பயனர் பேச்சு:கி. கார்த்திகேயன்
மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கருவிகள்
பொது
அச்சு/ஏற்றுமதி
வாருங்கள், கி. கார்த்திகேயன்! உங்களை வரவேற்கிறோம்.
விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். விக்கிப்பீடியாவைப் பற்றி அறிந்து கொள்ள புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியா பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதிப் பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள்.
விக்கிப்பீடியாவிற்குப் பங்களிப்பது பற்றி மேலும் அறிந்து கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்:
__________________________________________________________________________________________________________________
தாங்கள் தமிழ் விக்கிப்பீடியாவின் பேச்சுப் பக்கங்களிலும், கலந்துரையாடல்களிலும் கலந்து கொள்ளும் போது தங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள் அல்லது தொகுப்புப் பக்கத்தில் உள்ள பொத்தான்களில் (படத்தில் சிகப்பு நிற அம்புக் குறியிட்டுக் காட்டப்பட்டுள்ள) சரியான பொத்தானைச் சொடுக்கவும்.__________________________________________________________________________________________________________________
__________________________________________________________________________________________________________________
--Theni.M.Subramani 06:44, 10 ஜூன் 2010 (UTC)
வணக்கம் கார்த்திகேயன்,நல்ல கட்டுரைகளைத் தொடங்கி வருகிறீர்கள். வாழ்த்துகள். மதுரகாளியம்மன் கட்டுரையில் பக்தர் நோக்கிலிருந்து எழுதப்பட்ட சில வாக்கியங்களை மாற்றியமைத்துள்ளேன். ”அருள் பாலித்தல்” போன்ற தொடர்கள் நம்பிக்கையாளர்கள் / பக்தர்கள் பார்வையிலிருந்து வருவன. நாம் விக்கியில் தகவல்களை மட்டும் எழுதுவதால், பொதுவான பதங்களை பயன்படுத்த வேண்டும்.--சோடாபாட்டில் 05:05, 27 அக்டோபர் 2010 (UTC)[பதிலளி]
இதை போஸ்ட்கிரே எஸ்குயெல் என்று பிரித்து எழுதலாமா. இப்போதுள்ள தலைப்பு சட்டென்று புரியமாட்டேங்குது.--சோடாபாட்டில் 08:45, 15 நவம்பர் 2010 (UTC)[பதிலளி]
சென்னை விக்கிச் சந்திப்பில் உங்களைக் கண்டதில் மகிழ்ச்சி. நீங்கள் மேலும் பல நல்ல பங்களிப்புகளைத் தரவும், சென்னையில் பல விக்கிக் களப் பணிகளில் ஈடுபடவும் வேண்டுகிறேன். நன்றி--இரவி 07:34, 16 நவம்பர் 2010 (UTC)[பதிலளி]
![]() | அசத்தும் புதிய பயனர் விருது | |
--த. விக்கியில் உங்கள் பணி தொடர என் வாழ்த்துகள் --சோடாபாட்டில் 08:04, 16 நவம்பர் 2010 (UTC)[பதிலளி] |
கார்த்திகேயன், உள்ளிணைப்பற்ற பக்கங்களில் உள்ளிணைப்பு கொடுத்து வருவது நல்ல முயற்சி. கட்டுரை எழுதுவது மட்டுமின்றி இது போன்ற பராமரிப்புப் பணிகளிலும் ஈடுபடுவது பயன்தரத்தக்கது. தவறாக எடுத்துக்கொள்ளாமல் இதைக் கருத்தில் கொள்ளவும்: உள்ளிணைப்புத் தரும் போது சிவப்பு இணைப்பு அதிகம் வராத படி பார்த்துக் கொள்ளவும். காட்டாக ஆனையிறவுக் கோட்டை கட்டுரையில் நீரேரி என்பதைச் சிவப்பிணைப்பாக்கி இருந்தீர்கள். அதை ஏரிக்கு இணைப்பு தந்திருக்கலாம். தங்களைக் குறை கூறுவதற்காக இதைச் சொல்லவில்லை. நட்பு எண்ணத்துடனேயே கூறுகிறேன். நன்றி! --மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) 15:49, 18 ஏப்ரல் 2011 (UTC)
இந்திய விக்கி மாநாடு -- மும்பை -- நவம்பர் 18-20 2011 ![]() |
---|
வணக்கம் கி. கார்த்திகேயன், முதல் இந்திய விக்கி மாநாடு மும்பையில் 2011 நவம்பர் 18 முதல் 20 வரை நடைபெறவுள்ளது. மாநாட்டுக்கான 100 நாள் பரப்புரை தொடங்கவுள்ளது. நீங்கள் தமிழ் விக்கி சமூகத்தின் அங்கத்தினராக இருப்பதால், மாநாட்டிற்கு வருகை தந்து உங்களின் விக்கி அனுபவத்தை பகிர்ந்துகொள்ள அழைக்கிறோம். உங்களின் பங்களிப்புகளுக்கு நன்றி. உங்களை 18-20 நவம்பர் 2011 இல், மும்பையில் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம். |
Hi கி. கார்த்திகேயன், The First WikiConference India is being organized in Mumbai and will take place on 18-20 November 2011. But the activities start now with the 100 day long WikiOutreach. Call for participation is now open, please submit your entries here. (last date for submission is 30 August 2011) We look forward to see you at Mumbai on 18-20 November 2011 |
---|
கார்த்தி,
உங்கள் புகைப்படங்களை ஊடகப் போட்டியில் பதிவேற்றுங்கள். பரிசுகளை வெல்லலாம் :-). வலைவாசல்: ஊடகப் போட்டி வழியாகச் சென்று விக்கிமீடியா காமன்சில் பதிவேற்றலாம்.--சோடாபாட்டில்உரையாடுக 11:59, 18 நவம்பர் 2011 (UTC)[பதிலளி]
தொடர் பங்களிப்புக்கு நன்றி
வணக்கம், கி. கார்த்திகேயன்!
தமிழ் விக்கிப்பீடியாவில் தொடர்ந்து பங்களிப்பதற்கு என் நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இதன் மூலம் மாணவர்கள், ஆசிரியர்கள், பொறியாளர்கள், மருத்துவர்கள், ஆய்வாளர்கள் என்று பலரும் உள்ள தமிழ் விக்கிப்பீடியர் சமூகத்தில் ஒருவராகத் திகழ்கிறீர்கள். உங்கள் தொடர் பங்களிப்புகள் தமிழ் விக்கிப்பீடியாவைப் பயன்படுத்தும் பள்ளிச் சிறுவர்கள் உள்ளிட்ட பலருக்கும் உதவியாக இருக்கிறது.
மக்கள் தொகை அடிப்படையில் தமிழ் உலகளவில் 18வது இடத்தில் இருந்தாலும், விக்கிப்பீடியா கட்டுரைகள் எண்ணிக்கையில் உலகளவில் 60ஆவது இடத்திலேயே உள்ளது. இந்த நிலையை மாற்ற, தமிழில் பல அறிவுச் செல்வங்களைக் கொண்டு வந்து சேர்க்க உங்கள் பங்களிப்புகள் உதவும்.
பின்வரும் வழிகளின் மூலமாக உங்கள் பங்களிப்புகளைத் தொடரலாம்:
இன்னும் சிறப்பாக பங்களிக்க ஏதேனும் உதவி தேவையென்றால், தயங்காமல் என் பேச்சுப் பக்கத்தில் எழுதுங்கள். நன்றி.
--இரவி (பேச்சு) 04:26, 9 பெப்ரவரி 2013 (UTC)
ஐயா வணக்கம், 'கொ மா கோ இளங்கோ' என்ற பெயரிலான கட்டுரை ஒன்றை நான் தோற்றுவித்தேன். போதிய உசாத்துணைகள் வழங்கிய பின்னரும் அந்த பக்கத்தில் சிக்கல் தொடர்கிறது. எனவே அனுபவம் மிக்க தங்களை உதவும்படி கேட்டுக்கொள்கிறேன். நன்றி வணக்கம். Rajaguru Kar Balan (பேச்சு) 17:21, 11 செப்டம்பர் 2021 (UTC)
வணக்கம், கி. கார்த்திகேயன்!
நீங்கள் கடந்த மாதம் 100 தொகுப்புகளுக்கு மேல் பங்களித்துள்ளதற்கு என் மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். தொடர்ந்து இவ்வாறு பங்களித்து தமிழ் விக்கிப்பீடியாவின் முனைப்பான பங்களிப்பாளர் எண்ணிக்கையைக் கூட்ட உதவுமாறு விக்கித்திட்டம் 100 சார்பாக கேட்டுக் கொள்கிறேன். அடுத்து 250 தொகுப்புகளைத் தாண்டும் போது மீண்டும் உங்கள் பேச்சுப் பக்கத்துக்கு வருவேன் :)
குறிப்பு: வெறும் தொகுப்பு / கட்டுரை எண்ணிக்கையைக் கருத்திற் கொண்டு நாம் தமிழ் விக்கிப்பீடியாவின் தரத்தை நோக்குவதில்லை. ஆயினும், முனைப்பான பங்களிப்பாளர்களை இனங்காண உள்ள முக்கிய வழிகளில் தொகுப்பு எண்ணிக்கையும் ஒன்று. எனவே, வழமை போலவே எண்ணிக்கையைக் கருத்தில் கொள்ளாமல் பயன் கருதி மட்டும் பங்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி.--இரவி (பேச்சு) 06:32, 3 மார்ச் 2013 (UTC)
வரும் சனிக்கிழமை (9 மார்ச்) அன்று மாலை சென்னை ஐஐடி வளாகத்தில் விக்கிப்பீடியர் சந்திப்பு நடைபெற உள்ளது. இரு ஆண்டுகளுக்குப் பின் இத்தகைய சந்திப்பொன்றை நடத்துகிறோம். அவசியம் கலந்துகொள்ளுமாறு அழைக்கிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 15:02, 4 மார்ச் 2013 (UTC)
ற் கடின ஒலி, வல்லினம், ற் க்குப் பிறகு மெய்யெழுத்து வருவது இல்லை. வரவேற்ப்பு என்பது பிழை, வரவேற்பு, மற்போர் என்பதே சரி -தமிழ்க்குரிசில் (பேச்சு) 16:17, 29 மார்ச் 2013 (UTC)
செய்திகளைச் சரியாகவே இணைத்து வருகிறீர்கள். விக்கிசெய்தியில் குறிப்பிட்ட செய்தி இருந்தால் அதற்கும் ஓர் இணைப்பைத் தருவது செய்திக்கு வலுவூட்டும். பொருத்தமான ஒரு படம் இணைப்பது எப்போதும் நல்லது. மேலும், அனைத்து மொழி விக்கிசெய்திகளையும் மூடி விடுவதற்கு பரிந்துரைத்திருக்கிறார்கள்.--Kanags \உரையாடுக 09:32, 31 மார்ச் 2013 (UTC)
வணக்கம், கி. கார்த்திகேயன்!
நீங்கள் கடந்த மாதம் 250 தொகுப்புகளுக்கு மேல் பங்களித்திருப்பதற்கு என் மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். இது பலருக்கும் உந்துதல் அளிப்பதாகவும் உதவியாகவும் இருக்கும். தொடர்ந்து இவ்வாறு பங்களித்து தமிழ் விக்கிப்பீடியாவின் முனைப்பான பங்களிப்பாளர் எண்ணிக்கையைக் கூட்ட உதவுமாறு விக்கித்திட்டம் 100 சார்பாக கேட்டுக் கொள்கிறேன். அடுத்து 1000 தொகுப்புகளைத் தாண்டும் போது மீண்டும் உங்கள் பேச்சுப் பக்கத்துக்கு வருவேன் :)
குறிப்பு: வெறும் தொகுப்பு / கட்டுரை எண்ணிக்கையைக் கருத்திற் கொண்டு நாம் தமிழ் விக்கிப்பீடியாவின் தரத்தை நோக்குவதில்லை. ஆயினும், முனைப்பான பங்களிப்பாளர்களை இனங்காண உள்ள முக்கிய வழிகளில் தொகுப்பு எண்ணிக்கையும் ஒன்று. எனவே, வழமை போலவே எண்ணிக்கையைக் கருத்தில் கொள்ளாமல் பயன் கருதி மட்டும் பங்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி.
--இரவி (பேச்சு) 06:59, 2 ஏப்ரல் 2013 (UTC)
வணக்கம், கார்த்திகேயன். உங்களைப் பற்றிய அறிமுகத்தை முதற்பக்கத்தில் தர விரும்புகிறோம். உங்களைப் பற்றிய விவரங்களை விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம்/கி. கார்த்திகேயன் பக்கத்தில் தர முடியுமா? ஏற்கனவே விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம் பக்கத்தில் உள்ள அறிமுகங்களை எடுத்துக்காட்டுகளாகக் கொள்ளலாம். நன்றி. --இரவி (பேச்சு) 18:27, 10 ஏப்ரல் 2013 (UTC)
வாழ்த்துகளுக்கு நன்றி கார்த்தி. அப்புறம் இன்னொரு சேதி. பயனர்:கி. கார்த்திகேயன்/Reference இந்த பக்கத்துக்கு காப்புரிமம் என்ன? ஏனென்றால் இதை நான் சுட்டிருக்கேன். -- பார்வதிஸ்ரீ (பேச்சு) 13:28, 18 ஏப்ரல் 2013 (UTC)
வணக்கம், கார்த்திகேயன்!
விக்கிப்பீடியா:தேவைப்படும் கட்டுரைகள் எனும் பக்கத்தில் பத்மா சுப்ரமணியம் குறித்த கட்டுரை வேண்டுமென ஏப்ரல் 8 அன்று குறிப்பிட்டிருந்தேன். அதனை நீங்கள் நல்ல முறையில் உருவாக்கிவிட்டீர்கள் (தற்செயலானது என நினைக்கிறேன்...). நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:12, 29 ஏப்ரல் 2013 (UTC)
மே 26 இல் அடுத்த சென்னை விக்கியர் சந்திப்பு நடைபெற உள்ளது. இம்முறை வழக்கமான புதியவர்களுக்கான அறிமுகங்கள் தவிர அனுபவமுள்ளவர்களுக்கான வேறு சில வழங்கல்களும் நடைபெறுகின்றன. கலந்து கொள்ள அழைக்கிறேன். --சோடாபாட்டில்உரையாடுக 05:35, 21 மே 2013 (UTC)[பதிலளி]
வணக்கம். தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியான பண்பாட்டுச் சுற்றுலாவில் நீங்களும் கலந்து கொள்ள வேண்டும் என்று அன்புடன் அழைக்கிறேன். தங்கள் வருகையை திட்டப்பக்கத்தில் உறுதிப்படுத்தி விடுங்கள். இது "அழைப்புள்ளவர்களுக்கு மட்டும்" என்ற வகையில் ஏற்பாடு செய்யப்படும் சுற்றுலா. எனவே, உங்கள் நண்பர்கள், உறவினர்கள் முதலியோரை அழைத்து வருவதைத் தவிர்க்கலாம். நன்றி.--இரவி (பேச்சு) 20:19, 18 செப்டம்பர் 2013 (UTC)
வணக்கம் நண்பரே,
தாங்கள் மிகவும் ஆர்வத்துடன் வலைவாசல்:கணினியியல் என்ற வலைவாசலை அமைத்திருப்பதைக் கண்டேன். அந்த வலைவாசல் தொடக்க நிலையிலேயே உள்ளது. இவ்வாறு நெடுங்காலம் பராமரிக்கப்படாமல் இருப்பின் அந்த வலைவாசல் நீக்கப்படும் அபாயமும் உள்ளது. எனவே தாங்கள் வலைவாசலை மேம்படுத்தும் முயற்சியில் ஈடுபடுமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 12:15, 11 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
![]() | நிர்வாக அணுக்கம் தந்தமைக்கு நன்றியுரைத்தல் | |
வணக்கம் நண்பரே. எந்தன் மீது நன்மதிப்பு கொண்டு. தங்களுடைய மதிப்புமிக்க ஆதரவினை நல்கி, நிர்வாக அணுக்கத்தினை பெற்று தந்தமைக்கு என்னுடைய நன்றிகளை உரித்தாக்குகிறேன். --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 18:45, 15 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி] |
மிக்க நன்றி
நிருவாகி தரத்துக்கான வாக்கெடுப்பில் எனக்கு ஆதரவாக வாக்களித்து உதவியமைக்கு நன்றி!!
--அஸ்வின் (பேச்சு) 03:19, 16 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
--நந்தகுமார் (பேச்சு) 08:15, 16 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
காண்க: விக்கிப்பீடியா பேச்சு:உங்களுக்குத் தெரியுமா#பயனர்களை உ.தெ கட்டுரைகளை உருவாக்க தூண்டல்--Anton·٠•●♥Talk♥●•٠· 15:24, 25 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
வணக்கம் கார்த்திகேயன். உங்களைப் பற்றிய அறிமுகத்தை முதற்பக்கத்தில் தர விரும்புகிறோம். உங்களைப் பற்றிய சிறு குறிப்பை விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம்/கி. கார்த்திகேயன் பக்கத்தில் சேர்க்க முடியுமா? விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம் பக்கத்தில் உள்ள அறிமுகங்களை எடுத்துக்காட்டாக கொள்ளலாம். ஒருவேளை, உங்கள் தனிப்பட்ட தகவல், ஒளிப்படத்தைப் பகிர விரும்பாவிட்டாலும் உங்கள் விக்கிப் பங்களிப்புகளை ஆவணப்படுத்தவும், காட்சிப்படுத்தவும் இது உதவும். நன்றி.--இரவி (பேச்சு) 10:38, 7 மே 2014 (UTC)[பதிலளி]
அடுத்த இரு வாரங்களுக்கு உங்களைப் பற்றிய அறிமுகம் முதற்பக்கத்தில் இடம்பெறுகிறது. தொடர்ந்து சிறப்பாக பங்களிக்க வாழ்த்துகள்.--இரவி (பேச்சு) 09:16, 7 திசம்பர் 2014 (UTC)[பதிலளி]
வணக்கம் கி. கார்த்திகேயன்! தமிழ் விக்கிப்பீடியாவில் உள்ள பல கட்டுரைகளில், உசாத்துணை, மேற்கோள்கள், குறிப்புகள், சான்றுகள் போன்றவை சேர்க்கப்படவில்லை. இவ்வாறு உள்ள கட்டுரைகளை தரக்கட்டுப்பாட்டின் காரணமாக தமிழ் விக்கிப்பீடியாவில் இருந்து நீக்கப்படலாம். உங்களால் முடிந்தவரை இவற்றை சேர்க்க முயற்சிக்கவும். இதைப் பற்றிய தகவல்களைப் பெற சான்று சேர்க்கும் திட்டத்தை பார்க்கவும். தமிழ் விக்கிப்பீடியாவில் தொடர்ந்து பங்களிக்க வாழ்த்துக்கள்!
--தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 03:50, 17 மே 2014 (UTC)[பதிலளி]
வணக்கம் கி. கார்த்திகேயன்!
தமிழ் விக்கிப்பீடியாவில் சிறப்பாக பங்களித்தமைக்கும், பங்களிக்கின்றமைக்கும் எனது நன்றிகள். தமிழ் விக்கிப்பீடியாவில் ஒரு மாதம் (சனவரி 2015) 100 தொகுப்புக்கள் செய்யும் 100 பயனர்களை உருவாக்கும் இலக்கைக் கொண்ட ஓர் அரிய திட்டம் துவங்கப்பட்டுள்ளது. வரும் சனவரி மாதம் 100 தொகுப்புக்கள் செய்யும் 100 பயனர்களுள் ஒருவராக பிரகாசிக்க தங்களை அன்புடன் அழைக்கிறேன். இலக்கை அடைபவர்களுக்கு பதக்கங்களும், முதல் நாளில் இலக்கை அடைபவர்களுக்கு சிறப்புப் பதக்கங்களும் வழங்கப்படும். :) :) . மேலதிக விபரங்களுக்கு திட்டப்பக்கம் வருக. நன்றி.
மணிவேல் தனது இம்மாதப் பங்களிப்புகளை உங்களுக்கு உரித்தாக்கி இருக்கிறார். இங்கு பாருங்கள்.--இரவி (பேச்சு) 12:29, 22 சனவரி 2015 (UTC)[பதிலளி]
வணக்கம்!
சூலை 19, 2015 அன்று நடக்கவிருக்கும் விக்கி மாரத்தான் 2015 முன்னெடுப்பில் கலந்துகொள்ளத் தங்களை அன்புடன் அழைக்கிறோம்!
தங்களின் விருப்பத்தை இங்குப் பதிவு செய்யுங்கள்; நன்றி!
--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 19:42, 7 சூலை 2015 (UTC)[பதிலளி]
வணக்கம்!
சூலை 31, 2016 அன்று நடக்கவிருக்கும் தமிழ் விக்கி மாரத்தான் 2016 முன்னெடுப்பில் கலந்துகொள்ளத் தங்களை அன்புடன் அழைக்கிறோம்!
சென்ற ஆண்டு மாரத்தானில் 65 பயனர்கள் கலந்து கொண்டு 24 மணி நேரத்தில் 2370 தொகுப்புகள் ஊடாக 178 கட்டுரைகளை உருவாக்கினோம். தமிழ் விக்கிப்பீடியாவின் இந்தத் தனிச்சிறப்பு மிக்க முயற்சிக்கு, இந்த ஆண்டு சில இலக்குளை முன்வைத்துள்ளோம்.
இது போக, வழமை போல தங்களுக்கு விருப்பமான தொகுப்புகளிலும் ஈடுபடலாம். நெடுநாளாக விக்கியில் செய்ய நினைத்துள்ள பணிகளை நிறைவேற்றுவதற்கு இது ஒரு நல்ல நாள் :)
தங்களின் விருப்பத்தை இவ்விடத்தில் பதிவு செய்யுங்கள்; நன்றி!
--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 01:41, 29 சூலை 2016 (UTC)[பதிலளி]
வணக்கம்!எமது விக்கிப்பீடியாவில் வருடாந்தம் இடம்பெறும் விக்கிக்கோப்பைப் போட்டியானது 2017 ஆம் ஆண்டின் சனவரி மாதத்தில் இடம்பெறவுள்ளது.
இப்போட்டியில் நீங்களும் பங்கு கொண்டு பல கட்டுரைகளையும உருவாக்கிப் பாராட்டுக்களைப் பெறுவதுடன் மேலும் தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு உங்கள் அளப்பெரிய பங்கினை ஆற்றுங்கள்.
போட்டியில் தாங்கள் பங்குபெற விரும்பின் சனவரி 15 ஆம் திகதிக்கு முன்னர் "இங்கு பதிவு செய்க" எனும் கீழுள்ள பொத்தானை இப்போதே அழுத்தி உங்கள் பெயரைப் பதிவுசெய்யுங்கள். மேலதிக விபரங்களை இங்கு தெரிந்து கொள்ளலாம். நன்றி!..
--ஸ்ரீஹீரன் (பேச்சு) 15:53, 8 திசம்பர் 2016 (UTC)[பதிலளி]
15 ஆண்டு நிறைவையொட்டி நடாத்தப்படும் போட்டி..
||தொடர்பங்களிப்பாளர் போட்டி||
போட்டி:
#போட்டி விபரம்
#30,000/= மொத்தப்பரிசு
போட்டிக்காலம்
6 மாதங்கள்
2017 மே-ஒக்டோபர்!
போட்டிக்காக நீங்கள்
கட்டுரைகளை விரிவாக்குதல் வேண்டும். இதில் பங்குபற்றுவது மிக இலகு!
இங்கு
பதிவு செய்யுங்கள்!
விதிகளைப் பின்பற்றி
வெற்றி பெறுங்கள்!
--ஒருங்கிணைப்புக் குழு (பேச்சு) சார்பாக NeechalBOT (பேச்சு) 04:38, 6 மார்ச் 2017 (UTC)
அன்புள்ள கார்த்திகேயன்,
உடன் பங்களிப்பவன் என்ற முறையில், இது நான் உங்களுக்கும் மற்ற தமிழ் விக்கிப்பீடியர்களுக்கு எழுதும் தனிப்பட்ட மடல்.
2005ல் இருந்து தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களித்து வருகிறேன். அப்போது தோராயமாக 600 கட்டுரைகள் இருந்தன. இப்போது 1,15,000 கட்டுரைகள் உள்ளன. மலைப்பாக இருக்கிறது. மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. அதே வேளை, கடந்து வந்த பாதையையும் எண்ணிப் பார்க்கிறேன்.
இது ஒரு நெடும் பயணம். பல பேருடைய பல மணிக்கணக்கான உழைப்பைக் கொட்டிய பயணம். ஆங்கில விக்கிப்பீடியா 2001 தொடங்கி 2004 வரை அடைந்த வளர்ச்சியைக் கூட நமது 15 ஆண்டுகளில் நாம் இன்னும் எட்டிப் பிடிக்க முடியவில்லை! அப்படி என்றால், இன்னும் செல்ல வேண்டிய தொலைவோ மிக அதிகம். ஆங்கிலத்தில் ஒருவருக்குக் கிடைக்கக் கூடிய அறிவின் அளவும் தரமும் தமிழர்களுக்குக் கிடைப்பது எப்போது? தமிழர்களின் சமூக வரலாற்று, அரசியல் சூழலுக்கு உட்பட்டு, உடனடியாக கட்டற்ற அறிவைப் பெற வேண்டியது காலத்தின் கட்டாயமாக இருக்கிறது.
அதற்கு நாம் புதிய வழிமுறைகளையும் பெரும் திட்டங்களையும் தீட்ட வேண்டியுள்ளது. அப்படிச் செய்ய வேண்டுமானால் நாம் அதற்கு வலுவானவர்கள் என்று உறுதிபட நிறுவ வேண்டிய தேவை உள்ளது. ஒரு எடுத்துக்காட்டு சொல்கிறேன்:
தமிழ் விக்கிமூலத்தில் 2000 நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்களைச் சேர்த்துள்ளோம். இவை பல இலட்சம் பக்கங்கள் உள்ளன. இவற்றை மனித முறையில் சரிபார்ப்பது என்றால் பல பத்தாண்டுகள் ஆகலாம். ஆனால், இயந்திரம் மூலம் சரி பார்க்க முடியுமா? அதற்குப் பல மென்பொருளாளர்களை முழு நேரமாக ஈடுபடச் செய்ய முடியுமா? பெருமெடுப்பில் தன்னார்வலர்களை முழு நேரமாக ஈடுபடுத்த முடியுமா? (இப்படிச் செய்வதற்குச் சமூகத்தின் ஒப்புதலும் விக்கிமீடியா அறக்கட்டளையின் ஒப்புதலும் தேவைப்படும் என்பதைக் கவனிக்க!) அதனால், இதனை ஒரு எடுத்துக்காட்டாக மட்டுமே குறிப்பிடுகிறேன்.
நாம் ஏற்கனவே சிறப்பாகச் செயற்படுத்திய சில திட்டங்களுக்கான எடுத்துக்காட்டுகள்:
இத்தகைய வலுவான திட்டங்களின் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவுக்கு என்று ஒரு நற்பெயரைப் பெற்றுள்ளோம். நாம் அடுத்து கோரும் திட்டங்களுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
வெகு அரிதாகவே விக்கிப்பீடியாவையும் தமிழ் கட்டற்ற அறிவுச் சூழலையும் வெளியாட்கள் புரிந்து கொள்கிறார்கள். புரிந்து கொள்ளும் ஆட்களால் நமக்கு உதவ முடிவதில்லை. உதவ முடிகிற ஆட்களோ நம்மைப் புரிந்து கொள்வதில்லை.
வயிறு பசிக்கும் மாணவனால் பள்ளிக்கு வர முடியாது என்பதை உணர்ந்து ஒரு நூற்றாண்டு முன்பே இலவச மதிய உணவுத் திட்டம் கொண்டு வந்தவர்கள் நாம். ஆனால், பில் கேட்சு போன்றவர்களே கூட இன்னும் இது பயனுள்ளது தானா என்று சில ஆப்பிரிக்க நாடுகளில் ஆய்வு நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இத்தகைய உலகச் சூழலில், நமக்கு என்ன தேவை என்று அறிந்து திட்டங்களை வகுக்க முடிகிற நம்முடன், மற்றவர்கள் இணைந்து கொள்ள பல ஆண்டுகள் ஆகிறது.
2010க்கு முன்பே தகவல் உழவனுக்கு நமது தனிப்பட்ட முயற்சியில் கணினி உதவி அளித்தோம். அதன் பிறகு தமிழ்க் குரிசிலுக்கு இணைய உதவி அளித்தோம். இத்திட்டங்கள் இந்தியாவுக்கே முன்னோடியாக அமைந்து இன்னும் பல இந்திய விக்கிப்பீடியர்களுக்கு உதவியது. தற்போது, இதன் நன்மையைப் புரிந்து கொண்டு விக்கிமீடியா அறக்கட்டளையும் கூகுளும் இணைந்து நூற்றுக் கணக்கானவர்களுக்கு இலவசமாக இணையத்தையும் கணினியையும் வழங்குகிறது. இத்திட்டம் பயனுள்ளது தானா என்று இன்னும் கூட சிலருக்கு ஐயமாக இருக்கலாம். ஆனால், பயன் மிக்கது என்பதில் நான் உறுதியாக இருக்கிறோம். திட்டம் முடிந்து விளைவுகளை அலசும் போது, இத்திட்டம் உலக நாடுகள் பலவற்றுக்கும் விரிவுபடுத்தப்பட்டு இன்னும் பல நாட்டு விக்கிப்பீடியருக்கு உதவும். இந்திய அளவில், உலக அளவில் இது போன்ற திட்டங்கள் எப்படி வகுக்கப் படுகின்றன என்று அருகில் இருந்து பார்த்த முறையில் சொல்கிறேன்: மாற்றம் மிகக் கடினமாக உள்ளது. நமக்கு என்ன தேவை என்று தெரிந்தும், அதனைப் பெற்று வருவது மிகச் சிரமமாக உள்ளது. நாம் இத்தகைய திட்டங்களைச் செயற்படுத்தக் கூடியவர்கள் தானா என்று ஐயுறும் போக்கு உள்ளது.
அதனால், தமிழ் உள்ளிட்ட இந்திய மொழி விக்கிப்பீடியாக்களுக்கு உதவும் இத்திட்டம் வெற்றியடையுமா, எந்த அளவு வெற்றியடையும், தமிழ் விக்கிப்பீடியா இதில் செலுத்தப் போகும் பங்கு என்ன என்பது நம் கையிலேயே உள்ளது.
இத்திட்டத்தின் முதற்பகுதியாக கணினி, இணைய உதவி வழங்கினோம். இரண்டாம் பகுதியாக கட்டுரைப் போட்டி தொடங்கியுள்ளது. கவனிக்க: இது வழமை போல் அனைவரும் பங்கு கொள்ளக்கூடிய போட்டியே. கணினி, உதவி பெற்றோருக்கு மட்டுமான போட்டி அன்று.
ஏற்கனவே, பல தமிழ் விக்கிப்பீடியா முன்னோடித் திட்டங்களில் சிறப்பாகப் பங்களித்தவர் என்ற முறையில் வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டியில் முனைப்புடன் பங்களித்து மாபெரும் வெற்றியடையைச் செய்ய உங்களைக் கேட்டுக் கொள்கிறேன்.
தமிழ் விக்கிப்பீடியர் 50 பேர் மாதம் 15 கட்டுரைகளை எழுதினாலும் 2000 கட்டுரைகள் என்ற இலக்கை இலகுவாக அடைந்து விடலாம். எனவே. உங்களுடைய வழக்கமான விக்கி பங்களிப்பு ஆர்வத்துக்கு இடையே இந்தப் போட்டியிலும் பங்கு பெறக் கோருகிறேன். உங்கள் ஒவ்வொருவராலும் பரிசுகள் வெல்ல முடியாது. அது நம் நோக்கமும் இல்லை. இங்கு பரிசு என்பது ஊக்கம் மட்டுமே. ஆனால், தனிப்பட்ட பரிசுகளைத் தாண்டி அதிகம் கட்டுரைகளை எழுதும் விக்கிப்பீடியாவுக்குச் சமூகப் பரிசு உண்டு. இது சுமார் 10,00,000 இந்திய ரூபாய் மதிப்பில் இலங்கை, இந்தியாவைச் சேர்ந்த 40 தமிழ் விக்கிப்பீடியர்களுக்குத் திறன்கள் பயிற்சி அளிக்கும் வாய்ப்பாக அமையும். இந்த வாய்ப்பைத் தட்டிச் செல்வது நமது திறன்களை மேம்படுத்திக் கொள்ளவும் மீண்டும் ஒரு முறை அனைவரும் கண்டு மகிழவும் வாய்ப்பாக அமையும்.
இந்த ஒவ்வொரு தலைப்பும் தமிழர்களுக்கு உடனடித் தேவை தானா என்று கூட உங்களுக்கு ஐயம் இருக்கலாம். ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த 2000 தலைப்புகள் பெரிதும் திரைப்படங்கள், நடிகர்கள், பாடகர்கள் போன்ற பரவலான ஈடுபாடுடையை தலைப்புகளை மட்டும் கொண்டிருந்தன என்பதைக் கவனத்தில் கொண்டு தற்போது கூடுதலாகப் பல புதிய தலைப்புகள் சேர்க்கப்பட்டுள்ளன. இப் புதிய பட்டியலில் பெண்கள், உடல்நலம், அறிவியல் மற்றும் நுட்பம், வரலாறு மற்றும் புவியியல், கலை மற்றும் அறிவியல் போன்ற துறைகளுக்கு முன்னுரிமை தந்து தொகுத்துள்ளோம். இவை தமிழகப் பகுதியில் இருந்து அதிகம் படிக்கப்படும் ஆங்கில விக்கிப்பீடியா கட்டுரைகள். ஆனால், இவை தமிழில் இல்லை (அல்லது போதுமான விரிவு/தரத்துடன் இல்லை). தமிழகத்தில் இருந்தாலும் ஆங்கிலம் அறிந்தால் மட்டுமே இவ்வறிவைப் பெற்றுக் கொள்ள முடியும் என்ற நிலையை மாற்றி தமிழிலேயே இவ்வறிவைத் தரும் முயற்சியே இக் கட்டுரைப் போட்டி. இத்தலைப்புகள் உங்களுக்கு ஆர்வமூட்டும் அதே வேளை சமூகத்துக்கும் பயனுடையதாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறேன். இது வரை கிடைத்துள்ள தரவின் அடிப்படையில் இத்தலைப்புகளின் கீழ் எழுதப்படும் கட்டுரைகள் வழமையான கட்டுரைகளைக் காட்டிலும் சராசரியாக நான்கு மடங்கு வாசகர்களைப் பெற்றுத் தருவதை அறிய முடிகிறது. உங்கள் ஆர்வத்தின் அடிப்படையில் இவ்விரண்டு பட்டியல்களில் இருந்தும் கட்டுரைகளை எழுதலாம். இந்தக் கூட்டுழைப்பு நிச்சயம் ஒரு அறிவுச் சமூகமாக நம்மை அடுத்த தளத்துக்கு இட்டுச் செல்லும்.
வழமை போல் எத்தனையோ வகையான பங்களிப்புகளில் ஈடுபடும் தாங்கள், இப்போட்டியில் கலந்து கொண்டு இத்திட்டத்தை வெற்றியடையச் செய்வீர்கள் என்றால் அதன் விளைவுகள் மிகவும் தொலைநோக்கானவையாக அமையும். தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு எங்களுக்குக் கூடுதல் திட்டங்களைச் செயற்படுத்தித் தாருங்கள் என்று கேட்டு வாங்கும் வலுவான இடத்தில் நம்மை அமர்த்தும். இது வரை நான் இப்படி உங்களுக்குக் கடிதம் எழுதியது இல்லை. இப்போது எழுதுகிறேன் என்றால், கட்டுரைப் போட்டியில் உங்கள் பங்களிப்பு இப்போது தேவை என்று உரிமையோடு கேட்டுக் கொள்ளவே. ஒரு நீண்ட இடைவெளிக்குப் பின் தமிழ் விக்கிப்பீடியாவுக்குத் தக்க பங்களிப்பு அளிக்க விரும்புவீர்கள் எனில், இது ஒரு சரியான வாய்ப்பு. ஒரு நீண்ட இடைவெளிக்குப் பின் தமிழ் விக்கிப்பீடியாவில் மீண்டும் முனைப்பாக பங்களிக்க விரும்புவீர்கள் எனில், இது ஒரு நல்ல வாய்ப்பு.
இத்திட்டம் தொடர்பாக கேள்விகள், ஐயங்கள் இருப்பின் தயங்காது கேளுங்கள்.
நன்றி.--இரவி (பேச்சு) 15:48, 24 மார்ச் 2018 (UTC)
Greetings,
The eligibility requirements for voters to participate in the 2021 Board of Trustees elections have been published. You can check the requirements on this page.
You can also verify your eligibility using the AccountEligiblity tool.
MediaWiki message delivery (பேச்சு) 16:37, 30 சூன் 2021 (UTC)[பதிலளி]
Note: You are receiving this message as part of outreach efforts to create awareness among the voters.