பிடல் ராமோசு

பிடல் வால்டெஸ் ராமோசு ( Fidel Valdez Ramos ) 1928 மார்ச் 18 அன்று பிறந்த [1] இவர் எஃப்.வி.ஆர் மற்றும் எடி என பிரபலமாக அறியப்பட்டவர். இவர் ஓய்வுபெற்ற பிலிப்பைன்ஸ் அதிபர் மற்றும் அரசியல்வாதியும் ஆவார். இவர் 1992 முதல் 1998 வரை பிலிப்பைன்ஸின் 12 வது அதிபதிராக பணியாற்றினார். தனது ஆறு ஆண்டு பதவியில், ராமோசு பிலிப்பைன்ஸ் பொருளாதாரத்தில் சர்வதேச நம்பிக்கையை புத்துயிர் அளித்து புதுப்பித்ததற்காக பலரால் பாராட்டப்பட்டார். தனது 91 வயதில் இவர் தற்போது வயதான முன்னாள் பிலிப்பைன்ஸ் அதிபராக உள்ளார்.

இவர் தனது தொழில் வாழ்க்கையின் ஆரம்பத்தில் பிலிப்பைன்ஸ் இராணுவத்தில் பதவி உயர்வு பெற்று அதிபர் பெர்டினாண்ட் மார்கோஸ் காலத்தில் பிலிப்பைன்ஸ் கான்ஸ்டாபுலரி தலைவராகவும் பிலிப்பைன்ஸின் ஆயுதப்படைகளின் துணைத் தலைவராகவும் ஆனார். 1986 மக்கள் சக்தி புரட்சியின் போது, அதிபர் மார்கோஸின் நிர்வாகத்திலிருந்து விலகியதற்கும், புதிதாக நிறுவப்பட்ட அதிபர்தி கொராஸன் அக்வினோவின் அரசாங்கத்திற்கு விசுவாசமாக இருந்ததற்காகவும்,விசுவாசத்தையும் உறுதிபடுத்தும் முடிவுக்காகவும் பல பிலிப்பைன்ஸ் மக்களால் ராமோஸ் ஒரு கதாநாயகனாக பாராட்டப்பட்டார்.

அதிபராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன்னர், ராமோஸ் அதிபர் கொராஸன் அக்வினோவின் அமைச்சரவையில் பணியாற்றினார், முதலில் பிலிப்பைன்ஸ் ஆயுதப்படைகளின் (ஏ.எஃப்.பி) தலைமை ஊழியராகவும், பின்னர் 1986 முதல் 1991 வரை தேசிய பாதுகாப்பு செயலாளராகவும் பணியாற்றினார் .[2] பிலிப்பைன்ஸ் இராணுவத்தின் சிறப்புப் படைகள் மற்றும் பிலிப்பைன்ஸ் தேசிய காவல்துறை சிறப்பு அதிரடிப் படை ஆகியவற்றை உருவாக்கிய பெருமைக்குரியவர் ஆவார். ஓய்வுக்குப் பிறகு, இவர் அரசியலில் தீவிரமாக இருந்தார். அவரது வாரிசுகளுக்கு ஆலோசகராக பணியாற்றுகிறார்.

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி

இலிங்காயினில் உள்ள நர்சிசோ ராமோசு மற்றும் ஏஞ்சலா வால்டெஸ் ஆகியோரின் குடும்ப வீடு. இந்த வாடகை வீட்டில் பிடல் மற்றும் லெடிசியா ராமோசு-சகானி ஆகியோர் பிறந்தனர்

.

பிடல் ராமோசு 1928 மார்ச் 18, அன்று பங்கசினானின் இலிங்காயனில் பிறந்தார். பின்னர் இவர் பங்கசினானின் ஆசிங்கனில் வளர்ந்தார்.[3] அவரது தந்தை, நர்சிசோ ராமோசு (1900-1986), ஒரு வழக்கறிஞரும், பத்திரிகையாளரும் மற்றும் பிரதிநிதிகள் சபையின் ஐந்து கால சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். பின்னர் இவர் வெளியுறவு செயலாளர் பதவிக்கு உயர்ந்தார்.[4] ஆகவே, 1967 ஆம் ஆண்டில் பாங்காக்கில் ஆசியான் பிரகடனத்திற்கு பிலிப்பைன்ஸ் சார்பில் கையெழுத்திட்டவர் நர்சிசோ ராமோசு ஆவார். மேலும் இவர் லிபரல் கட்சியின் நிறுவன உறுப்பினராக இருந்தார். பிடல் ராமோசின் வாழ்க்கை வரலாற்றின்படி 1992 இல் அதிபராக பதவியேற்றார். பேர்டினாண்ட் மார்கோஸ் நிறுவிய மஹார்லிகா என்ற ஜப்பானிய எதிர்ப்பு கெரில்லா குழுவின் தலைவர்களில் ஒருவராகவும் நர்சிசோ ராமோசு பணியாற்றினார். அவரது தாயார், ஏஞ்சலா வால்டெஸ் (1905-1978), ஒரு கல்வியாளராவார். மேலும், பெண்களுக்கான வாக்குரிமை என்ற அமைப்பிலும், படாக் மாகாணத்தில் இலோகோஸ் நோர்டே என்ற இடத்தில் மதிப்புமிக்க வால்டெஸ் குடும்பத்தின் உறுப்பினராகவும் இருந்தார்.அவரை பிலிப்பைன்ஸ் முன்னாள் அதிபர் பெர்டினாண்ட் ஈ. மார்கோஸ் உறவினாக்கினார்.

பட்டங்கள்

இவர் தனது ஆரம்பக் கல்வியை லிங்காயன் பொதுப் பள்ளிகளில் கற்றார். ராமோசு இடைநிலைக் கல்வியை மணிலா நகரில் உள்ள பிலிப்பைன்ஸ் உயர்நிலைப் பள்ளியில் தொடங்கினார், மேலும் மாபுயா தொழில்நுட்பக் கழகத்தின் உயர்நிலைப் பள்ளியிலும் பயின்றார். இவர் 1945 இல் சென்ட்ரோ எஸ்கோலர் பல்கலைக்கழக ஒருங்கிணைந்த பள்ளியில் உயர்நிலைப் பள்ளியில் பட்டம் பெற்றார். பின்னர் மணிலாவில் உள்ள தேசிய பல்கலைக்கழகத்தில் கட்டிடப் பொறியியலில் பட்டம் பெற்றார். இவர் 1953 இல் கட்டிடப் பொறியியலில் போர்டு தேர்வில் முதல் 8 இடங்களில் ஒன்றைப் பிடித்தார்.[3][4] பின்னர் இவர் அமெரிக்காவிற்குச் சென்றார், இவர் அமெரிக்க ஐக்கிய நாட்டின் இராணுவ பயிற்சி அகாதமியில் பட்டம் பெற்றார், ராணுவ பொறியியலில் இளங்கலை அறிவியல் மற்றும் இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தில், கட்டிடப் பொறியியலில் முதுகலைப் பட்டம் பெற்றார். பிலிப்பைன்ஸின் தேசிய பாதுகாப்புக் கல்லூரியில் தேசிய பாதுகாப்பு நிர்வாகத்தில் முதுகலை பட்டமும், அட்டெனியோ டி மணிலா பல்கலைக்கழகத்தில் வணிக நிர்வாகத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றார். மேலும், மொத்தம் 29 கௌரவ மதிப்புறு முனைவர் பட்டங்களும் பெற்றுள்ளார் .[5]

திருமணம்

இவர் 1954 இல் அக்டோபர் 21, அன்று அமெலிடா மார்டினெஸ் என்பவரை மணந்தார். இவர்களுக்கு ஏஞ்சலிடா ராமோசு-ஜோன்ஸ், ஜோசபின் ராமோசு-சமார்டினோ, கரோலினா ராமோசு-செம்ப்ரானோ, கிறிஸ்டினா ராமோசு-ஜலாஸ்கோ மற்றும் குளோரியா ராமோசு ஆகிய ஐந்து மகள்கள் உள்ளனர்.[3][4]

குறிப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=பிடல்_ராமோசு&oldid=3563350" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்