பருவநிலை மாற்றம் தொடர்பான நாடுகளுக்கிடையேயான ஆறாவது மதிப்பீட்டு அறிக்கை

ஆறாவது மதிப்பீட்டு அறிக்கை (AR6) (IPCC Sixth Assessment Report) என்பது ஐக்கிய நாடுகள் பருவநிலை மாற்றத்துக்கான பன்னாட்டு அரசுக் குழு அறிக்கைகள் தொடரின் ஆறாவது அறிக்கை ஆகும். இந்த அறிக்கை புவி வெப்பமயமாதல் மற்றும் பருவநிலை மாற்றம் குறித்த அறிவியல், தொழில்நுட்ப, மற்றும் சமூக-பொருளாதார தகவல்களை மதிப்பிடும் நோக்கம் கொண்டது ஆகும். மொத்தம் 234 விஞ்ஞானிகள் இறுதி அறிக்கையில் பங்களித்துள்ளனர்.[1]

பணிக்குழு 1 காலநிலை மாற்றத்தின் இயற்பியல் அறிவியல் அடிப்படையை 9 ஆகஸ்ட் 2021 அன்று வெளியிட்டது.[2] இந்த அறிக்கையை உருவாக்கியதில் பங்கு பெற்ற 234 அறிஞர்கள் [3] 14,000 க்கும் மேற்பட்ட அறிவியல் ஆவணங்களிலிருந்து 3,949 பக்க அறிக்கையை உருவாக்கினர். இந்த அறிக்கைக்கு 195 அரசுகள் ஒப்புதல் அளித்தன.[4] கொள்கை வகுப்பாளர்களுக்கான சுருக்கம் விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்டு 6 ஆகஸ்ட் 2021 வரையிலான ஐந்து நாட்களில் அரசாங்கங்களால் வரிக்கு வரி ஒப்புக்கொள்ளப்பட்டது.

அமைப்பு

ஆறாவது அறிக்கையானது மூன்று பணிக்குழுக்களின் அறிக்கைகள் மற்றும் ஒரு தொகுப்பு அறிக்கையால் ஆனது. 2016 ஏப்ரல் மாதத்தில், கென்யாவின் நைரோபியில் நடந்த 43 வது அமர்வில், மதிப்பீட்டு அறிக்கை 6-இல் இடம் பெற வேண்டிய சிறப்பு அறிக்கைகளுக்கான தலைப்புகள் முடிவு செய்யப்பட்டன.[5][6]

உள்ளடக்கம்

காலநிலை மாற்றத்தின் இயற்பியல் அறிவியல் அடிப்படை

கொள்கை வகுப்பாளர்களுக்கான சுருக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளபடி, 1850-1900 சராசரியுடன் ஒப்பிடும்போது உலகளாவிய சராசரி வெப்பநிலையின் மாறுபாடு

காலநிலை மாற்றத்தின் இயற்பியல் அறிவியல் அடிப்படையிலான பணிக்குழு 1 அறிக்கை, மனித பசுமை இல்ல வாயு உமிழ்வின் காரணங்கள் மற்றும் விளைவுகள் குறித்த காலநிலை அறிவியலின் அடிப்படையான ஒருமித்த கருத்தை மையமாகக் கொண்டது. இது 9 ஆகஸ்ட் 2021 இல் வெளியிடப்பட்டது.

முந்தைய மதிப்பீடுகளுடன் ஒப்பிடுகையில், இந்த அறிக்கையில் காலநிலை மாற்றத்தின் பிராந்திய விளைவுகள் பற்றிய விரிவான விவரங்கள் அடங்கியுள்ளன.[7] எனினும் கிழக்கு மற்றும் மத்திய வட அமெரிக்காவின் காலநிலை மாற்றம் குறித்து அதிக ஆய்வுகள் தேவைப்படுகின்றன. 2100-இல் கடல் மட்ட உயர்வு 1/2 மீட்டர் முதல் ஒரு மீட்டர் அளவுடையதாக இருக்கலாம். எனினும், இரண்டு முதல் ஐந்து மீட்டர்கள் உயர்வு இருக்கலாம் என்ற யூகம் நிராகரிக்கப்படவில்லை, ஏனெனில், பனிக்கட்டி உருகுதலின் உறுதியற்ற செயல்முறைகள் இன்னும் சரியாக புரிந்து கொள்ளப்படவில்லை.[8]

வளிமண்டலத்தில் கார்பனீராக்சைடின் அளவு ஒவ்வொரு முறை இரட்டிப்பாதலுக்கும் காலநிலை உணர்திறன் 2.5 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை இருக்கலாம் என அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. புவிசார் அரசியல் முதல் முறையாக காலநிலை மாதிரிகளில் சேர்க்கப்பட்டுள்ளது. ஐந்து பகிரப்பட்ட சமூக பொருளாதார பாதைகள்,[9] பகிரப்பட்ட சமூக பொருளாதார பாதை 1 -1.9 என்பது 1.5 ° செல்சியசிற்குக் கீழாக வெப்பமடையும் சூழலை மக்கள் எப்படி மாதிரியாகக் கொள்வது என்பது ஒரு புதிய பாதையாகும்.[8] அறிக்கை 1.5 ° செல்சியசு மற்றும் 5 ° செல்சியசுக்கு இடையில் சாத்தியமான வெப்பநிலை உயர்வு வரம்பைக் குறைக்கிறது.[9] 2040 க்கு முன்னர் 1.5 ° செல்சியசு உயர்வை அடைய வாய்ப்புள்ளது.[8] முந்தைய பருவநிலை மாற்ற பன்னாட்டு அறிக்கைகளை விட கூட்டு தாக்கங்களின் அச்சுறுத்தல்கள் அதிகமாக மதிப்பிடப்படுகின்றன. புகழ்பெற்ற வளைப்பந்தாட்ட மட்டை வரைபடம் நீட்டிக்கப்பட்டுள்ளது.[8] தீவிர வானிலை வெப்பநிலைக்கு ஏற்ப அதிகரிக்கும் மற்றும் ஒன்றோடொன்று கலந்திணைவதால் உருவாகும் தீவிர வானிலை நிகழ்வுகள் சமூகத்தில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும்.

உலகளாவிய கார்பன் உமிழ்வு மதிப்பீடு 1.5 டிகிரி செல்சியசுக்குக் கீழ் இருக்க 500 பில்லியன் அதிக டன் பைங்குடில் வளிம வாயுக்கள் போதுமானதாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு 2050 க்கு முன்பு உலகம் முழுவதும் நிகர சுழியமாக இருக்க வேண்டும்.[3] மீத்தேன் உமிழ்வை வேகமாக குறைப்பது மிகவும் முக்கியம் என்று இந்த அறிக்கை கூறுகிறது.[3]

வரவேற்பு

செயற்குழு 1 இன் அறிக்கை 2021 ஐக்கிய நாடுகள் பருவநிலை மாற்ற மாநாட்டில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.[3]

அறிவியலில்

காலநிலை மாற்றத்தின் இயற்பியல் அறிவியல் அடிப்படையின் வெளியீடு வடக்கு அரைக்கோளத்தில் கோடையில், மேற்கு வட அமெரிக்க வெப்ப அலை, ஐரோப்பாவில் வெள்ளம், இந்தியா மற்றும் சீனாவில் தீவிர மழைப்பொழிவுகள் போன்ற தீவிர வானிலை நிகழ்வுகள் மற்றும் காட்டுத்தீ போன்ற பிற நிகழ்வுகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.[1][10] சில விஞ்ஞானிகள் இந்த தீவிர வானிலை நிகழ்வுகளை அறிக்கையில் எழுதுவதற்குப் பயன்படுத்தப்படும் மாதிரிகளில் தீவிர நிகழ்வுகள் தோன்றுவதில் உள்ள வீதத்தில் சந்தேகத்தை ஏற்படுத்துவதாக விவரிக்கின்றனர். நேரடி அனுபவமானது ஒருமித்த அறிவியலின் அனுமானத்தை விடக் கடுமையானதாக இருக்கலாம் என நிரூபிக்கப்பட்டுள்ளது.[10]

அரசியலில்

பணிக்குழு 1 அறிக்கையை வெளியிட்ட பிறகு, ஐரோப்பிய ஒன்றிய துணைத் தலைவர் பிரான்ஸ் டிம்மர்ஸ் கைகளை மீறிச் செல்ல எத்தணிக்கும் பருவநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்த மிகவும் தாமதமாகிவிடவில்லை என்று கூறியுள்ளார்.[11] பூமியின் எதிர்காலத்திற்கு அடுத்த பதின்ம ஆண்டு காலம் மிகவும் முக்கியமானதாக இருக்கும் என்று இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறினார்.[12]

அமெரிக்காவின் தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாக அமைப்பின் நிர்வாகி ரிக் ஸ்பின்ராட், தனது நிறுவனம் "இந்த ஆறாவது மதிப்பீட்டு அறிக்கையின் புதிய நுண்ணறிவுகளைப் பயன்படுத்தி, சமூகங்களை தயார்படுத்துவதற்கும், பதிலளிப்பதற்கும், பருவநிலை மாற்றத்திற்கு ஏற்ப மாற்றுவதற்கும் செய்யும் வேலைகளைத் தெரிவிக்கும்" என்று கூறியுள்ளார்.[13]

காலநிலை ஆர்வலர் கிரெட்டா துன்பெர்க் இந்த அறிக்கை "ஆயிரக்கணக்கான முந்தைய ஆய்வுகள் மற்றும் அறிக்கைகளில் இருந்து நமக்கு ஏற்கனவே தெரிந்ததை உறுதிப்படுத்துகிறது - நாம் அவசர நிலையில் உள்ளோம்" என்று சுட்டிக்காட்டியுள்ளார்.[14]

ஐக்கிய நாடுகள்

ஐ.நா.வின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குத்தேரசு, இந்த அறிக்கையை "மனிதகுலத்திற்கான குறியீடு" என்று அழைத்தார்.[15]

மேற்கோள்கள்

🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்