இருந்தார். இராச்சையா 2000 இல் தனது 77 வயதில் இறந்தார்.[10]

மரபு

சாயாஜி ராவ் சாலை மைசூரில் பி ராச்சய்யா வட்டம்

மாநிலத்திற்கு இவர் ஆற்றிய சேவைகளுக்காக, மைசூரில் சாயாஜிராவ் சாலையில் உள்ள ஒரு சாலைக்கு இராச்சையாவின் பெயரிடப்பட்டது.

இதையும் பார்க்கவும்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=பி._இராச்சையா&oldid=3235527" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்