பிரித்தானிய இந்தியாவின் மத்தியச் சட்டமன்றம்


பிரித்தானிய இந்தியாவின் மத்தியச் சட்டமன்றம் (Central Legislative Assembly), மாண்டேகு-செம்ஸ்போர்டு சீர்திருத்தங்களின் படி, 1919 இந்திய அரசுச் சட்டம் இயற்றப்பட்டு, இந்திய ஆட்சி நிர்வாகத்தில் இந்தியப் பிரதிநிதிகளும் பங்கு கொள்ளும் வகையில் மத்திய சட்டமன்றம் நிறுவப்பட்டது.

வட்ட வடிவத்தில் அமைந்த இந்திய மத்திய சட்டமன்றக் கட்டிட வளாகம், புதுதில்லி, இந்தியா

இதனை இந்தியச் சட்டமன்றம் (Legislative Assembly) என்றும் ஏகாபத்திய சட்டமன்றம் என்றும் அழைப்பர் (Imperial Legislative Assembly). ஈரவை முறைமை கொண்ட இந்திய நாடாளுமன்றத்தில் மத்திய சட்டமன்றம், கீழவையாக செயல்பட்டது.

இந்திய மாகாணங்களின் சபை, பிரித்தானிய இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையாகச் செயல்பட்டது.

இந்திய விடுதலைக்குப் பின் பிரித்தானிய இந்தியாவின் மத்திய சட்டமன்றம் 14 ஆகஸ்டு 1947 அன்று கலைக்கப்பட்டது. இந்திய மத்திய சட்டமன்றத்தின் பணிகளை இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றம் மற்றும் பாகிஸ்தான் அரசியலமைப்பு மன்றங்கள் மேற்கொண்டது.

அமைப்பு

ஈரவை முறைமை கொண்ட பிரித்தானிய இந்திய நாடாளுமன்றத்தின் மாகாண சபை எனப்படும் மேலவையானது, மத்திய சட்டமன்றம் (கீழவை) இயற்றிய சட்ட முன்வடிவுகளை ஆய்வு செய்த பிறகே கீழவை சட்டமாக நிறைவேற்றும். மத்திய சட்டமன்றம் (கீழவை) மற்றும் இந்திய மாகாண சபையின் (மேலவை) அதிகாரங்கள், வைஸ்ராயின் இறுதி முடிவுகளுக்கு உட்பட்டது.[1][2]

மத்திய சட்டமன்றத்திற்கு மும்பை மாகாணம், சென்னை மாகாணம், வங்காள மாகாணம், பஞ்சாப் மாகாணாங்களிலிருந்து 145 உறுப்பினர்கள் மறைமுகமாகவோ அல்லது நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். [3]

நியமன உறுப்பினர்கள்

மத்திய சட்ட மன்றத்திற்கு, அரசு அலுவல் சார்ந்தவர்களையும் அல்லது அலுவல் சாராதவர்களையும், மாகாண சட்டமன்றங்கள் அல்லது இந்தியத் தலைமை ஆளுநரின் நிர்வாகக் குழுவால் நேரடியாக நியமிக்கப்படுவர்.

அலுவலர்கள்

26 நியமன உறுப்பினர்களில், மத்திய சட்டமன்றத்தின் 14 உறுப்பினர்கள் இந்தியத் தலைமை ஆளுநரின் நிர்வாகக் குழுவாலும்; இந்திய மாகாண சபையின் (மேலவை) 12 உறுப்பினர்கள், மாகாணச் சட்டமன்றங்களின் உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுவர்.

அலுவல் சாரா உறுப்பினர்கள்

15 அலுவல் சாரா உறுப்பினர்களில், ஐந்து உறுப்பினர்களை, இந்தியத் தொழில் & வணிக சபைகள், இந்தியக் கிறிஸ்துவர்கள், தொழிலாளர் அமைப்புகள், ஆங்கிலோ இந்தியர்கள் மற்றும் ஒடுக்கப்பட்டவர்களால் தேர்ந்தெடுக்கப்படுவர்.

மீதமுள்ள பத்து உறுப்பினர்களில், இருவர் வங்காள மாகாணத்திலிருந்தும், பஞ்சாப், ஐக்கிய மாகாணம், மும்பை மாகாணம், சென்னை மாகாணம், பிகார் மற்றும் ஒரிசா மாகாணம், மத்திய மாகாணம், வடமேற்கு எல்லைப்புற மாகாணங்களிலிருந்து தலா ஒரு உறுப்பினர் வீதம் தேர்ந்தெடுத்து அனுப்புவர்.

நேரடித் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்

துவக்கத்தில் இந்தியச் சட்டமன்றத்தின் மொத்தமுள்ள 142 உறுப்பினர்களில், 101 உறுப்பினர்கள் நேரடித் தேர்தலிலும்; 41 உறுப்பினர்கள் நியமன முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

101 தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களில், 52 உறுப்பினர்கள் பொதுத் தொகுதிகளிலிருந்தும்; 29 முஸ்லீம்கள், 2 சீக்கியர்கள், 7 ஐரோப்பியர்கள், 7 நிலவுடமையாளர்கள் மற்றும் 4 வணிகர்கள் தனித் தொகுதிகளிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.[4][5] பின்னர் இந்திய சட்டமன்றத்திற்கு தில்லி, வடமேற்கு எல்லைப்புற மாகாணம், அஜ்மீர்-மெர்வாரா பகுதியினருக்கு தலா ஒரு தொகுதிகள் கூடுதலாக வழங்கப்பட்டது.

மத்திய சட்டமன்றத் தொகுதிகள் கீழ்கண்டவாறு பிரிக்கப்பட்டது.:[6]

மாகாணம்தொகுதிகள்தொகுதிகளின் பெயர்கள்
காலனித்துவ கால அசாம்4பொது (2): அசாம் பள்ளத்தாக்கு, சில்லாங்வுடன் சுர்மா பள்ளதாக்கு
முஸ்லீம்: அசாம் முகமதியர்
அசாம் ஐரோப்பியர்
வங்காள மாகாணம்16பொது (6): கல்கத்தா நகர்புறம் (1), கல்கத்தா புறநகரங்கள் (ஹூக்ளி, அவுரா, 24 பர்கானா (1), கல்கத்தா கோட்டம் (1), பர்த்துவான் கோட்டம் (1), டாக்கா கோட்டம் (1), சிட்டகாங் - ராஜசாகி கோட்டம் (1)
முஸ்லீம் (5): கல்கத்தா நகரம் மற்றும் புறநகரங்கள் (ஹூக்ளி, அவுரா, 24 பர்கானா மாவட்டம் (1), பர்த்துவான் மற்றும் கல்கத்தா ராஜதானி கோட்டம் (1), டாக்கா கோட்டம் (1), சிட்டகாங் கோட்டம் (1), ராஜசாகி கோட்டம் (1)
வங்காள ஐரோப்பியர்கள் (2)
வங்காள நில உடமையாளர்கள் (1)
வணிகர்கள் (2): இந்திய வணிகர் கூட்டமைப்புகள் (1), சுழல்முறை: இந்திய வணிகர் கூட்டமைப்பு அல்லது வங்காள மார்வாரி மகாஜன சபை (1)
பிகார் மற்றும் ஒரிசா மாகாணம்12பொது (8): திர்ஹட் கோட்டம் (2), ஒரிசா (2), பாட்னாவுடன் ஷாஜகாபாத் (1), கயைவுடன் மோங்கியுர் (1), பகல்பூர் பூர்ணியா மற்றும் சந்தல் பர்கானாக்கள் (1), சோட்டா நாக்பூர் கோட்டம்(1)
முஸ்லீம் (3): பாட்னா மற்றும் சோட்டா நாக்பூர் மற்றும் ஒரிசா (1), பகல்பூர் கோட்டம் (1), திர்ஹட் கோட்டம் (1)
பிகார் மற்றும் ஒரிசா நிலவுடமையாளர்கள் (1)
பம்பாய் மாகாணம்16பொது (8): மும்பை (2), சிந்து (1), வடக்குக் கோட்டம் (2), தெற்குக் கோட்டம் (1), மத்தியக் கோட்டம் (2)
முஸ்லீம் (4): மும்பை நகரம் (1), சிந்து நகரம் (1), சுழல்முறையில் சிந்து ஊரகம் மற்றும் வடக்கு கோட்டம் Sind (1), மத்தியக் கோட்டமும்; தெற்கு கோட்டமும் சுழல் முறையில் (1)
பம்பாய் மாகாண ஐரோப்பியர்கள் (1)
வணிகர்கள் (2) இந்திய வணிகர்களின் கூட்டமைப்பு (1), மும்பை அல்லது அகதாபாத் ஆலை உரிமையாளர்கள் சங்கம் (1)
சுழல்முறையில் நிலவுடமையாளர்கள் (1): சிந்து ஜாகீர்தார்காள் மற்றும் ஜமீந்தார்கள் அல்லது குஜராத் மற்றும் தக்காண சர்தார்கள் & இனாம்தார்கள்
பர்மா4பொது (3)
ஐரோப்பியர்கள் (1)
மத்திய மாகாணம் மற்றும் பேரர் பிரதேசம்5பொது (3): நாக்பூர் கோட்டம் (1), இந்தி பேசும் நர்மதா, ஜபல்பூர் மற்றும் சத்தீஸ்கர் கோட்டங்கள் (2)
முஸ்லீம் (1)
நிலவுடமையாளர்கள் (1)
சென்னை மாகாணம்16பொது (11): சென்னை நகரம் (1), சென்னை ஊரக மாவட்டங்கள் (1), கஞ்சாம் மற்றும் விசாகப்பட்டினம் (1), கோதாவரி மற்றும் கிருஷ்ணா (1), குண்டூர் மற்றும் நெல்லூர் (1), சித்தூர் மற்றும் அனந்தப்பூர், பெல்லாரி, கடப்பா மற்றும் கர்னூல் மாவட்டங்கள் (1), சேலம், கோயம்புத்தூர் மற்றும் வட ஆற்காடு மாவட்டங்கள் (1), செங்கல்பட்டு மற்றும் தென்னாற்காடு மாவட்டங்கள் (1), தஞ்சாவூர் மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்டஙக்ள் (1), மதுரை, இராமநாதபுரம் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்கள் (1), நீலகிரி மற்றும் மேற்கு கடற்கரையின் மலபார், தெற்கு கன்னடம் (1)
முஸ்லீம் (3): வட சென்னை (காஞ்சம், விசாகப்பட்டினம், கோதாவரி, கிருஷ்ணா, குண்டூர், நெல்லூர், அனந்தப்பூர், பெல்லாரி, கடப்பா, கர்நூல் மற்றும் சித்தூர் (1), தென் சென்னை (செங்கல்பட்டு, வடக்கு மற்றும் தெற்கு கோயம்புத்தூர், ஆற்காடு, தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, மதுரை) (1), நீலகிரி, மலபார், தெற்கு கன்னடம் (1)
சென்னை மாகாண ஐரோப்பியர்கள் (1)
நிலவுடமையாளர்கள் (1)
பஞ்சாப் மாகாணம் ,12பொது (3): அம்பாலா கோட்டம் (1),ஜலந்தர் கோட்டம் (1), மேற்கு பஞ்சாப் (லாகூர், ராவல்பிண்டி, முல்தான்) கோட்டம்) (1)
முஸ்லீம் (6): கிழக்கு பஞ்சாப் (அம்பாலா, காங்ரா, ஹோசியார்பூர், ஜலந்தர், லூதியானா (1), கிழக்கு மத்திய பஞ்சாப் (பெரேஸ்பூர், லாகூர், அமிர்தசரஸ் மற்றும் குர்தாஸ்பூர்) (1), மேற்கு மத்திய பஞ்சாப் (சியால்கோட், குஜ்ரன்வாலா, சேக்குபுரா மற்றும் லையால்பூர்) (1), வடக்கு பஞ்சாப் (குஜராத், ஜீலம் மற்றும் ராவல்பிண்டி) (1), வடமேற்கு பஞ்சாப் (அட்டோக், மியான்வாலி, சாப்பூர் மற்றும் ஜங்) (1), தென்மேற்கு பஞ்சாப் (முல்தான், மோண்ட்கோமெரி, முசாபர்கர் மற்றும் தேரா காஜி கான்) (1)
சீக்கியர்கள் (2): கிழக்கு பஞ்சாப் (அம்பாலா, ஜலந்தர் கோட்டங்கள்) (1), மேற்கு பஞ்சாப் (லாகூர், ராவல்பிண்டி மற்றும் முல்தான்) (1)
பஞ்சாப் நிலவுடமையாளர்கள் (1)
ஐக்கிய மாகாணம்16பொது (8) நகரங்கள் (ஆக்ரா, மீரட், கவுன்பூர், வாரணாசி, அலகாபாத், பரேலி, லக்னோ) (1), மீரட் கோட்டம் (நகரங்கள் தவிர) (1), ஆக்ரா கோட்டம் (1), ரோகில்கண்ட் மற்றும் குமாவுன் கோட்டம் (1), அலகாபாத் - ஜான்சி கோட்டம் (1), வாரணாசி, கோரக்பூர் கோட்டம் (1), லக்னோ கோட்டம் (1), பைசாபாத் கோட்டம் (1)
முஸ்லீம் (6): நகரங்கள் (1), மீரட் கோட்டம் (1), ஆக்ரா (1), ரோகில்கண்ட் மற்றும் குமாவுன் கோட்டம்|குமாவுன்]] கோட்டம் (1), லக்னோ மற்றும் பைசாபாத் (1), தெற்கு கோட்டம் (அலகாபாத், பனாரஸ், கோரக்பூர்) (1)
ஐரோப்பியர்கள் (1)
உ. பி நிலவுடமையாளர்கள் (1)

1935ஆம் ஆண்டு இந்திய அரசுச் சட்டத்தின் மூலம், இந்திய நாடாளுமன்றத்தின் ஈரவை முறைமை ஒழிக்கப்பட்டது. இந்திய மத்திய சட்டமன்றத்தில் நேரடியாக தேர்ந்தேடுக்கப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கை 250 ஆக உயர்த்தப்பட்டது.

மேலும் சுதேச சமஸ்தானங்களின் சார்பில் 125 இடங்கள் ஒதுக்கப்பட்டது. இருப்பினும் இச்சீர்திருத்தங்களின் படி தேர்தல் நடைபெறவில்லை.

நாடாளுமன்றக் கட்டிடம்

12 பிப்ரவரி 1921ல் புதிய இந்திய மத்திய சட்டமன்றக் கட்டிட வளாகத்தின் அடிக்கல் நடப்பட்டு, 18 பிப்ரவரி 1927ல் திறப்பு விழா நடைபெற்றது.

தற்போது செயல்படும் இந்திய நாடாளுமன்ற கட்டிட வளாகத்திற்கு மாற்றப்பட்ட மத்திய சட்டமன்ற சபைக் கட்டிடத்திற்கு, நாடாளுமன்ற இல்லம் அல்லது சன்சத் பவன் எனப்பெயரிடப்பட்து.[7][8]

இந்திய மத்திய சட்டமன்றம், இந்திய மாகாண சபை மற்றும் சுதேச சமஸ்தானங்களின் சபைகளை அலுவல் பூர்வமாக, ஐக்கிய இராச்சியத்தின் ஐந்தாம் ஜோர்ஜ் மன்னர் 1921ல் திறந்து வைத்தார். [9]

தேர்தல்கள்

இந்திய மத்திய சட்டமன்றம் மற்றும் இந்திய மாகாண சபைகளுக்கான முதல் தேர்தல் நவம்பர் 1920ல் நடைபெற்றது.

இத்தேர்தலில் மிதவாதிகளுக்கும், இத்தேர்தலை எதிர்த்து ஒத்துழையாமை இயக்கம்நடத்திக் கொண்டிருந்த இந்திய தேசிய காங்கிரசு கட்சியினர் ஆதரவுடன் பலர் போட்டியிட்டனர். இத்தேர்தலிகளில் 14,15,892 வாக்காளர்களில் 1,82,000 வாக்களர்கள் மட்டுமே வாக்களித்தனர். [10]

ஒத்துழையாமை இயக்கத்தை காங்கிரஸ் கட்சியினர் திரும்பப் பெற்றனர். காங்கிரசு கட்சியிலிருந்து ஒரு குழுவினர் சுயாட்சிக் கட்சியை நிறுவி, 1923 மற்றும் 1926களில் நடைபெற்ற தேர்தலில்களில் போட்டியிட்டனர். சுயாட்சிக் கட்சியின் தலைவரான மோதிலால் நேரு, மத்திய சட்டமன்றத்தில் எதிர்கட்சி தலைவரானார்.

1934ல் காங்கிரஸ் கட்சியினர் ஒத்துழையாமை இயக்கத்தை முடித்துக் கொண்டு, 1934ல் நடைபெற்ற ஐந்தாவது மத்திய சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டனர். [11]

1945ல் இந்திய மத்திய சட்டமன்றத்திற்கு இறுதியாகத் தேர்தல் நடைபெற்றது.

முக்கிய நிகழ்வுகள்

  • இந்திய மத்திய சட்டமன்றத்தில், 1926ல் மோதிலால் நேரு, இந்திய அரசியலமைப்பு சட்டத்தை நிறைவேற்றி, இந்தியாவிற்கு தன்னாட்சி வழங்கும் தீர்மானத்தை முன் வைத்தார். ஆனால் மத்திய சட்டமன்றம் இக்கோரிக்கையை ஏற்கவில்லை.[12]
  • 8 ஏப்ரல் 1929ல் இந்தியப் புரட்சியாளர்கள் பகத்சிங் மற்றும் பதுகேஷ்வர் தத் ஆகியோர், பிரித்தானிய ஆட்சியாளர்கள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என வலியுறுத்தி, இந்திய மத்திய சட்டமன்றத்தில் வெடிகுண்டுகளை வீசியெறிந்தனர். இக்குண்டு வீச்சில் சில ஆங்கிலேய அதிகாரிகள் காயமுற்றனர். [13][14]
  • 1934ல் காங்கிரஸ் கட்சி, இந்திய மத்திய சட்டமன்றத்தில் முதன்மை எதிர்கட்சி என்ற தகுதி பெற்றது.
  • இரண்டாம் உலகப் போர் நடைபெற்றுக் கொண்டிருந்த போது, 27 பிப்ரவரி 1942 அன்று மத்திய சட்டமன்றத்தில், இரகசியமாக போர் நிலவரம் குறித்து விவாதம் நடைபெற்றது.[15]

மத்திய சட்டமன்றத்தின் தலைவர்கள்

இந்திய மத்திய சட்டமன்றத்திற்கு தலைமை வகிப்பவரை அவைத்தலைவர் (சபாநாயகர்) என்பர். இதன் இறுதி சபாநாயகராக கணேஷ் வாசுதேவ மாவ்லங்கர் 14 ஆகஸ்டு 1947 முடிய பதவி வகித்தார்.

மேலும் இவர் இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றத்தின் சபாநாயகராகத் தொடர்ந்து பதவி வகித்தார். பின்னர் 1952ல் இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவை சபாநாயகராக தொடர்ந்து பதவி வகித்தார். [16]

எண்படம்அவைத்தலைவர்பதவிக்காலம்[17]
1பிரடெரிக் ஒயிட்3 பிப்ரவரி 1921 – 23 ஆகஸ்டு 1925
2வித்தல்பாய் படேல்24 ஆகஸ்டு 1925 – ஏப்ரல் 1930
3முகமது யாகூர்9 சூலை 1930 – 31 சூலை 1931
4இப்ராகிம் ரகீம்தூலா17 சனவரி 1931 – 7 மார்ச் 1933
5ஆர். கே. சண்முகம் செட்டியார்14 மார்ச் 1933 – 31 டிசம்பர் 1934
6நீதியரசர் அப்துர் ரகீம்24 சனவரி1935 – 1 அக்டோபர் 1945
7கணேஷ் வாசுதேவ மாவ்லங்கர்24 சனவரி 1946 – 14 ஆகஸ்டு1947
எண்படம்துணை அவைத்தலைவர்பதவிக்காலம்[18]
1சச்சிதானந்த சின்காபிப்ரவரி1921 – செப்டம்பர் 1921
2ஜாம்சேட்ஜி ஜிஜேபாய்செப்டம்பர் 1921 – 1923
3டி. ரங்காச்சாரிபிப்ரவரி 1924 – 1926
4முகமது யாகூப்சனவரி 1927 – 1930
5ஹரி சிங் கௌர்சூலை 1930
6ஆர். கே. சண்முகம்சனவரி 1931 – மார்ச் 1933
7அப்துல் மட்டின் சௌத்திரிமார்ச் 1933 – 1934
8அகில் சந்திர தத்தாபிப்ரவரி 1934 – 1945
9முகமது யாமின் கான்பிப்ரவரி 1946 – 1947

கலைப்பு

ஆகஸ்டு, 1947ல் இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றம் நிறுவப்பட்ட பின், இந்திய விடுதலைச் சட்டம், 1947 படி, இந்திய மத்திய சட்டமன்றம், இந்திய மாகாண சபை மற்றும் மாகாணச் சட்டமன்றங்கள் கலைக்கப்பட்டது.

இதனையும் காண்க

மேற்கோள்கள்

🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்