பாம்ப்ளியா (Pamphylia, பண்டைக் கிரேக்கம்: Παμφυλία , பம்ஃபிலியா, நவீன உச்சரிப்பு Pamfylía / pæm ˈfɪl iə / ) என்பது சின்ன ஆசியாவின் தெற்கில், லைசியாவிற்கும் சிலிசியாவிற்கும் இடையில், மத்தியதரைக் கடலில் இருந்து தாரசு மலை வரை நீண்டுள்ளது (இவை அனைத்தும் நவீன கால துருக்கியின், அந்தால்யா மாகாணத்தில் உள்ளது). இது வடக்கில் பிசிடியாவை எல்லையாக கொண்தாக இருந்தது. எனவே இது சிறிய அளவிலான ஒரு நாடாக இருந்தது. சுமார் 50 கிமீ (30 மைல்) அகலம் கொண்ட சுமார் 120 கிமீ (75 மைல்) கடற்கரையை மட்டுமே கொண்டிருந்தது. உரோமானிய நிர்வாகத்தின் கீழ் பம்பிளியா என்ற சொல் பிசிடியா மற்றும் ஃபிரிஜியா மற்றும் லைகோனியாவின் எல்லைகள் வரை முழுவதுமாக உள்ளடக்கும் வகையில் நீட்டிக்கப்பட்டது. மேலும் இந்த பரந்த பொருளில் இது தொலெமியால் பயன்படுத்தப்பட்டது.[1]