பப்லோ எசுகோபர்

பாப்லோ எமீலீயொ யெஸ்கொபர் கவிரீயா (1 திசம்பர் 1949 – 2 திசம்பர் 1993) கொலம்பிய போதை கடத்தல் கூட்டத் தலைவர். இதுவரை வாழ்ந்த அல்லது வாழும் போதை கடத்தல்க்காரர்களில் பெரும் புகழ் பெற்றவர்களுள் ஒருவர். உலக வரலாற்றில் வெற்றிகரமான குற்றவாளியாகவும் மிகப்பெரிய பணக்காரராகவும் திகழ்ந்துள்ளார்.[1] 1989ல் போர்ப்சு பத்திரிக்கை இவரை உலகப் பணக்காரர்களின் வரிசையில் ஏழாவது வரிசையில் இருப்பதாக கணக்கிட்டது. அப்போது அவருக்கு 25 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பு சொத்துக்கள் இருந்ததாக கணக்கிட்டது.[2] 1986ல் கொலம்பியா அரசியலில் ஈடுபட ஆசைப்பட்டதுடன் கொலம்பியா அமெரிக்காவிடம் கடனாக வாங்கியிருந்த 10 பில்லியன் டாலர்களை தந்து கடனை அடைக்க விருப்பம் தெரிவித்தார்.

குற்றச்செயல்கள்

கொகைன் போதைப் பொருள் கடத்தல் மட்டுமல்லாமல், எதிராளிகள், அரசியல் தலைவர்கள், காவல் அதிகாரிகள், பொதுமக்கள் என 4500க்கும் மேற்பட்டோரின் படுகொலைக்கும் காரணமானவர் பாப்லோ எஸ்கோபர்.[3] கொலம்பியாவின் அதிபர் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர் லூயிஸ் கார்லோஸ் கலான் என்பவரை இவரது ஆட்கள் படுகொலை செய்தனர். சட்ட அமைச்சரான ரோட்ரிகோ லாரா என்பவரையும் இவருடைய ஆட்கள் படுகொலை செய்தனர்.

அவருடைய வீட்டில் அமைக்கப்பட்ட உயிரியல் பூங்காவில் பல நாடுகளில் இருந்து கடத்திக் கொண்டு வரப்பட்ட விலங்குகளை வளர்த்துவந்தார்.[4]

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=பப்லோ_எசுகோபர்&oldid=3860171" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்