படிமங்கள் காப்பகமும் பரிமாற்றகமும்

படிமங்கள் காப்பகமும் பரிமாற்றகமும் அல்லது பேக்ஸ்(PACS - picture archiving and communication system) என்பது, பல்வேறு வகையான மருத்துவ கருவிகளிலிருந்து பெறப்படும் மருத்துவ படிமங்களுக்கு தேவையான சேமிப்பகம் அல்லது காப்பகம், மற்றும் வசதியான அணுகல் முறையை ஏற்படுத்தி தரும் அமைப்பாகும்.[1]

படிமங்கள் காப்பகமும் பரிமாற்றகமொன்றில் சேமிக்கப்படும் படிமம்
மேலுள்ள படிமத்திற்கு முரண்பாடு களைதல்(contrast adjustment), கூர்மைப்படுத்துதல், மற்றும் அளவீட்டு குறிச்சொற்கள் சேர்க்கக்ப்பட்ட பிறகு

மின்னணு படங்கள் மற்றும் அறிக்கைகள் பேக்ஸ் வழியாக எண்ணிம முறையில் பரிமாற்றம் செய்யப்படுகிறது; இதனால் கைமுறையாக செய்யதேவையான, கோப்புகளை மீட்டெடுத்தல், கோப்புகள் பரிமாற்றம் ஆகியவற்றை எளிமையாக்குகிறது. பேக்ஸ் கருவிகள், படிமங்களை டைகாம் தரவு முறையிலேயே கையாளுகின்றன. படிமங்களைத் தவிர உள்ள வருடப்பட்ட ஆவணங்கள் (scanned documents), கையடக்க ஆவண வடிவமைப்பு கோப்புகள்(PDF), போன்ற நுகர்வோர் துறையில் நிலையான வடிவமைப்புகளை பயன்படுத்தி இணைக்கப்பட்டது.

படிமங்கள் காப்பகமும் பரிமாற்றகமும் நான்கு முக்கிய கூறுகளை கொண்டுள்ளது.

  1. வரியோட்டவழிக் கணித்த குறுக்குவெட்டு வரைவி (CT) மற்றும் காந்த அதிர்வு அலை வரைவு (MRI),
  2. நோயாளிகளின் தகவல் பரிமாற்றம் செய்ய பாதுகாக்கப்பட்ட ஒரு பிணையம்,
  3. படிமங்களை புரிந்துகொள்ளும் மற்றும் மீளாய்வு செய்யவும் செயல்நிலையம், மற்றும்
  4. படிமங்களை மற்றும் தகவல்களை பாதுகாக்கவும் மீட்டெடுக்கவும் காப்பகம்

வளர்ந்து வரும் இணைய தொழில்நுட்பத்துடன் இணைந்து, பேக்ஸ் கருவியானது படிமங்கள், விளக்கங்கள், மற்றும் அது தொடர்பான தகவல்களை உரிய நேரத்தில் மற்றும் திறமையான அணுக்கத்தை அளிக்கும் திறன் பெற்றுள்ளது. படிமங்கள் காப்பகமும் பரிமாற்றகமானது, பழைய முறைகளான படிமங்களை தடிமமான ஊடுகதிர் அட்டைகளில் அச்சிடுதல், திரும்ப எடுக்க விரையப்படும் நேரம், அதற்கான விநியோகம், போன்ற தடைகளை உடைத்தெறிகிறது.

படிம வகைகள்

பெரும்பாலான பேக்ஸ் கருவிகள், மீயொலி நோட்டம், காந்த அதிர்வு அலை வரைவு, positron emission tomography (PET), வரியோட்டவழிக் கணித்த குறுக்குவெட்டு வரைவி, உள்நோக்கியியல், முலை ஊடுகதிர்ப்படச் சோதனை, Digital radiography (DR), computed radiography (CR), ஆப்தமாலஜி (ophthalmology), உள்ளிட்ட பெரும்பாலான மருத்துவ கருவிகளிடமிருந்து வரும் படிமங்களை பெறுகின்றன. அதுமட்டுமின்றி பிற படிம தரவுகளுக்கும் ஆதரவு தருகின்றது. கதிரியக்கத்துறை மட்டுமல்லாது, cardiology, oncology, gastroenterology and even the laboratory போன்ற மருத்துவ படிமங்களினை உருவாக்கும் அனத்து கருவைகளையும் பேக்ஸ் கருவியுடன் இணைக்கலாம். (பார்க்க டைகாம் பயன்பாடுகள்).

வரலாறு

பேக்ஸ் கொள்கைகளை முதன்முதலில் 1982-ஆம் ஆண்டில் கதிரியக்க துறையில் பணிபுரிபவர்களின் சந்திப்புகளில் விவாதிக்கப்பட்டது. பெரும்பாலானேர் ஒன்று சேர்ந்து, பேக்ஸ் ( PACS) என்ற சொல்லை உருவாக்கினர். 1983-ம் ஆண்டு இதயக்குழலி கதிரியக்க வல்லுநர் மருத்துவர். ஆண்ட்ரே ட்யூவரிகன்க்ஸ் என்பவர் 1981-ம் ஆண்டு முதல் இப்பெயரினை பயன்படுத்தி வருவதாக அறிவித்தார்.[2] இருப்பினும் மருத்துவர். சாமுவேல் ட்வியர், இப்பெயர் அறிமுகத்துக்காக மருத்துவர். ஜூடித் எம் ப்ரீவிட் என்பவரை பாராட்டுகிறார்.[3]

மருத்துவர். ஹரோல்ட் க்ளாஸ், 1990-ம் ஆண்டின் துவக்கத்தில் ஐக்கிய ராச்சியத்தின் பாதுகாக்கப்பட்ட அரசு நிதியுதவியுடன், லண்டனில் உள்ள ஹாமர் ஸ்மித் மருத்துவமனையை ஐக்கிய ராச்சியத்தில் முதல் படிமமற்ற(filmless) மருத்துவமனையை உருவாக்கினார்.[4] க்ளாஸ், தன்னுடைய திட்டம் நல்லதொரு உச்சம் பெறுவதற்கு முன்னதாகவே, திட்டம் உருவான சில மாதங்களிலேயே இறந்து போனார். ஆயினும், பேக்ஸ் கருவியின் முன்னேடிகளில் ஒருவராக திகழ்கிறார்.

முதல் பெரிய அளவிலான பேக்ஸ் கருவி, 1992-ம் ஆண்டு கன்சாஸில் உள்ள கன்சாஸ் பல்கலைக்கழகத்தில் உருவாக்கப்பட்டது. இக்கருவி பயன்பாட்டை விட அதனை எவ்வாறு நிறுவ வேண்டுமென்பதினையும், எவ்வாறு உபயோகப்படுத்த வேண்டுமென்று மற்றவர்கள் பழகவே அதிகமாக பயன்பட்டது.

ஒழுங்குமுறை

ஐக்கிய அமெரிக்க நாடுகளில், பேக்ஸ் கருவி மருத்துவ சாதனம் என்று வகைப்படுத்தப்பட்டு, அதனுடைய வர்த்தகத்தினை யு. எஸ். எப். டி. ஏ. என்னும் ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் மருத்துவ கட்டுப்பாட்டுகழகத்தின் கீழ் கொண்டுவந்துள்ளது. (USFDA - Food and Drug Administration (United States)). பொதுவாக அவை 2-ம் வகுப்பு கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு உள்ளன, எனவே பிரிவு 510 (K)-கீழ் வரும், தனிப்பட்ட பேக்ஸ் கூறுகளுக்கான கட்டுப்பாடுகள் குறைவாக இருக்கிறது.[5] சில குறிப்பிட்ட பயன்பாடுகளுக்கு பயன்படுத்தும் கருவிகளுக்கு, மேலும் சில கட்டுப்பாடுகள் உள்ளன.[6]

இவற்றையும் பார்க்க

குறிப்புகளும் மேற்கோள்களும்

வெளி இணைப்புகள்

🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்