பில்போ பாக்கின்சு

பில்போ பாக்கின்சு (ஆங்கில மொழி: Bilbo Baggins) என்பவர் ஆங்கில எழுத்தாளர் ஜே. ஆர். ஆர். டோல்கீன் என்பவரால் உருவாக்கப்பட்ட ஒரு கனவுருப்புனைவு கதாபாத்திரம் ஆகும். இந்த கதாபாத்திரம் 1937 ஆம் ஆண்டு வெளியான புதின புத்தகமான த காபிட்டில் தலைப்புக் கதாபாத்திரமாகவும் மற்றும் த லோட் ஒவ் த ரிங்ஸில் துணைக் கதாபாத்திரமாகவும் தோற்றுவிக்கப்பட்டார்.

பில்போ பாக்கின்சு
த காபிட்டு, த லோட் ஒவ் த ரிங்ஸ், பில்போ'ஸ் லாஸ்டு சோங் கதை மாந்தர்
தகவல்
குடும்பம்பெல்லடோனா டுக் (தாய்)
பங்கோ பாக்கின்சு (தந்தை)
ஜெரோன்டியஸ் 'த ஓல்ட்' டுக் (தாத்தா)
புரோடோ பாக்கின்சு (உறவினர்)

இவர் சிமாக்கு என்ற இடிராகனால் கைப்பற்றப்பட்ட அவர்களின் மூதாதையர் வீடு மற்றும் புதையலை மீட்டெடுக்க தோரின் மற்றும் அவரது குழுவான டோவ் ஆகியோருக்கு உதவுவதற்காக ஹொபிட் மற்றும் மந்திரவாதி காண்டால்ப்பு என்பவரால் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் ஆரம்பத்தில் த காபிட்டில் பயமுறுத்தும் மற்றும் அன்பான நபராக சித்தரிக்கப்பட்டார், மேலும் அவரது சாகசத் திறன் மூலம் தேடலின் பயனுள்ள மற்றும் வளமான உறுப்பினராக வளர்கிறார்.

இவரின் வாழ்க்கை முறை புகையிலை மற்றும் தபால் சேவை போன்ற அம்சங்களால் வரையறுக்கப்பட்டது, இது விக்டோரியா காலம் முதல் எட்வர்டியன் காலகட்டங்களில் இருந்த ஆங்கில நடுத்தர வர்க்கத்தை நினைவுபடுத்துகிறது. இது குள்ளர்கள் மற்றும் குட்டிச்சாத்தான்களின் பழைய உலகத்துடன் ஒத்துப்போகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த கதாபாத்திரம் பல வானொலி மற்றும் திரைப்படத் தழுவல்களிலும், அவற்றை அடிப்படையாகக் கொண்ட நிகழ்பட ஆட்டங்களிலும் தோன்றினார்.[1] அத்துடன் இந்த கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுக்குக்கும் விதமாக நடிகர் 'இயன் ஹோல்ம்'[2] என்பவர் த லார்டு ஆப் த ரிங்ஸ்: த பெலொசிப் ஆப் த ரிங் (2001), த லார்டு ஆப் த ரிங்ஸ்: த டூ டவர்ஸ் (2002) அன் அன்எக்ஸ்பெக்டட் ஜெர்ன்னி (2012) மற்றும் த பாட்டிலே ஆப் த பைவ் அர்மிசு (2014) போன்ற படங்களிலும், நடிகர் மார்டின் பிறீமன்[3] என்பவர் அன் அன்எக்ஸ்பெக்டட் ஜெர்ன்னி (2012), த டெசோலேசன் ஆப் சிமாக் (2013) மற்றும் த பாட்டிலே ஆப் த பைவ் அர்மிசு (2014) போன்ற திரைப்படங்களிலும் நடித்துள்ளார்கள்.[4] [5]

சான்றுகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=பில்போ_பாக்கின்சு&oldid=3503872" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்