பாதரச(I) புரோமைடு

பாதரச(I) புரோமைடு (Mercury(I) bromide) என்பது Hg2Br2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். பாதரசம் மற்றும் புரோமின் சேர்ந்து உருவாகும் இச்சேர்மத்தை மெர்குரசு புரோமைடு என்ற பெயராலும் அழைக்கலாம். சூடுபடுத்தும் போது பாதரச(I) புரோமைடு வெண்மை நிறத்திலிருந்து மஞ்சள் நிறத்திற்கு மாறுகிறது[1]. புற ஊதா ஒளியில் படும்போது சல்மான் நிறமாக நின்றொளிர்கிறது. ஒலி-ஒளி கருவிகளில் பாதரச(I) புரோமைடு பயன்பாடுகளைக் கொண்டுள்ளது[2].

பாதரச(I) புரோமைடு Mercury(I) bromide
பாதரச(I) புரோமைடு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
பாதரச(I) புரோமைடு
வேறு பெயர்கள்
மெர்குரசு புரோமைடு
இனங்காட்டிகள்
15385-58-7 Y
பப்கெம்24829
UNIIJSJ4936A2S N
பண்புகள்
Hg2Br2
வாய்ப்பாட்டு எடை560.99 கி/மோல்
தோற்றம்வெண்மையிலிருந்து மஞ்சள் நாற்கோண படிகங்கள்
மணம்நெடியற்றது
அடர்த்தி7.307 கி/செ.மீ3, திண்மம்
உருகுநிலை 405 °C (761 °F; 678 K)
கொதிநிலை~ 390 °C (734 °F; 663 K) பதங்கமாகும்[1]
3.9 x 10−5 கி/100 மி.லி
கரைதிறன்ஈதர், அசிட்டோன், ஆல்க்காலில் கரையாது
−28.6•10−6 செ.மீ3/மோல்
கட்டமைப்பு
மூலக்கூறு வடிவம்
தீங்குகள்
ஈயூ வகைப்பாடுமிக நச்சு (T+)
சுற்றுச்சூழலுக்கு
அபாயமானது (N)

"483230 Mercury(I) bromide 99.9+ %". Sigma-Aldrich. பார்க்கப்பட்ட நாள் 2008-05-30.</ref>

தீப்பற்றும் வெப்பநிலைதீப்பற்றாது
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள்பாதரச(I) புளோரைடு
பாதரச(I) குளோரைடு
பாதரச(I) அயோடைடு
ஏனைய நேர் மின்அயனிகள்துத்தநாக புரோமைடு
காட்மியம் புரோமைடு
பாதரச(II) புரோமைடு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  N verify (இதுY/N?)

இச்சேர்மத்தினுடைய மிகவும் அரிய கனிம வடிவம் குழ்மினைட்டு Hg2(Br,Cl)2 ஆகும்.

தயாரிப்பு

தனிமநிலை பாதரசத்துடன் தனிமநிலை புரோமின் சேர்த்து ஆக்சிசனேற்ற வினைக்கு உட்படுத்தி அல்லது சோடியம் புரோமைடுடன் பாதரச(I) நைட்ரேட்டு கரைசல் சேர்த்து வினைபுரியச் செய்தும் பாதரச(I) புரோமைடைத் தயாரிக்கலாம்[1].

கட்டமைப்பு

நேர்கோட்டு X-Hg-Hg-X அலகுகளை பொதுவாகக் கொண்டிருக்கும் மற்ற பாதரச(I) சேர்மங்களைப் போல Hg2Br2 சேர்மமும் 249 பைக்கோமீட்டர் நீளம் கொண்ட Hg-Hg பிணைப்பும் (பாதரசம் உலோகத்தில் Hg-Hg பிணைப்பு நீளம் 300 பைக்கோமீட்டர் ஆகும்) 271 பைக்கோமீட்டர் நீளம் கொண்ட Hg-Br பிணைப்பும் கொண்ட நேர்கோட்டு BrHg2Br அலகுகளைக் கொண்டுள்ளது[3]. ஒட்டுமொத்த ஒருங்கிணைப்பில் ஒவ்வொரு பாதரச அணுவும் எண்கோண வடிவத்தில் உள்ளன. அருகிலுள்ள இரண்டு புரோமின்களுடன் மேலும் 332 பைக்கோமீட்டர் நீளத்துடன் கூடுதலாக நான்கு புரோமின் அணுக்கள் காணப்படுகின்றன[3] The compound is often formulated as Hg22+ 2Br. உண்மையில் இது மூலக்கூற்று சேர்மம் என்றாலும் Hg22+ 2Br என்று முறைப்படுத்தப்படுகிறது.

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=பாதரச(I)_புரோமைடு&oldid=2688472" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்