பிக்கோலினிக் அமிலம்

அரோமாட்டிக் அமிலம்

பிக்கோலினிக் அமிலம் (Picolinic acid) என்பது C5H4N(CO2H) என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். 2 ஆவது நிலையில் கார்பாக்சிலிக் அமில பதிலியுடன் கூடிய பிரிடின் வழிப்பெறுதியே பிக்கோலினிக் அமிலம் அமிலம் ஆகும். நிக்கோட்டினிக் அமிலத்தினுடைய மாற்றியன் என்றும் இச்சேர்ம்ம் கருதப்படுகிறது.. நிக்கோட்டினிக் அமிலத்தில் கார்பாக்சில் பக்க சங்கிலி 3 ஆவது நிலையில் இடம்பெற்றுள்ளது. வெண்மை நிறம் கொண்ட பிக்கோலினிக் அமிலம் நீரில் கரைகிறது. செயற்கை கரிம வேதியியலில் ஒரு அடிமூலக்கூறாக பிக்கோலினிக் அமிலம் ஏம்மிக் வினையிலும் மிட்சனோபு வினையிலும் பயன்படுத்தப்படுகிறது [2]:495ff.

பிக்கோலினிக் அமிலம்
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
பிரிடின்-2-கார்பாக்சிலிக் அமிலம்
வேறு பெயர்கள்
பிக்கோலினிக் அமிலம்
இனங்காட்டிகள்
98-98-6 Y
ChEBICHEBI:28747 Y
ChEMBLChEMBL72628 Y
ChemSpider993 Y
InChI
  • InChI=1S/C6H5NO2/c8-6(9)5-3-1-2-4-7-5/h1-4H,(H,8,9) Y
    Key: SIOXPEMLGUPBBT-UHFFFAOYSA-N Y
  • InChI=1/C6H5NO2/c8-6(9)5-3-1-2-4-7-5/h1-4H,(H,8,9)
    Key: SIOXPEMLGUPBBT-UHFFFAOYAC
யேமல் -3D படிமங்கள்Image
பப்கெம்1018
  • c1ccnc(c1)C(=O)O
பண்புகள்
C6H5NO2
வாய்ப்பாட்டு எடை123.11 g·mol−1
தோற்றம்வெண்மையும் மஞ்சள் கலந்த பழுப்பு நிறமும் கொண்ட படிகத் திண்மம்
உருகுநிலை 136 முதல் 138 °C (277 முதல் 280 °F; 409 முதல் 411 K)
நீரில் சிறிதளவு கரையும் (0.41%)[1]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  Y verify (இதுY/N?)

ஒருங்கிணைப்பு வேதியியல்

மனித உடலிலுள்ள குரோமியம், துத்தநாகம், மாங்கனீசு, செப்பு, இரும்பு, மாலிப்டினம் போன்ற தனிமங்களை பிக்கோலினிக் அமிலம் ஒரு முகவராக இருபல் இடுக்கி இணைப்புக்குள்ளாக்குகிறது [3]:72. இச்சேர்மத்தினுடைய பல அணைவுகள் நடுநிலை மின்சுமையை கொண்டு கொழுப்பு விரும்பிகளாக உள்ளன. உறிஞ்சுதலில் இதன் செயற்பாடு கண்டுபிடிக்கப்பட்டபின், துத்தநாகம் டைபிக்கோலினேட்டு உணவுக் குறைநிரப்பிகள் பிரபலமடைந்தன. உடலில் துத்தநாகத்தை அறிமுகப்படுத்துவதற்கான ஒரு சிறந்த வழியாக இது கருதப்பட்டது [3].

உற்பத்தி

2-மெத்தில் பிரிடினை பொட்டாசியம் பெர்மாங்கனேட்டைப் (KMnO4 பயன்படுத்தி ஆக்சிசனேற்றம் செய்து பிக்கோலினிக் அமிலம் தயாரிக்கப்படுகிறது[4][5]

உயிரியல் தொகுப்பு

டிரிப்டோபான் என்ற அமினோ அமிலத்தை கைனியூரெனின் பாதையில் சிதைக்கும் போது உருவாகும் சிதைமாற்ற பொருளே பிக்கோலினிக் அமிலமாகும்[3][6]. அதன் செயல்பாடு தெளிவாக இல்லை, ஆனால் இது பல்வேறு நரம்பியல், நோய் தடுப்பு மற்றும் எதிர்ப்பு வீக்கம் எதிர்ப்பு விளைவுகளில் பாதிப்பை உண்டாக்குகிறது. மேலும், ஈரிணை திற அயனிகளான துத்தநாகம்(II) மற்றும் பிற அயனிகளையும் அல்லது மூவிணைதிற அயனிகளை சிறுகுடல் வழியாக உறிஞ்சுதலில் உதவி செய்கிறது என கூறப்படுகிறது[7].

பிக்கோலினேட்டுகள்

பிக்கோலினிக் அமிலத்தினுடைய உப்புகள் பிக்கோலினேட்டுகள் எனப்படுகின்றன.

மேற்கோள்கள்

🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்