பரோடா அரசு

பரோடா அரசு அல்லது பரோடா சமஸ்தானம் (Baroda State), மராத்தியப் பேரரசின் படைத்தலைவர்களான பேஷ்வாக்களின் வழித்தோன்றல்களில் ஒரு கிளையினரான கெயிக்வாட் எனும் தேசஸ்த் பிராமண குலத்தவர்களால் ஆளப்பட்டது.

பரோடா அரசு
બડોદા રિયાસત
बड़ोदा रियासत
சுதேச சமஸ்தானம் பிரித்தானிய இந்தியா
[[மரத்தியப் பேரரசு|]]
1721–1949
கொடிசின்னம்
கொடிசின்னம்
Location of பரோடா சமஸ்தானம்
Location of பரோடா சமஸ்தானம்
1909இல் பரோடா சமஸ்தானம்
வரலாறு
 • நிறுவப்பட்டது1721
 • Accession to India1949
பரப்பு
 • 19213,239 km2 (1,251 sq mi)
Population
 • 192121,26,522 
மக்கள்தொகை அடர்த்தி656.5 /km2  (1,700.4 /sq mi)
தற்காலத்தில் அங்கம்குஜராத், இந்தியா
"A Catalogue of Manuscript and Printed Reports, Field Books, Memoirs, Maps ..." Vol. iv, "Containing the treaties, etc., relating to the states within the Bombay presidency"

பரோடா நகரத்தை தலைநகராகக் கொண்டு, பரோடா அரசு 1721 முதல் 1949 முடிய கெயிக்வாட்களால் ஆளப்பட்டது. பின்னர் பரோடா சுதேச சமஸ்தானத்தின் நிலப்பரப்புகள், விடுதலை இந்தியாவில், 1 மே 1949இல் மும்பை மாகாணத்துடன் இணைக்கப்பட்டது.[1]பரோடா மன்னருடன் ஹைதராபாத் நிஜாம், சம்மு காசுமீர் மன்னர், மைசூர் மன்னர் மற்றும் குவாலியர் மன்னர் ஆகிய ஐவருக்கும் மட்டுமே பிரித்தானிய இந்திய அரசால் 21 பீரங்கிகள் முழங்க சிறப்பு மரியாதை வழங்கப்பட்டது.[2]. தற்போது பரோடா அரசின் பகுதிகள் குஜராத் மாநிலத்தில் உள்ளது.

பரோடா சமஸ்தானத்தின் கொடியுடன், இரண்டாம் சாயாஜி ராவ் வெளியிட்ட வெள்ளி ரூபாய் நாணயம்
மூன்றாம் சாயாஜி ராவின் (ஆட்சிக் காலம் 1875-1939) உருவம் பொறித்த வெள்ளி நாணயம்
1870இல் மகாராஜா காந்தாராவ் கட்டிய மகர்புரா அரண்மனை

பரோடாவின் நிலப்பரப்பு

1896இல் பரோடா அரசின் நிலப்பரப்பு

பரோடா சமஸ்தானத்தின் நிலப்பரப்புகள் தற்கால குஜராத் மாநிலத்தின் தெற்கு பகுதிகளில் 8,182 சதுர கிலோ மீட்டர் பரப்பில் பரந்து காணப்பட்டது. பரோடா சமஸ்தானம் காதி, பரோடா, நவசாரி, அம்ரேலி என நான்கு பிராந்தியங்களாக பிரித்து ஆளப்பட்டது.

மேலும் கடற்கரை பகுதிகளான துவாரகை அருகே அமைந்த ஒகா மற்றும் டையு மற்றும் தாமன் அருகே அமைந்த கொடிநார் பகுதிகளும் பரோடா சமஸ்தானத்தில் அடங்கும்.[3]

வரலாறு

சர் மகாராஜா சாயாஜி ராவ் கெயிக்வாட் III, பரோடா சமஸ்தானம்

மராத்தியப் பேரரசின் காலத்தில் தற்கால குஜராத்தின் பெரும் பகுதிகளை மராத்தியர்கள் கைப்பற்றியிருந்தனர். மராத்தியப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின்னர், பேஷ்வாக்கள் என்ற மராத்திய படைத்தலைவர்கள் மராத்திய பேரரசின் பல்வேறு பகுதிகளை பிரித்துக் கொண்டு தன்னாட்சியுடன் ஆண்டனர். அவற்றில் மராத்திய பேஷ்வா படைத்தலைவர் பிலாஜி கெயிட்வாட் என்பவரால் 1721இல் பரோடா அரசு நிறுவப்பட்டது.[4][5]

1803–1805இல் நடைபெற்ற இரண்டாம் ஆங்கிலேய மராத்தியப் போருக்குப் பின்னர், குஜராத்தின் பெரும்பகுதிகளை ஆங்கிலேய கம்பெனி ஆட்சியாளர்களால் வெற்றி கொள்ளப்பட்ட போதிலும், பரோடா அரசின் மன்னர், ஆங்கிலேயர்கள் வகுத்த துணைப் படைத்திட்டத்தை ஏற்றுக் கொண்டு, பிரித்தானிய இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் தலையிடாது, பரோடா அரசை தொடர்ந்து ஆண்டு வந்தனர்.ஹைதராபாத் நிஜாம், ஜம்மு காஷ்மீர், மைசூர் மற்றும் குவாலியர் சுதேச சமஸ்தானங்கள் போன்று, பிரித்தானிய இந்தியாவின் நான்கு பெரிய சமஸ்தானங்களில் பரோடா சமஸ்தானமும் ஒன்றாகும்.

பரோடாவின் மகாராஜா மூன்றாம் சாயாஜி கெயிக்வாட் அரசாட்சியின் போது, பரோடா சமஸ்தானத்தில் 13 கிளைகளுடன் பேங்க் ஆப் பரோடா 20 சூலை 1908இல் துவக்கப்பட்டது. பின்னர் இவ்வங்கி 19 சூலை 1969இல் இந்திய அரசால் நாட்டுடமையாக்கப்பட்டது. தற்போது இவ்வங்கி தற்போது இந்தியாவின் அரசுடமை வங்கிகளில் மூன்றாவது பெரிய வங்கியாகும்.[6]

இருபதாம் நூற்றாண்டு

மூன்றாம் சாயாஜிராவ் கெயிக்வாட் கட்டிய லட்சுமி விலாஸ் அரண்மனை, ஆண்டு 1890

இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் பரோடா சமஸ்தானம், பிரித்தானிய இந்தியாவின் தலைமை ஆளுனரின் நேரடி கட்டுப்பாட்டில் வந்தது.[7] 1911ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி பரோடா அரசின் மக்கள் தொகை 20, 32,798 ஆக இருந்தது.[8]

அம்பேத்கர் தனது சுயசரிதை நூலிலின் இரண்டாம் அத்தியாயத்தில், பரோடா சமஸ்தானத்தில் தீண்டாமை பற்றி குறிப்பிட்டுள்ளார்.[9]

1937இல் ஜமீந்தார்கள் ஆண்ட ரேவா காந்தா, சூரத், நாசிக், கைரா மற்றும் தாணா பகுதிகள் பரோடா-குஜராத் முகமையுடன் இணைக்கப்பட்டது.[10] இந்திய விடுதலைக்குப் பின்னர் இந்திய அரசின் உள்துறை அமைச்சராக இருந்த சர்தார் வல்லபாய் படேலின் பெரு முயற்சியால் 1949இல் அனைத்து சுதேச சமஸ்தானங்கள் இந்தியாவின் பெருநிலப்பரப்புடன் இணைத்த போது, 15,000 சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்பு கொண்டுருந்த பரோடா அரசும் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது.[11]இறுதியாக 5 நவம்பர் 1944இல் பரோடா-குஜராத் முகமையை மேற்கு இந்திய அரசுகளின் முகமையுடன் இணைக்கப்பட்டு, பரோடா சட்டமன்றம் அமைக்கப்பட்டது.

பரோடா அரசின் தொடருந்து சேவைகள்

கெயிக்வாட் பரோடா சுதேச சமஸ்தான அரசின் தொடருந்து சேவை 1862இல் துவக்கப்பட்டது. எட்டு மைல் நீளம் கொண்ட முதல் இருப்புப் பாதை தோப்ஹோலி – மியாகாம் இடையே நிறுவப்பட்டது.[12] பின்னர் மீட்டர் கேஜ் இருப்புப்பாதை அமைக்கப்பட்டது. இந்திய விடுதலைக்குப் பின்னர் பரோடா சமஸ்தானத்தின் அனைத்து இருப்புப் பாதைகளும் இந்திய அரசின் இருப்புப்பாதையுடன் 1949இல் இணைக்கப்பட்டது.

பரோடா அரசின் கப்பல் சேவைகள்

சூரத் நகரத்தின் தெற்கில் 40 மைல் தொலைவில் பில்லிமோரா துறைமுகத்தில் பரோடா சமஸ்தானத்தின் ஐம்பது சரக்கு மற்றும் பயணிகள் கப்பல்கள் இயங்கியது.[4]

பரோடா அரசின் மன்னர்கள்

கீர்த்தி மந்திர், பரோடா, கெயிக்வாட்களின் காட்சியகம்
  • பாலாஜிராவ் கெயிக்வாட் (1721–1732)
  • தமாஜி ராவ் கெயிக்வாட் (1732–1768)
  • முதலாம் சாயாஜிராவ் கெயிக்வாட் (1768–1778)
  • பதேசிங்ராவ் கெயிக்வாட் (1778–1789)
  • மனாஜிராவ் கெயிக்வாட் (1789–1793)
  • கோவிந்தராவ் கெயிக்வாட் (1793–1800)
  • ஆனந்தராவ் கெயிக்வாட் (1800–1818)
  • இரண்டாம் சாயாஜிராவ் கெயிக்வாட் (1818–1847)
  • கணபதிராவ் கெயிக்வாட் (1847–1856)
  • காந்தராவ் கெயிக்வாட் (1856–1870)
  • மால்கர்ராவ கெயிக்வாட் (1870–1875)
  • மூன்றாம் சாயாஜிராவ் கெயிக்வாட் (1875–1939)
  • பிரதாப்சிங் ராவ் கெயிக்வாட் (1939–1951)
  • இரண்டாம் பாதேசிங் ராவ் கெயிக்வாட் (1951–1988)
  • இரஞ்சித்சிங் பிரதாப்சிங் கெயிக்வாட் (1988–2012)
  • சமர்ஜித்சிங் ரஞ்சித்சிங் கெயிக்வாட் (2012–)

படக்காட்சிகள்

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Baroda State
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

மேலும் படிக்க

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=பரோடா_அரசு&oldid=3949424" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்