பசுபதி சர்மா


பசுபதி சர்மா (Pashupati Sharma) ஒரு நேபாள கிராமிய இசைப் பாடகர் ஆவார். இவர் நேபாளத்தின் சியாங்ஜா மாவட்டத்தின் புட்டலிபஜார் நகராட்சி பகுதி எண் 3 இல் 1982 ஆம் ஆண்டு அக்டோபர் 31 ஆம் நாள் பிறந்தார். [1] பாடுவதில் ஆர்வம் கொண்ட சர்மா தனது மேற்படிப்புக்காக 2003 ஆம் ஆண்டில் காத்மாண்டு சென்றார். இவர் சப்தகோசி டோஹோரி சஞ்சில் என்ற கிராமிய இசைப் பாடகர்கள் சங்கத்தில் பாடத் தொடங்கினார். [2] 2003-ஆம் ஆண்டில் தனது முதல் அதிகாரப்பூர்வ பாடலை வெளியிட்டார். சர்மா தனது வாழ்க்கையில் ஏற்கனவே 200 க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார். இவரது பாடல்கள் தேசபக்தி, காதல் மற்றும் நையாண்டி ஆகியவற்றைச் சுற்றி வருகின்றன. இவரது சமீபத்திய நையாண்டிப் பாடலான லுட்னா சேக் லுட் சமீபத்தில் வலையொளியில் இருந்து நீக்கப்பட்டது. [3] [4] [5] இவர் நேபாள நாட்டுப்புற இசைத் துறையில் வாழும் மேதை ஆவார். 2018-ஆம் ஆண்டில் இவர் தேவி கர்தி மகருடன் "சத்தா ஹரயோ" பாடலை வெளியிட்டார். [6] அடுத்ததாக இவர் 2079 பைசாக்கில் நவல்பூரில் இருந்து ரோஷன் ரெக்மியுடன் இணைந்து புதிய பாடலைப் பாடப் போகிறார்.

பசுபதி சர்மா
Pashupati Sharma in 2018
2018- ஆம் ஆண்டில் பசுபதி சர்மா
பின்னணித் தகவல்கள்
இயற்பெயர்पशुपति शर्मा
பிறப்பு31 அக்டோபர் 1982 (1982-10-31) (அகவை 41)
புத்தலிபார் நகராட்சி −3 சவுதார், சியாங்ஜா மாவட்டம் நேபாளம்
இசை வடிவங்கள்கிராமிய இசை அல்லது நாட்டுப்புற இசை
தொழில்(கள்)கிராமிய இசைக்கலஞர்
இசைக்கருவி(கள்)குரலிசை, ஆர்மோனியம்
இசைத்துறையில்2003–தற்போது வரை

விருதுகள்

  • சிறந்த நாட்டுப்புற டோஹோரி பாடலுக்கான படிம விருது [7]
  • சிறந்த நாட்டுப்புற பாடகருக்கான ரேடியோ காந்திபூர் இசை விருது [8]

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=பசுபதி_சர்மா&oldid=3689700" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்