பன்சடா இராச்சியம்

பன்சடா இராச்சியம் (Bansda State), இந்திய விடுதலைக்கு முன்னர் பிரித்தானிய இந்தியாவின் கீழிருந்த 562 சுதேச சமஸ்தானங்களில் ஒன்றாகும். இது தற்கால குஜராத் மாநிலத்தின் தெற்கு குஜராத் பகுதியில் உள்ள நவ்சாரி மாவட்டத்தின் பகுதிகளைக் கொண்டிருந்தது. 1901-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, பன்சடா இராச்சியம் 557 சதுர கிலோ மீட்டர் பரப்பளவும், 39,256 மக்கள் தொகையும் கொண்டிருந்தது.

பன்சடா இராச்சியம்
વાંસદા રિયાસત
சுதேச சமஸ்தானம் பிரித்தானிய இந்தியா
1780–1948
கொடிசின்னம்
கொடிசின்னம்
Location of பன்சடா
Location of பன்சடா
Bansda, 1896
தலைநகரம்பன்சடா
வரலாறு
 • நிறுவப்பட்டது1780
 • சுதேச சமஸ்தானங்களின் இணைப்பு ஒப்பந்தம்1948
பரப்பு
 • 1901557 km2 (215 sq mi)
Population
 • 190139,256 
மக்கள்தொகை அடர்த்திExpression error: Unrecognized punctuation character ",". /km2  (Expression error: Unrecognized punctuation character ",". /sq mi)
 இந்தக் கட்டுரை  தற்போது பொது உரிமைப் பரப்பிலுள்ள நூலிலிருந்து உரையைக் கொண்டுள்ளது:  "Bansda". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th). (1911). Cambridge University Press. 
சூரத் முகமையில் பச்சை நிறத்தில் பன்சடா இராச்சியம்

வரலாறு

1780-ஆம் ஆண்டில் பன்சடா இராச்சியத்தை இராஜபுத்திர குல சோலாங்கி வம்சத்தின் இரண்டாம் வீரசிம்மன் நிறுவினார். 1807-ஆம் ஆண்டில் பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியாளர்கள் கொண்டுவந்த துணைப்படைத் திட்டத்தை ஏற்ற பன்சடா இராச்சியத்தினர், ஆண்டுதோறும் ஆங்கிலேயர்களுக்கு திறை செலுத்தி சுதேச சமஸ்தானமாக ஆட்சி செய்தனர்.

இது பிரித்தானிய இந்தியாவின் பம்பாய் மாகாணத்தின் சூரத் முகமையின் கீழ் இருந்தது. 1947-இல் இந்திய விடுதலைக்குப் பின்னர், சுதேச சமஸ்தானங்களின் இணைப்பு ஒப்பந்தப்படி பன்சடா இராச்சியம் 1948-ஆம் ஆண்டில் பம்பாய் மாகாணத்துடன் இணக்கப்பட்டது.[1] 1956-இல் மாநில மறுசீரமைப்புச் சட்டத்தின் படி, பன்சடா இராச்சியம் குஜராத் மாநிலத்தில் இணைக்கப்பட்டது.

ஆட்சியாளர்கள்

பன்சடா இராச்சியத்தின் ஆட்சியாளர்களை பிரித்தானிய இந்தியா அரசு, மகாராஜா சாகிப் என்ற பட்டத்துடன் அழைத்தனர்.[2]

  • 1780 - 1789 இரண்டாம் வீரசிம்மன் (இறப்பு. 1789)
  • 1789 - 1793 நாகர்சிம்மன் (இறப்பு. 1793)
  • 1793 - 1815 ராய்சிம்மன் (இறப்பு. 1815)
  • 1815 - 27 அக்டோபர் 1828 உதய்சிம்மன் (இறப்பு. 1828)
  • 1828 - 16 சூன் 1861 ஹமிர்சிம்மன் (பிறப்பு. 1826? - இறப்பு. 1861)
  • 1861 - 13 பிப்ரவரி 1876 இரண்டாம் குலாப்சிம்மன் (பிறப்பு. 1838 - இறப்பு. 1876)
  • 6 மார்ச் 1876 – 21 செப்டம் 1911 பிரதாப்சிம்மன் குலாப்சிம்மன் (பிறப்பு. 1863 - இறப்பு. 1911)
  • 21 செப்டம்பர் 1911 – 15 ஆகஸ்டு 1947 இந்திரசிம்மன் பிரதாப்சிம்மன் (பிறப்பு. 1888 - . 1951)

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=பன்சடா_இராச்சியம்&oldid=3368876" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்