பாகெலாலான் வானூர்தி நிலையம்

சரவாக் மாநிலத்தில் உள்ள ஒரு வானூர்தி நிலையம்

பாகெலாலான் வானூர்தி நிலையம் (ஐஏடிஏ: BKMஐசிஏஓ: WBGQ); (ஆங்கிலம்: Ba'kelalan Airport (KIA); மலாய்: Lapangan Terbang Ba'kelalan) என்பது மலேசியா, சரவாக் மாநிலத்தில் லிம்பாங் பிரிவு, லாவாஸ் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு வானூர்தி நிலையம் ஆகும்.[2]

பாகெலாலான் வானூர்தி நிலையம்
Ba'kelalan Airport

  • ஐஏடிஏ: BKM
  • ஐசிஏஓ: WBGQ
    BKM WBGQ is located in மலேசியா
    BKM WBGQ
    BKM WBGQ
    பாகெலாலான் வானூர்தி
    நிலையத்தின் அமைவு
சுருக்கமான விபரம்
வானூர்தி நிலைய வகைபொது
இயக்குனர்மலேசிய வானவூர்தி நிலையங்கள் நிறுவனம்
Malaysia Airports Holdings Berhad
சேவை புரிவதுபாகெலாலான்; சரவாக், மலேசியா
நேர வலயம்மலேசிய நேரம் ({{{utc}}})
உயரம் AMSL2,900 ft / 884 m
ஆள்கூறுகள்03°59′19″N 115°37′08″E / 3.98861°N 115.61889°E / 3.98861; 115.61889
ஓடுபாதைகள்
திசைநீளம்மேற்பரப்பு
மீட்டர்அடி
05/235491,801தார்
புள்ளிவிவரங்கள் (2015)
Passenger3,435 ( 6.1%)
விமான நகர்வுகள்328 ( 1.2%)
Source: Aeronautical Information Publication Malaysia[1]

ஒன்பது கிராமங்களின் குழுமத்தை பாகெலாலான் என்று அழைக்கிறார்கள். இந்தக் கிராமக் குழுமம் மலிகான் பீட பூமியில் (Maligan Highlands); கடல் மட்டத்தில் இருந்து சுமார் 3,000 அடி (910 மீ) உயரத்தில் உள்ளது.

இந்தோனேசியா கலிமந்தான் எல்லையில் இருந்து 4 கி.மீ. தொலைவிலும்; சரவாக் லாவாஸ் நகரத்தில் இருந்து 150 கி.மீ. தொலைவிலும் உள்ளது.[3]

பொது

பாகெலாலான் மலைப்பகுதியில் உள்ள ஒன்பது கிராமங்களில் வாழும் மக்கள் அனைவரும் லுன் பாவாங் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களுக்கான மருத்துவப் பொருட்கள்; மற்ற அத்தியாவசியப் பொருட்களைக் கொண்டு செல்லவும்; அங்கு உள்ளவர்களை பாரியோ; லாவாஸ்; மிரி நகரங்களுக்குக் கொண்டு வரவும் இந்த வானூர்தி நிலையம் பயன்படுகிறது. 19 இருக்கைகள் கொண்ட சிறிய விமானங்கள் பயன்படுத்தப் படுகின்றன.

பாகெலாலான் எனும் பெயர் கெலாலான் நதியின் (Kelalan River) பெயரில் இருந்து உருவானது. ’பா’ எனும் முன்சொல் லுன் பவாங் மொழியில் ஈரமான நிலங்கள் என்று பொருள். இரண்டும் சேர்ந்து பாகெலாலான் என்று ஓர் இடத்தின் பெயரானாது.[4]

மலை உப்பு

குளிர்ந்த மலைக் காலநிலையில், இங்கு ஆப்பிள், மாண்டரின் ஆரஞ்சு போன்ற பழ மரங்கள் வளர்க்கப் படுகின்றன. இங்கு அரிசியும் உற்பத்தி செய்யப்படுகிறது.

மேலும் மலை உப்பு அருகிலுள்ள மலைகளில் இருந்து கிடைக்கிறது. இந்தப் பகுதியில் வாழும் மக்கள் அனைவரும் கிறிஸ்தவ இனத்தைச் சேர்ந்தவர்கள்.[4][5]

சேவை

விமானச் சேவைகள்சேரும் இடங்கள்
மாஸ் விங்ஸ்
(MASwings)
பாரியோ வானூர்தி நிலையம்; லாவாஸ் வானூர்தி நிலையம்; மிரி வானூர்தி நிலையம்

விபத்து

  • 2008 செப்டம்பர் 13-ஆம் தேதி. ஒரு விமானம் (DHC-6 Twin Otte) தரையிறங்கும் போது ஓடுபாதையைத் தாண்டிச் சென்று விபத்துக்குள்ளானது. விமானத்தில் இருந்த பதினான்கு பேரும் உயிர் தப்பினர்.[6]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

மேலும் காண்க

🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்