பிபெபன் பேகாரி இலால்
- பக்கம்
- உரையாடல்
கருவிகள்
Actions
பொது
அச்சு/ஏற்றுமதி
பிபெபன் பேகாரி இலால் | |
---|---|
சிக்கிமின் முதல் ஆளுநர் | |
பதவியில் 16 மே 1975 – 9 ஜனவரி 1981 | |
முதலமைச்சர் | காசி லேண்டுப் தோர்ஜீ நார் பகதூர் பண்டாரி |
பின்னவர் | ஹோமி ஜெ. எச். தலெயார்கான் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | (1917-01-30)30 சனவரி 1917[1] பிரித்தானிய இந்தியா |
இறப்பு | 5 சனவரி 2008(2008-01-05) (அகவை 90)[2] புது தில்லி, இந்தியா |
வேலை | அரசியல்வாதி |
பிபெபன் பேகாரி இலால் (B. B. Lal)(30 ஜனவரி 1917 - 5 ஜனவரி 2008) என்பவர் குடிமைப்பணி ஊழியர் ஆவார். இவர் இந்தியாவின் சிக்கிம் மாநிலத்தின் முதல் ஆளுநராக பணியாற்றினார்.[3]
இலால் 1941இல் இந்தியக் குடிமைப் பணியில் சேர்ந்தார். இவருக்கு 1965 வரை உத்தரப் பிரதேச அரசில் பல்வேறு பொறுப்புகள் வழங்கப்பட்டன.[1] 1966ஆம் ஆண்டில், இவர் மத்திய அரசுப் பணிக்கு மாற்றப்பட்டார். இங்கு பல்வேறு பதவிகளில் பணியாற்றியுள்ளார்.
1974ஆம் ஆண்டில், இலால் இந்திய அரசாங்கத்தின் சிக்கிம் இராச்சியத்தில் தலைமை நிர்வாகியாக நியமிக்கப்பட்டார்.[4] மே 1975இல் இந்தியாவுடன் சிக்கிம் இணைக்கப்பட்ட பின்னர், இவர் புதிய மாநிலமான சிக்கிமின் முதல் ஆளுநராக நியமிக்கப்பட்டு 1981 வரை பணியாற்றினார்.
இலால் ஜனவரி 5, 2008 அன்று புதுதில்லியில் காலமானார்.[2]
அரசியல் பதவிகள் | ||
---|---|---|
முன்னர் | சிக்கிம் அரசின் தலைமை நிர்வாகி 19 செப்டம்பர் 1974 - 15 மே 1975 | இந்தியாவுடன் இணைக்கப்பட்டது |
புதிய பட்டம் | சிக்கிம் ஆளுநர் 16 மே 1975 - 9 ஜனவரி 1981 | பின்னர் எச் ஜே எச் தலியார்கான் |