பத்தாம் பிரெடெரிக்

பத்தாம் பிரெடெரிக் (Frederik X', Frederik André Henrik Christian; பிறப்பு: 26 மே 1968) டென்மார்க்கின் அரசர் ஆவார். 2024 சனவரி 14 அன்று ராணி மார்கரீத் II முடி துறந்ததைத் தொடர்ந்து அவர் மகன் பிரெடெரிக் அரியணை ஏறினார். 52 ஆண்டுகளுக்குப் பிறகு, அவரது தந்தை, கிங் ஃபிரடெரிக் IX, அவர் டென்மார்க்கின் அரியணையில் ஏறுவதைக் கண்டார்.[4][5]

பத்தாம் பிரெடெரிக்
Frederik X
2018 இல் பிரெடெரிக்
டென்மார்க்கின் அரசர்
ஆட்சிக்காலம்14 சனவரி 2024 – இன்று
முன்னையவர்இரண்டாம் மார்கரீத்
முடிக்குரியவர்கிறித்தியான்
பிரதமர்கள்
பட்டியலைப் பார்க்க
  • டென்மார்க்கு
      • மெட் பிரெடெரிக்சென்
      • அக்செல் யொகான்சென்
      • மூட்டே எகெடே
பிறப்பு26 மே 1968 (1968-05-26) (அகவை 56)
கோபனாவன், டென்மார்க்
துணைவர்மேரி டொனால்ட்சன் (தி. 14 மே 2004)
குழந்தைகளின்
பெயர்கள்
பெயர்கள்
பிரெடெரிக் அந்திரே என்றிக் கிறித்தியான்
மரபு
தந்தைஎன்றி டெ லபோர்ட் டெ மொன்பெசாத்
தாய்இரண்டாம் மார்கரீத்
மதம்டென்மார்க்கு திருச்சபை
இராணுவப் பணி
பட்டப்பெயர்(கள்)பிங்கு[2][3]
சார்பு டென்மார்க்
சேவை/கிளை
  •  டென்மார்க் இராணுவம்
  •  Royal Danish Navy
சேவைக்காலம்1986–2024
தரம்
  • செனரல் (இராணுவம்)
  • செனரல் (வான்படை)
  • அட்மிரல் (கடற்படை)
கல்விஆர்கசு பல்கலைக்கழகம்

பிரெடெரிக் ராணி இரண்டாம் மார்கரீத், இளவரசர் என்றிக் ஆகியோரின் மூத்த மகன் ஆவார். இவர் அவரது தாத்தா, ஒன்பதாம் பிரெடெரிக்கின் ஆட்சியின் போது பிறந்தார், அவரது தாயார் டென்மார்க் ராணியாக 1972 சனவரி 14 இல் பதவியேற்றதைத் தொடர்ந்து பட்டத்து இளவரசரானார். ஆர்கசு பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியலில் முதுகலைப் பட்டம் பெற்றார். பல்கலைக்கழகத்திற்குப் பிறகு, அவர் ஐக்கிய நாடுகள் சபையிலும் பாரிசிலும் தூதுவப் பதவிகளில் பணியாற்றினார். டென்மார்க்கு ஆயுதப்படையின் மூன்று பிரிவுகளிலும் பயிற்சி பெற்றவர்.

2000 ஆம் ஆண்டில், சிட்னியில் 2000 கோடைகால ஒலிம்பிக்கில் கலந்துகொண்டபோது, ஆத்திரேலிய சந்தைப்படுத்தல் ஆலோசகர் மேரி டொனால்ட்சனை பிரெடெரிக் சந்தித்து, 2004 மே 14 அன்று கோபனேகன் பேராலயத்தில் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நான்கு குழந்தைகள் உள்ளனர்: கிறித்தியான், இசபெல்லா, இரட்டையர்கள் வின்சென்ட், யோசபின் ஆகியோர்.

ஆட்சி

2023 திசம்பர் 31 ஆம் தேதி ராணி மார்கரீத் II தான் ஆண்டுதோறும் வெளியிடும் நேரடி ஒளிபரப்பு உரையின் போது, தனது பதவி விலகலை அறிவித்தார். 2024 சனவரி 14 அன்று நடந்த அரசுப் பேரவைக் கூட்டத்தில் பிரெடெரிக் டென்மார்க்கின் மன்னராக பதவியேற்றார்.[6]

பதவியேற்புக்குப் பிறகு, கிறித்தியன்சுபோர்க் அரண்மனையின் மேல்மாடத்தில் இருந்து 1849 இல் அரசியலமைப்பு முடியாட்சி அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து டென்மார்க்கு மன்னர்களின் வழக்கப்படி பிரதம மந்திரி மெட்டே பிரெடெரிக்சனால் மன்னராக அறிவிக்கப்பட்டார். அவரது குறிக்கோள் "டென்மார்க் இராச்சியத்திற்காக ஐக்கியம், அர்ப்பணிப்பு" என்பதாகும். ஏழாம் பிரெடெரிக்குக்குப் பிறகு கடவுளைக் குறிப்பிடாத முதல் அரசக் குறிக்கோள் இதுவாகும்.[7]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

பத்தாம் பிரெடெரிக்
Cadet branch of the ஓல்டன்பர்க்
பிறப்பு: 26 மே 1968
ஆட்சியின் போது இருந்த பட்டம்
முன்னர்டென்மார்க் அரசர்
14 சனவரி 2024 – இன்று
பதவியில் உள்ளார்
முடிக்குரிய இளவரசர்:
கிறித்தியான்
டென்மார்க்கு மன்னராட்சி
முன்னர்முடிக்குரிய இளவரசர் ஆகமுடிக்குரிய இளவரசர்
1972–2024
பின்னர்
கிறித்தியான்
"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=பத்தாம்_பிரெடெரிக்&oldid=3931277" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்