பரிகோட்

பாகித்தானிலுள்ள ஒரு நகரம்

பரிகோட் ( Barikot ) என்பது பாக்கித்தானின் கைபர் பக்துன்க்வாவில் உள்ள சுவாத் ஆற்றின் நடுவில் அமைந்துள்ள ஒரு நகரமாகும். இது மிங்கோரா மற்றும் புத்கார தூபியிலிருந்து சுமார் 20 கிமீ (12 மைல்) தொலைவில் அமைந்துள்ளது.[1] இது சுமார் 25,000 மக்கள்தொகை கொண்ட மத்திய சுவாத் பள்ளத்தாக்கின் நுழைவு நகரமாகும். இது பேரரசர் அலெக்சாந்தர் [2] கைப்பற்றிய ஒரு பழங்கால கோட்டையின் இருப்பிடமாகும். செப்புக் காலத்தின் எச்சங்களும் [3] ஆரம்ப கால தொல்பழங்காலத்தின் எச்சங்களும் இங்கே காணப்படுகின்றன.[4] இத்தாலியைச் சேர்ந்த கிழக்கின் தொல்லியலாளாரான குசிப் துசி என்பவரால் நிறுவப்பட்ட இத்தாலிய தொல்லியல் ஆய்வு நிறுவனம் (ISMEO என மறுபெயரிடப்பட்டது) 1984 முதல் பரிகோட்டின் கீழ் உள்ள பழங்கால நகரமான பசிராவின் இடிபாடுகளை தோண்டி வருகிறது.

பரிகோட்
بریکوٹ
ஆள்கூறுகள்:
நாடு Pakistan
மாகாணம் கைபர் பக்துன்வா மாகாணம்
மாவட்டம்சுவாத்
வட்டம்பரிகோட்
ஏற்றம்
808 m (2,651 ft)
நேர வலயம்ஒசநே+5 (பாகித்தானிய சீர் நேரம்)

அகழ்வாராய்ச்சிகள்

பரிகோட்டின் கீழ் உள்ள பழமையான அடுக்கு கிமு 1100-1000 தேதியிடப்பட்ட கிராமம் என்று கருதப்பட்டது. [5] ஆனால் முந்தைய செப்புக் காலத்தின் குழிக் கட்டமைப்புகள் கிமு 1700 முதல் இருக்கலாம் எனக் கூறுகின்றன. [6]

இங்கு ஆரம்பகால இரும்பு யுகத்தின் முந்தைய நகர்ப்புற அடுக்குகள் கண்டுபிடிக்கப்பட்டன. மேலும் அவை கிமு பதினொன்றாம்-எட்டு நூற்றாண்டுகள் எனத் தேதியிடப்பட்டன. தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் பரிகோட்டில் (கீழ் பகுதி மற்றும் உள்ளரண்) வலுவூட்டப்பட்ட நகர்ப்புற குடியிருப்பு கிமு முதல் புத்தாயிரம் ஆண்டின் நடுப்பகுதியில் நிறுவப்பட்டதைக் கண்டறிந்தனர். [7]

அகழ்வாராய்ச்சியில் நாணயங்கள், மண்பாண்டங்கள் மற்றும் ஆயுதங்கள் உட்பட குடியிருப்பாளர்களின் அன்றாட வாழ்க்கையை ஆவணப்படுத்தும் பல கலைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பல பெரிய கலைப்பொருட்கள், புத்தர் தனது குதிரையான காந்தகத்தில் சவாரி செய்யும் ஒரு பெரிய பச்சை நிற சிலை மற்றும் இரண்டு சிங்கங்களுடன் ஒரு தாது கோபுரத்தின் செதுக்குதல் ஆகியவை பசிராவின் பௌத்த வரலாற்றை ஆவணப்படுத்துகின்றன. நீண்ட, சுருண்ட கூந்தலுடன் கையில் மதுக் கோப்பையையும், துண்டிக்கப்பட்ட ஆட்டின் தலையையும் கையில் கொண்டிருக்கும் பெயர் அறியப்படாத தெய்வத்தைச் சித்தரிக்கும் மற்றொரு சிலை, கிரேக்கக் கடவுளான டயோனிசசு அல்லது மற்றொரு உள்ளூர் தெய்வத்தையோ குறிக்கலாம். [8]

செப்புக் காலம் (சுமார் 1700-1400 கி.மு)

பரிகோட்டில் கிமு 1700 முதல் 1400 வரை மனிதர்கள் இருந்ததற்கான முதல் தடயங்கள் கிடைத்துள்ளன. ஜியோர்ஜியோ ஸ்டாகுல் (1987) என்பவர் தனது கண்டுபிடிப்புகளில், சுவாத் காலகட்டம் IV க்கு சொந்தமானது என்று அறிவித்தார். [9] இவை கிமு 1700 முதல் சான்றளிக்கப்பட்ட குழிகளாகும். [10]

பிற்கால வெண்கலம்/இரும்புக் காலம் (சுமார். 1200-800 கி.மு)

பரிகோட்டின் (பசிரா). மீதமுள்ள கோட்டை இடிபாடுகள்

2016-2017 ஆம் ஆண்டு அகழ்வாராய்ச்சிப் பணிகளின் போது, இத்தாலிய தொல்பொருள் ஆராய்ச்சிகள் பிற்கால வெண்கல காலத்திலிருந்து இரும்புக் காலம் வரையிலான இடைக்காலத்தை அடையாளம் காண முடிந்தது. இது சுமார் 1200-800 கி.மு. எனக் கணிக்கப்பட்டன. அங்கு தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள், குடியிருப்பு கட்டமைப்புகள், பட்டறைகள், பொம்மை வண்டி, இரு-தட்டையான மட்பாண்டங்கள், சிறிய பாத்திரங்கள், கற்கருவிகள் மற்றும் வெட்டப்பட்ட மட்பாண்டங்கள் ஆகியவற்றைக் கண்டறிந்தனர். இவையனைத்தும் சுமார் கிமு 1021 முதல் 1196 க்கும் இடைப்பட்டக் காலத்தைச் சேர்ந்தவை எனவும் கணித்தனர். [11]

இந்தக் காலத்தில், சுமார் கிமு 1200 முதல் 800 வரை, ஒரு பெரிய குடியேற்றம் (சுமார் 15 ஹெக்டேர்) இருந்திருக்கலாம் என்பதை தொல்பொருள் தரவுகள் காட்டுகின்றன. ஒரு மலை உச்சியில் உள்ள அரண்கள், ஒரு உள் கோட்டை, மற்றும் ஒரு விரிவான வெளிப்புற கல்லறை ஆகியவற்றை கண்டறிந்தனர். [9]

கைவிடுதல் கட்டம் (சுமார். 800-500 கி.மு)

இரும்புக் காலத்திற்குப் பிறகு, கிமு 750 மற்றும் 650 இல் குடியேற்றத்தில் மண் அரண் இடிந்து விழுந்திருக்கும். பின்னர் 650 மற்றும் 500 க்கு இடையில் வண்டல் இந்த இடத்தை மூடியதால் தளம் கைவிடப்பட்டது மற்றும் இடைநிலையில் வண்டல் இடத்தை மூடியது.

இரும்புக் காலத்திற்குப் பிறகு, குடியேற்றமானது மேக்ரோஃபேஸ் 1c இல் அதன் மண் அரண் இடிந்து விழுந்தது. கிமு 750 மற்றும் 650 இல், வண்டல் சூழ்ந்ததால் தளம் கைவிடப்பட்டது.[12]

நகரத்தின் ஆரம்பமும் வளர்ச்சியும் (சுமார் 500-350 கி.மு)

குண்டாய் மலையின் உச்சியில் பசிரா கோட்டையும் நகரத்தின் மீதியிருக்கும் பகுதிகளும்.

நகரம் கைவிடப்பட்ட பிறகு, நகரத்தின் மீள் குடியேற்றம் கிமு 500 மற்றும் 450 க்கு இடைப்பட்ட காலப்பகுதியிலும், அகாமனிசியப் பேரரசின் ஆரம்பக் கட்டமான கி.மு 450 முதல் 350 வரையிலும் இருந்தது எனக் கண்டறியப்பட்டது. தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் பரிகோட்டில் இந்த கட்டத்தில், அகாமனியர்களின் பொதுவான ஆடம்பர மண்பாண்டங்களுடன், ஆடம்பரமற்ற இந்திய மண்பாண்டங்கள் உட்பட பல உள்ளூர் கண்ணாடி பொருட்களையும் கண்டெடுத்தனர். [12]

பிராந்தியமயமாக்கல் கட்டம் (சுமார் 350-250 கி.மு.)

பரிகோட்டின் இடிபாடுகள்.

உரோமானிய வரலாற்றாசிரியரான கர்டியஸ் ரூபஸ் போன்ற கிரேக்க மற்றும் லத்தீன் ஆசிரியர்கள், இந்தக் காலத்தைப் பற்றி பேசுகையில் (கிமு 350 முதல்,சுவாத் மற்றும் காந்தாரப் பகுதி இந்த காலகட்டத்தில் அகாமனியர்களால் கட்டுப்படுத்தப்படவில்லை என்கின்றனர். அஸ்ஸகெனோய் என்று அழைக்கப்படும் ஒரு பழங்குடியினம் மற்ற இந்திய பழங்குடியினருடன் இணைந்து இப்பகுதியை ஆட்சி செய்தது. இத்தாலிய தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் இந்த கட்டத்தில் அகாமனியர்கள் காலத்திய பீங்கான் வடிவங்கள் முற்றிலும் மறைந்துவிட்டதாக கருதுகின்றனர். ஆனால் இந்திய மண்பாண்டங்கள் பரிகோட்டில் பயன்பாட்டில் இருந்துள்ளன. இது கி.மு. 350 முதல் 250 வரையிலான காலமாகும். மேலும் இந்த காலகட்டத்தில் (கிமு 327 ) இலையுதிர்காலத்தில் பரிகோட் (பசிரா) மீது மாசிடோனிய முற்றுகை ஏற்பட்டது. [13] மேலும் ஒரு ஆராய்ச்சியில் சுமார் 349-282 கி.மு தேதியிட்ட மௌரிய நாணயம் கண்டுபிடிக்கப்பட்டது.[14]

மௌரிய மற்றும் கிரேக்க-பாக்திரிய இராச்சியங்கள் இணைந்த காலக்கட்டம் (சுமார் 250-150 கி.மு.)

பரிகோட்டின் கலைப்பொருள்.

2011 இல் தொடங்கி, தளத்தின் தென்மேற்கு மூலையில் நடந்த ஒரு அகழ்வாராய்ச்சி எதிர்பார்த்ததை விட பல பழைய குடியிருப்புகளைக் கண்டறிந்தது. இந்திய-கிரேக்கத்திற்கு முந்தைய நிலை கிமு 3 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் அல்லது மௌரிய சகாப்தத்தின் நடுப்பகுதியில் தேதியிட்டது. [15] இந்தக் காலத்தில், பரிகோட் மௌரிய மற்றும் கிரேக்க-பாக்திரிய இராச்சியங்களை இணைக்கும் அரசியல் மற்றும் வணிக வலைப்பின்னலின் ஒரு பகுதியாக இருந்தது. ஏனெனில் கிரேக்க-பாக்திரிய மட்பாண்ட வடிவங்கள் ஐ கனௌம் பகுதியைப் போலவே வடக்கு ஆப்கானித்தான் மற்றும் மத்திய ஆசியாவுடன் தெளிவான உறவுகள் இருந்ததை தளங்கள் காட்டியது. [16]

பழைய புத்தக் கோயில்

திசம்பர் 2021 இல், இத்தாலியின் கா போசுகரி பல்கலைக்கழகத்தின் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களும், இத்தாலிய தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களும், பாக்கித்தானின் தொல்பொருள் மற்றும் அருங்காட்சியகங்களின் மாகாணத் துறையுடன் இணைந்து, முனைவர் லூகா மரியா ஒலிவியேரி தலைமையில், பரிகோட்டில் (பண்டைய பசிரா) பழமையான புத்தக் கோவிலைக் கண்டுபிடித்ததாக அறிவித்தனர். இது கிமு 250 இல் மௌரியர் காலத்தில் அசோகரின் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டதாக அவர்கள் கூறினர். கிமு இரண்டாம் நூற்றாண்டின் மத்தியில் இந்தோ-கிரேக்க முதாலாம் மெனாண்டரின் ஆட்சியின் போது இந்தக் கோயில் இன்னும் செயல்பாட்டில் இருந்தது கண்டறியப்பட்டது. ஆனால் பிற்காலத்தில் அது மேம்படுத்தப்பட்டாலும், அது பொது சகாப்தத்தின் மூன்றாம் அல்லது நான்காம் நூற்றாண்டு வாக்கில் முடிவுக்கு வந்தது. நிலநடுக்கம் காரணமாக குசான ஆட்சியாளர்களால் நகரம் கைவிடப்பட்டது. இது இதுவரை பாக்கித்தானில் கண்டுபிடிக்கப்பட்ட ஆரம்பகாலக் கோவிலாகும். மேலும் இது கிமு 3 ஆம் நூற்றாண்டிலிருந்து சுவாத் பகுதியில் பௌத்தம் இருந்ததை நிரூபித்துள்ளது. மேலும் ஆரம்பகால பௌத்த மத நூல்களில் மிலிந்தன் என்றைழைக்கப்பட்ட முதலாம் மெனாண்டர் இந்த வழிபாட்டு முறையை ஆதரித்ததை உறுதிப்படுத்துகிறது. [17][17]

இந்திய-கிரேக்கக் காலம் (கி.மு. 150-100)

பரிகோட்டின் இடிபாடுகள்.

1980 கள் மற்றும் 90 களில் நடந்த இத்தாலிய ஆராய்ச்சிகள் கி.மு 2 ஆம் நூற்றாண்டில் மெனாண்டர் காலத்திய இந்திய-கிரேக்க நகரத்தைக் கண்டுபிடித்தன. கிமு 2 ஆம் நூற்றாண்டின் நகரம் அக்ரோபோலிஸ் உட்பட, சுமார் 30 ஏக்கர்கள் பரப்பளவைக் கொண்டிருந்தது. அது பாரிய செவ்வகக் கோட்டைகளைக் கொண்ட தற்காப்புச் சுவரால் சூழப்பட்டிருந்தது. இந்திய-கிரேக்க காலத்தின் போது பரிகோட்டைச் சுற்றி கட்டப்பட்டிருந்த இந்த தற்காப்புச் சுவர், கிமு 150க்குப் பிறகு தேதியிடப்பட்டன. 2016-2017இல் நடந்த இத்தாலிய அகழ்வாராய்ச்சிப் பணியின்போது, நாணயங்கள்களும் கண்டெடுக்கப்பட்டன. [18]

குசானர்கள் காலம்

கி.பி 3 ஆம் நூற்றாண்டில் குசானர்களின் கீழ் ஆட்சியிலிருந்தபோது தொடர்ச்சியான நிலநடுக்கங்களால் நகரம் பேரழிவைச் சந்தித்ததற்கு முன்னர் ஒரு பெரிய நகரமாக இருந்துள்ளது. பூகம்பங்களின் சேதம் மற்றும் குசானப் பேரரசின் வீழ்ச்சியின் காரணமாக, 3 ஆம் நூற்றாண்டின் இறுதியில் பசிரா கைவிடப்பட்டது. [8]

துர்க் ஷாஹி காலம்

காபூலை தளமாகக் கொண்ட துருக்கிய வம்சமான துர்க் ஷாஹிகள் காபூலை தளமாகக் கொண்டு சுவாத் பள்ளத்தாக்கை (கி.பி 7 முதல் 9 ஆம் நூற்றாண்டு வரை) ஆட்சி செய்தனர். எனவே பாக்கித்தானில் உள்ள இத்தாலிய தொல்பொருள் திட்டத்தின் உறுப்பினர்கள் இந்தக் காலகட்டத்திலிருந்து பரிகோட்டில் குவாண்டாய் மலையில் கட்டப்பட்ட ஒரு தனித்துவமான கோயிலைக் கண்டுபிடிக்க முடிந்தது. பொதுவாக ஷாஹி காலத்தைச் சேர்ந்த இந்த பகுதியில் சில வழிபாட்டு மையங்கள் இருப்பதால் இது ஒரு முக்கியமான கண்டுபிடிப்பகாகும். முனைவர் லூகா மரியா ஒலிவியேரி கூற்றின்படி, இந்தக் கோயில் கி.பி 700 இல் கட்டப்பட்டிருக்காலாம். அந்த நேரத்தில் உத்தியானா (சுவாத் பள்ளத்தாக்கு) " பிரமோ கேசர் " என்று அழைக்கப்பட்ட ஒரு மன்னரால் ஆளப்பட்டது. அவர் காபூலில் நன்கு அறியப்பட்ட துர்க் ஷாஹி குராசன் தேகின் ஷாவின் மகன் ஆவார். கோவில் மீண்டும் நிறுவப்பட்டு இந்து ஷாகி காலம் வரை (கி.பி. 1000) பராமரிக்கப்பட்டுள்ளது. 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பரிகோட்டில் கண்டுபிடிக்கப்பட்டு லாகூர் அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டுவரும் இந்து ஷாகி கல்வெட்டிலும் இந்த கோயில் குறிப்பிடப்பட்டுள்ளது. [19] [20]

சான்றுகள்

வெளி இணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=பரிகோட்&oldid=3537380" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்