பிளைத் நாணல் கதிர்க்குருவி

பிளைத் நாணல் கதிர்க்குருவி (Acrocephalus dumetorum) அல்லது வேலி கதிர்க்குருவி[2], ஐரோப்பா, மத்திய ஆசியா, இந்தியத் துணைக்கண்டம் ஆகிய பகுதிகளில் காணப்படும் ஒரு வகை நாணல் கதிர்குருவி ஆகும். சிட்டுக்குருவியை விட அளவில் சிறிய (நீளம் 14 cm) குருவியான இது ரஷ்யா, ஸ்கான்டினாவியா உள்ளிட்ட ஐரோப்பியப் பகுதிகளிலும் வடக்கு ஈரான், பாகிஸ்தானின் குவெட்டா மாகாணம் ஆகிய பகுதிகளில் இனப்பெருக்கம் செய்து[3] வலசை போகும் காலத்தில் கிட்டத்தட்ட அனைத்து குருவிகளும் இந்தியா, வங்கதேசம் மற்றும் இலங்கையில் காணப்படுகின்றன.

பிளித் நாணல் கதிர்குருவி
கொல்கத்தாவில்
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வரிசை:
குடும்பம்:
அக்ரோசெபாலிடே
பேரினம்:
அக்ரோசெபாலசு
இனம்:
A. dumetorum
இருசொற் பெயரீடு
Acrocephalus dumetorum
பிளைத், 1849

பொது இயல்புகள்

நாணல் கதிர்க்குருவி என்ற பெயரைப் பெற்றிருந்தாலும் இது பெரும்பாலும் நாணல்களில் காணப்படுவதில்லை; மாறாக, நீர்நிலைகளை விட்டு தொலைவில் புதர்கள் அதிகம் உள்ள இடங்களில் காணப்படும். பார்ப்பதற்கு இவை இடுனா பேரினக் கதிர்குருவிகளில் இடுனா ரமா -வைப் போல் இருக்கும். ஆனால் இவற்றின் குணமான, மரங்களின் மத்தியிலும் உச்சியிலும் காணப்படும் தன்மை பிளைத் நாணல் குருவிகளிடம் இல்லை; மாறாக இவை பெரும்பாலும் புதர்களின் அடிப்பகுதியிலும் தரையிலும் இருக்கும் தன்மை உடையன.[1]

பரவலும் வாழிடமும்

பரவல்

ஐரோப்பா: கிழக்கில் உருசியா, வடக்கில் பின்லாந்து வரையிலும் மேற்கே ஐசுலாந்து வரையிலும் தெற்கே அவுஸ்திரியா வரையிலும்,

ஆசியா: தெற்கில் பாக்கித்தான் வரையிலும் மத்தியில் கசகஸ்தான் தஜிகிஸ்தான் உள்ளிட்ட பகுதிகளிலும் கிழக்கே மங்கோலியா வரையிலும் இது காணப்படுகிறது.

வலசை போகும் இடங்கள்: பெரும்பாலும் இந்தியத் துணைக்கண்டம் மற்றும் மயன்மார்.

வாழிடம்

சமவெளிப் பகுதிகள், மலைப் பகுதிகளில் 2100 மீ வரையிலும்

இனங்காண உதவும் குறிப்புகள்

உருவம்

மேல்பகுதி:ஆலிவ் பச்சை கலந்த பழுப்பு நிறம்

புருவம் (அல்லது புருவமேலம்): கண்ணிற்கு முன் பகுதியில் மட்டும் தெளிவாக இருக்கும்

அடிப்பகுதி: வெண்ணிற தொண்டையும் பிற பகுதிகள் வெளிர் மஞ்சள் நிறமும் கொண்டது

பாலின வேறுபாடு: இல்லை

மேற்கோள்கள்

🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்