பருத்தித்துறை பிரதேச செயலாளர் பிரிவு

இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள பிரதேச செயலாளர் பிரிவு

பருத்தித்துறை பிரதேச செயலாளர் பிரிவு அல்லது வடமராட்சி வடக்கு பிரதேச செயலாளர் பிரிவு (Vadamaradchi North Divisional Secretariat) இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள ஒரு நிர்வாக அலகாகும். இது யாழ்ப்பாணக் குடாநாட்டின் வடமராட்சிப் பிரிவில் அமைந்துள்ளது. இப் பிரிவு துணை நிர்வாக அலகுகளாக 35 கிராம அலுவலர் பிரிவுகளைக் கொண்டுள்ளது. துன்னாலை, தும்பளை, புலோலி, மந்திகை, பருத்தித்துறை, அல்வாய், பொலிகண்டி, வல்வெட்டித்துறை, கெருடாவில், தொண்டைமானாறு, வியாபாரிமூலை, கற்கோவளம், வல்லிபுரம் ஆகிய ஊர்கள் இப் பிரதேச செயலாளர் பிரிவினுள் அடங்குகின்றன. இந்தியப் பெருங்கடல் இதன் வடக்கு, கிழக்கு ஆகிய எல்லைகளில் உள்ளது. மேற்கில் தொண்டைமானாறு நீரேரியும், தெற்கில் கரவெட்டி, மருதங்கேணி ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளும் உள்ளன. இதன் நிர்வாகத் தலைமையகம் பருத்தித்துறை நகரில் அமைந்துள்ளது.

இதன் பரப்பளவு 29 சதுர கிலோமீட்டர் ஆகும்[1].

குறிப்புக்கள்

இவற்றையும் பார்க்கவும்

வெளியிணைப்புக்கள்

🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்