இந்தியப் பஞ்சாபில் அரசியல்

(பஞ்சாப் அரசியல், இந்தியா இலிருந்து வழிமாற்றப்பட்டது)

இந்திய பஞ்சாப் அரசியலில், 1947 இந்தியப் பிரிவினைக்கு முன்னர் பிரித்தானியாவின் இந்தியப் பேரரசில் இருந்த பஞ்சாப் மாகாணத்தில் மற்ற அரசியல் கட்சிகளை விட பஞ்சாப் ஒன்றியக் கட்சி (Unionist Party (Punjab) முன்னின்றது. 1937 பஞ்சாப் மாகாண சட்டமன்ற தேர்தலில் பஞ்சாப் ஒன்றியக் கட்சி பெரும்பான்மை இடங்களைப் பிடித்தது.[1][2]

1947–1966

இந்திய விடுதலைக்குப் பின் 1947 - 1966 ஆண்டு முடிய பிரிக்கப்படாத இந்தியாவின் பஞ்சாப் மாகாணத்தில் தற்கால பஞ்சாப், அரியானா, இமாசலப் பிரதேசம் மாநிலங்கள் மற்றும் சண்டிகர் நகரம் இருந்தன.மக்கள் தொகை, சமயங்கள் போன்ற காரணிகளால் முழு பஞ்சாப் மாகாணம் முழுவதும் இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் பஞ்சாப் பிரதேச காங்கிரஸ் கமிட்டி அரசியலில் வலுவுடன் விளங்கியது.

1966க்கு பின்னர்

1956 மாநில மறுசீரமைப்புச் சட்டப்படி, 1 நவம்பர் 1966இல் இந்தியாவை மாகாணங்களை மொழிவாரி மாநிலங்களாக பிரிக்கும் போது, பஞ்சாபி மொழி அதிகம் பேசப்படும் பகுதிகளை பஞ்சாப், இந்தியா என்றும்; இந்தி மொழி அதிகம் பேசப்படும் பகுதியை அரியானா என்றும்; பஞ்சாப் மாகாணத்தின் கிழக்குப் பகுதிகளை இமாசலப் பிரதேச மாநிலத்துடனும்; சண்டிகர் நகரத்தை இந்திய அரசின் ஒன்றியப் பகுதியாகவும் மற்றும் பஞ்சாப் மற்றும் அரியானா மாநிலங்களுக்கு பொதுவான தலைநகராகவும் அறிவிக்கப்பட்டது. மாநில மறு சீராமைப்புக்கு பின்னர் பஞ்சாப் மாநிலத்தில் சிரோன்மணி அகாலி தளம் மற்றும் இந்திய தேசிய காங்கிரசு கட்சிகள் வலுவுடன் செயல்பட்டது.

பிற அரசியல் கட்சிகளில் தோவாப் பகுதியில் பகுஜன் சமாஜ் கட்சி, 1992 பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் ஒன்பது இடங்களை கைப்பற்றியது.[3]மேலும் 1996இல் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் மக்களவைக்கு, பகுஜன் சமாஜ் கட்சி மூன்று இடங்களை வென்றது.[4][5] பஞ்சாப் பொதுவுடமைக் கட்சிகள் மால்வா பகுதியில் மட்டும் ஆதிக்கம் செலுத்தியது.[6]

2014 இந்தியப் பொதுத் தேர்தலில், ஆம் ஆத்மி கட்சி, பஞ்சாப் மாநிலத்தின் மொத்தமுள்ள 13 மக்களவைத் தொகுதிகளில் 4 இடங்களைக் கைப்பற்றியதால்.[7][8] இக்கட்சியின் செல்வாக்கு பஞ்சாப் அரசியலில் அதிகரித்துள்ளது.[9][10]

2012இல் நடந்த பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் சிரோன்மணி அகாலி தளம் கட்சியும், பாரதீய ஜனதா கட்சி கூட்டணி வைத்து, பஞ்சாப் சட்டமன்றத்தின் 117 தொகுதிகளில் போட்டியிட்டு 68 தொகுதிகளை கைப்பற்றி, பிரகாஷ் சிங் பாதல் தலைமையில் கூட்டணி அரசு நடத்துகிறது.

பஞ்சாப் அரசியல் கட்சிகள்

மேற்கோள்கள்

🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்