பிலிம்பேர் விருதுகள்

விருது வழங்கும் விழா
(பிலிம்ஃபேர் விருது இலிருந்து வழிமாற்றப்பட்டது)

பிலிம்பேர் விருதுகள் (Filmfare Awards) என்பது 1954 ஆம் ஆண்டு முதல் பிலிம்பேர் என்ற இதழால் இந்தி மொழி திரைப்படத் துறையை சார்ந்த நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களை கௌரவிக்கும் விதமாக வழங்கப்படும் ஒரு பிரபலமான விருது விழா ஆகும்[1][2][3]

பிலிம்பேர் விருதுகள்
தற்போதைய: 65th Filmfare Awards
விருதுக்கான கோப்பை
விளக்கம்திரைப்படத்துறை சாதனையாளர்களை கௌரவிக்கும் விதமாக வழங்கப்படும் விருதுகள்
நாடுஇந்தியா
வழங்குபவர்பிலிம்பேர்
முதலில் வழங்கப்பட்டது21 மார்ச்சு 1954
கடைசியாக வழங்கப்பட்டது15 பெப்ரவரி 2020
இணையதளம்Filmfare
Television/radio coverage
நெட்வொர்க்சோனி தொலைக்காட்சி (2000-2017)
கலர்ஸ் தொலைக்காட்சி
(2018-முதல்)

இது ஆரம்பத்தில் கிளேயார் விருதுகள் என்ற பெயரில் பிலிம்பேர் இதழாசிரியரின் பெயரில் வழங்கப்பட்டு வந்தது. இவ்விருதுகளுக்கான திரைப்படங்களை பொதுமக்களின் வாக்கெடுப்பு, திரைப்பட நிபுணர்களைக் கொண்ட குழுவின் பரிந்துரை ஆகிய இரு முறைகளைக் கொண்டு தேர்ந்தெடுக்கப்படுகின்றன. மொத்தம் 31 விருதுகள் வழங்கப்படுகின்றன. 2000 ஆம் ஆண்டு முதல் விருது வழங்கும் விழாவின் பதிப்பு சோனி என்ற தொலைக்காட்ச்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. அதன் பிறகு 2018 ஆம் ஆண்டு முதல் கலர்ஸ் என்ற தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகின்றது. 65 வது பிலிம்பேர் விருதுகள் நிகழ்வு 2020 பிப்ரவரி 16 ஆம் தேதி குவகாத்தியின் சருசஜாய் ஸ்டேடியத்தில் நடைபெற்றது.[4]

பிலிம்பேர் விருதுகள் பெரும்பாலும் இந்தி திரைப்படத் துறையின் அமெரிக்காவில் உள்ள அகாதமி விருதுகளுக்கு சமமானவை என்று குறிப்பிடப்படுகின்றன. 1990 களின் நடுப்பகுதி வரை, மும்பையில் பல விருதுகள் வழங்கும் வரை பிலிம்பேர் விருதுகள் பாலிவுட்டில் முதன்மையான மற்றும் மிகவும் அங்கீகரிக்கப்பட்ட விருதுகளாக இருந்தன. ஆனால் 2000களில் இருந்து பார்வையாளர்களிடம் மிகமோசமான எதிர்மறை கருத்துக்களை பெற்று வருகின்றது.

இதன் பிரிவாக தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள், பிலிம்பேர் மராத்தி விருதுகள், கிழக்கு பிலிம்பேர் விருதுகள் போன்ற திரைத்துறைகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றது.[5]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்