பாத்திமா ஜின்னா

பாக்கித்தானின் அரசியல்வாதி

பாத்திமா ஜின்னா (Fatima Jinnah; 31 சூலை 1893-9 சூலை 1967), பரவலாக "தேசத்தின் தாய்" என அழைக்கப்படும் இவர் பாக்கித்தான் அரசியல்வாதியும், பல் அறுவைச் சிகிச்சை நிபுணரும், இராசதந்திரியும், பாக்கித்தானின் முன்னணி நிறுவனர்களில் ஒருவருமாவார். இவர் பாக்கித்தானின் முதல் தலைமை ஆளுநர் முகம்மது அலி ஜின்னாவின் தங்கையாவார்.[1]

மாதர்-இ மில்லத்
பாத்திமா ஜின்னா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
பாத்திமா ஜின்னா

(1893-07-31)31 சூலை 1893
கத்தியவார், மும்பை மாகாணம், பிரித்தானிய இந்தியா
இறப்பு9 சூலை 1967(1967-07-09) (அகவை 73)
கராச்சி, மேற்கு பாக்கித்தான், பாக்கித்தான்
முன்னாள் கல்லூரிகொல்கத்தா பல்கலைக்கழகம் (பல் மருத்துவ அறுவைச் சிகிச்சை நிபுணர்)
வேலைபல் மருத்துவர், இராசதந்திரி

1923 இல் கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் பல் மருத்துவத்தில் பட்டம் பெற்ற பிறகு, ஒன்றுபட்டிருந்திருந்த இந்தியாவின் முதல் பெண் பல் மருத்துவரானார். பாக்கித்தானின் முதல் தலைமை ஆளுரான தனது மூத்த சகோதரர் முகம்மது அலி ஜின்னாவின் நெருங்கிய கூட்டாளியாகவும், ஆலோசகராகவும் ஆனார். பிரித்தானிய இராச்சியத்தின் மீது கடுமையான விமர்சகராக இருந்த இவர், இரு தேசக் கோட்பாட்டின் வலுவான ஆதரவாலராகவும், அகில இந்திய முஸ்லிம் லீக்கின் முன்னணி உறுப்பினராகவும் இருந்தார்.

ஆரம்ப கால வாழ்க்கையும் பின்னணியும்

பாத்திமா, ஜின்னா குடும்பத்தில் 31 சூலை 1893இல் ஜின்னாபாய் பூஞ்சா - மிதிபாய் ஆகியோருக்கு ஏழு குழந்தைகளில் இளையவராக பிரித்தானிய இந்தியாவில் மும்பை மாகாணத்திலிருந்த குசராத்தின் கத்தியவாரில் பிறந்தார். பாத்திமாவுக்கு ஆறு உடன்பிறப்புகள் இருந்தனர்.[2] 1902 இல் மும்பையிலுள்ள பாந்த்ரா பள்ளியில் சேர்ந்தார். 1919ஆம் ஆண்டில், இவர் கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் அதிக போட்டி உள்ள மருத்துவர் ஆர் அகமது பல் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தார். பட்டம் பெற்ற பிறகு, 1923இல் மும்பையில் ஒரு பல் மருத்துவமனையைத் திறந்தார்.[3]

அரசியல் பணிகள்

பாக்கித்தானின் சுதந்திரத்திற்குப் பிறகு, 1949 ஆம் ஆண்டு பேகம் ரானா லியாகத் அலி கான் என்பவருடன் சேர்ந்து,அனைத்து பாக்கித்தான் பெண்கள் சங்கத்தை நிறுவினார். இது புதிதாக உருவாக்கப்பட்ட நாட்டில் குடியேறிய பெண்களின் குடியேற்றத்தில் ஒரு முக்கிய பங்கு வகித்தது. தான் இறக்கும் வரை தனது சகோதரனுக்கு நெருங்கிய நம்பிக்கைக்குரியவரான இருந்தார். அவரது மரணத்திற்குப் பிறகு, பாத்திமா 1951 வரை தேசத்தில் உரையாற்ற தடை விதிக்கப்பட்டது. தேசத்திற்கான அவரது 1951 வானொலி உரை லியாகத் அலிகான் நிர்வாகத்தால் பெரிதும் தணிக்கை செய்யப்பட்டது. [4] இவர் 1955இல் மை பிரதர் என்ற புத்தகத்தை எழுதினார். ஆனால் பாத்திமாவை 'தேச விரோதப் பொருள்' என்று குற்றம் சாட்டிய நிறுவனத்தின் தணிக்கை காரணமாக 32 ஆண்டுகளுக்குப் பிறகு, புத்தகத்தின் கையெழுத்துப் பிரதியின் பல பக்கங்கள் வெளிப்பட்டிருந்தாலும் கூட, 1987இல் தான் இது வெளியிடப்பட்டது.[5]

தேர்தல் பணிகள்

இராணுவ சர்வாதிகாரி அயூப்கானுக்கு எதிராக குடியரசுத் தலைவர் தேர்தலில் பங்கேற்பதற்காக இவர் 1965ஆம் ஆண்டு தனது சுய-அரசியல் ஓய்வில் இருந்து வெளியே வந்தார். இவர் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பால் ஆதரிக்கப்பட்டார். இராணுவத்தால் அரசியல் மோசடி செய்யப்பட்டிருந்தபோதிலும், பாக்கித்தானின் இரண்டு பெரிய நகரங்களான கராச்சியிலும், டாக்காவிலும் வென்றார்.[6] அமெரிக்க பத்திரிகையான டைம், 1965 தேர்தல் பிரச்சாரத்தைப் பற்றி அறிக்கை செய்யும் போது, இவர் தனது அடக்கம் மற்றும் தேசபக்தி மீதான தாக்குதல்களை அயூப் கானாலும் அவரது கூட்டாளிகளால் எதிர்கொண்டதாக எழுதியது.[7] [8]

இறப்பு

பாத்திமா ஜின்னா 9 ஜூலை 1967 அன்று கராச்சியில் இறந்தார். இவரது மரணம் சர்ச்சைக்குரியதானது. ஏனெனில் இவர் இயற்கைக்கு மாறான காரணங்களால் இறந்தார் என்று சில தகவல்கள் கூறுகின்றன.[9] இவரது குடும்ப உறுப்பினர்கள் விசாரணைக்கு கோரிக்கை விடுத்தனர். ஆனால் அரசாங்கம் அவர்களின் கோரிக்கையை ஏற்கவில்லை. பாக்கித்தானில் மிகவும் கௌரவமான தலைவர்களில் ஒருவராக இவர் கருதப்படுகிறார். கராச்சியில் நடந்த இவரது இறுதி சடங்கில் கிட்டத்தட்ட அரை மில்லியன் மக்கள் கலந்து கொண்டனர்.

கௌரவங்கள்

இவருடைய பாரம்பரியம் குடிசார் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான இவரது ஆதரவோடு தொடர்புடையது. பாக்கித்தான் இயக்கத்தில் இவருடைய போராட்டத்துடனும் தன்னுடைய சகோதரன் மீதான பக்தியுடனும் தொடர்புடையது. இதன் காரணமாக இவர் மாதர்-இ மில்லத் (" தேசத்தின் தாய் ") என்றும் கட்டான்-இ பாக்கித்தான் ("பாக்கித்தானின் சீமாட்டி") என்றும் குறிப்பிடப்படுகிறார். பாக்கித்தானில் பல நிறுவனங்களுக்கும் பொது இடங்களுக்கும் இவரது நினைவாக பெயரிடப்பட்டுள்ளன.[10]

ஜின்னா தனது சகோதரருடன் 1918 வரை வாழ்ந்தார். இவர், இரத்தன்பாய் பெட்டிட் என்பவரை மணந்தார். பிப்ரவரி 1929 இல் ரத்தன்பாய் இறந்த பின்னர் தனது மருத்துவமனையை மூடிவிட்டு, தனது சகோதரி தினா ஜின்னாவை கவனித்துக்கொள்வதற்காக தனது சகோதரர் முகம்மது அலி ஜின்னாவின் வீட்டிற்குச் சென்றார். 1948 செப்டம்பர் 11 அன்று இவரது சகோதரர் இறக்கும் வரை அவருடனான நீடித்த வாழ்நாள் தோழமை தொடங்கியது.

இஸ்லாமாபாத்தில் உள்ள பாக்கித்தான் நினைவுச்சின்னத்தில் பாத்திமா ஜின்னா, இவரது சகோதரர் முகம்மது அலி ஜின்னாவின் சிலைகள்.
இலண்டனில் உள்ள மேடம் துசாட்ஸில் உள்ள மெழுகு அருங்காட்சியகத்தில் ஜின்னா மற்றும் இவரது சகோதரர் முகம்மது அலி ஜின்னாவின் மெழுகு சிலைகள்.

இதையும் பார்க்கவும்

மேற்கோள்கள்

மேலும் படிக்க

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=பாத்திமா_ஜின்னா&oldid=3761767" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்