பர்தாப் சிங் கைரோன்

இந்திய தேசிய காங்கிரஸ் அரசியல்வாதி

பிரதாப் சிங் கைரோன் (Partap Singh Kairon, 1901–1965) பஞ்சாப், அரியானா, இமாச்சலப் பிரதேசம் உள்ளடங்கிய பஞ்சாப் மாகாணத்தின் முதலமைச்சராக சனவரி 23, 1956 முதல் சூன் 21, 1964 வரை எட்டு ஆண்டுகள் இருந்தவர். விடுதலைக்குப் பிந்தைய பஞ்சாப் மாகாணத்தின் முன்னேற்றப் பாதையை வகுத்தவர் என அறியப்படுகின்றார். இந்திய விடுதலை இயக்கத்திலும் பங்கேற்று பிரித்தானியப் பேரரசால் இரு முறை சிறை சென்றவர்.

பிரதாப் சிங் கைரோன்
பிரதாப் சிங் கைரோன், 1956
பஞ்சாப் மாநிலத்தின் 3வது முதலமைச்சர்
பதவியில்
23 சனவரி 1956 – 21 சூன் 1964
ஆளுநர்சந்தேஷ்வர் பிரசாத் நாராயண் சிங்
நர்கர் விஷ்ணு காட்கில்
பட்டம் தாணு பிள்ளை
ஹபீஸ் முகமது இப்ராகிம்
முன்னையவர்பீம் சென் சச்சார்
பின்னவர்கோபி சந்த் பார்கவா
(தற்காலிகம்)
தொகுதிசுஜன்பூர் சட்டமன்றத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1 அக்டோபர் 1901
கைரோன், அமிர்தசரஸ்
இறப்பு6 பிப்ரவரி 1965
ரோத்தக்
அரசியல் கட்சிசிரோமணி அகாலி தளம் (1937-1941)
இந்திய தேசிய காங்கிரசு (1941-1965)
பிள்ளைகள்2 மகன்கள் மற்றும் 1 மகள்
பெற்றோர்எஸ். நிகால் சிங்

இளமை வாழ்வு

1901இல் சீக்கிய குடும்பமொன்றில் பர்தாப் சிங் பிறந்தார். பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு காலத்தில் இருந்த பஞ்சாபின் அமிர்தசரசு மாவட்டத்தில் உள்ள இவர் பிறந்த சிற்றூரான கைரோன் இவரது கடைசி பெயராக அமைந்துள்ளது.[1] இவரது தந்தை, நிகால் சிங் கைரோன், இந்த மாகாணத்தில் மகளிர்களுக்கான கல்வியை துவக்குவதில் முன்னோடியாக இருந்தார். பர்தாப் தேராதூனிலுள்ள பிரவுன் கேம்பிரிட்சு பள்ளியிலும் அமிர்தசரசு கல்சா கல்லூரியிலும் கல்வி பயின்றார். பின்னர் அமெரிக்க ஐக்கிய நாடு சென்று அங்குள்ள பண்ணைகளிலும் தொழிலகங்களிலும் பணி புரிந்து தமது செலவிலேயே மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியலில் பட்டமேற்படிப்பு முடித்தார். தவிரவும் கலிபோர்னியா பல்கலைக்கழகம் (பெர்க்லி)யில் பொருளியலில் பட்ட மேற்படிப்பும் முடித்தார். ஐக்கிய அமெரிக்காவில் பின்பற்றப்படும் வேளாண் முறைமைகளால் கவரப்பட்ட பர்தாப் பின்னாட்களில் இந்தியாவில் அந்த முறைமைகளை பின்பற்ற முயற்சி மேற்கொண்டார்.

அரசியல் வாழ்க்கை

குடும்பம்

இறப்பு

1964இல் தன் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை புலனாய்வு செய்த விசாரணை ஆணையம் பெரும்பாலான குற்றங்களிலிருந்து இவரை விடுவித்தது; இருப்பினும் பஞ்சாப் முதலமைச்சர் பதவியிலிருந்து விலகினார். பெப்ரவரி 6, 1965 அன்று தில்லியிலிருந்து அமிர்தசரசு செல்லும் பெரும் தலைநெடுஞ்சாலையில் இரசோயி என்னும் சிற்றூர் அருகே தானுந்தினுள்ளே சூச்சா சிங் பாசி என்றக் கொலையாளியால் சுடப்பட்டு இறந்தார்.[2] பின்னர் கொலைக்குற்றவாளியான பாசி தூக்கிலிடப்பட்டார்.

மேற்சான்றுகள்

வெளி இணைப்புகள்

🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்