நேகா சர்மா

இந்திய நடிகை

நேகா சர்மா (Neha Sharma, பிறப்பு: 21 நவம்பர் 1987)] ஓர் இந்திய திரைப்பட நடிகையாவார். பீகார் மாநிலத்தைச் சார்ந்த இவர் மவுண்ட் கார்மல் பள்ளியில் படித்தவர்.[2] பின்னர் தேசிய ஆடை வடிவமைப்பாளர் தொழில்நுட்பக் கல்லூரியில் (NIFT) ஆடை வடிவமைப்பாளர் பட்டமும் பெற்றவர். இவரும் இவருடைய முழு குடும்பமும் பீகாரிலிருந்து தில்லிக்கு குடிபெயர்ந்தது. திரைப்பட நடிகையாக சிறுத்த எனும் தெலுகு மொழிப்படத்தில் நடித்தார்.[3] இவர் நடித்த முதல் இந்தி மொழித் திரைப்படம் மோஹித் சூரியின் க்ரூக் திரைப்படமாகும். 2010 ஆம் ஆண்டில் இத்திரைப்படம் வெளியானது. இவர் எந்தவித திரைத்துறைப் பின்புலமும் இல்லாதவர் ஆவார். இவரது நடிப்பு இத்திரைப்படத்தில் பரவலான கவனத்தினைப் பெற்றது.

நேகா சர்மா
Neha Sharma
பிறப்பு21 நவம்பர் 1987 (1987-11-21) (அகவை 36)
பாகல்பூர், பீகார்[1]
பணிநடிகை, வடிவழகி
செயற்பாட்டுக்
காலம்
2007–இன்று
பெற்றோர்அஜித் சர்மா (தந்தை)

வாழ்க்கைக் குறிப்பு

நேகா சர்மா 21 நவம்பர் 1987 ஆம் ஆண்டில் பீகார் மாநிலத்தின் பாகல்பூர் எனும் இடத்தில் பிறந்தவர். இவரது தந்தையார் அஜித் சர்மா இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சியினைச் சார்ந்தவர் ஆவார். இவர் ஒரு தொழிலதிபர் மற்றும் பாகல்பூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். நேகா சர்மா தனது தந்தையாருக்காக தேர்தல் காலங்களில் பலமுறை பிரச்சாரம் செய்துள்ளார். நேகா சர்மா சிறுவயதில் ஈழை நோயால் பாதிக்கப்பட்டதால் அடிக்கடி உடல்நலக் குறைவு ஏற்பட்டது. ஹைதிராபாத்திலுள்ள ஒரு குடும்பத்தின் ஆசீர்வாதத்தால் தற்போது அந்நோயிலிருந்து முழுமையாக சுகம் பெற்றதாகத் தெரிவிக்கிறார்.

சமையல் செய்வது, இசை கேட்பது மற்றும் நடனம் ஆடுவது ஆகியன இவரது பொழுது போக்குகளாகும்.[4] இந்திய பாரம்பரிய நடனமான கதக் நடனத்தில் இவர் பயிற்சி பெற்றவர். மேலும் லத்தீன் நடனம் சல்சா (salsa), ஜிவ் (jive), ஜாஸ் (jazz), மெரின்ங் (merengue), ஹிப் ஹாப் (hip hop) ஆகியவற்றையும் கற்றுள்ளார்.

திரைப்படங்கள்

இவர் நடித்து தமிழில் வெளியான சோலோ திரைப்படம் குறித்த நாளில் தமிழகத்தில் திரையிடப்படவில்லை. இத்திரைப்படத்தில் மலையாள உருவாக்கத்திலும் நேகா சர்மா தமிழ் பேசும் பெண்ணாக நடித்திருக்கிறார். திரைப்படம் வெளியாக வேண்டிய காலத்தில் தமிழகத்தின் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்களின் கூட்டமைப்பு புதிய திரைப்படங்களை வெளியிடமாட்டோம் என அறிவித்ததால் ஒரு நாள் மட்டும் திரையிடப்பட்டு பின்னர் திரையரங்குகளிலிருந்து விலக்கிக் கொள்ளப்பட்டது. அதன் பின் போராட்டம் முடிவுக்கு வந்தவுடன் மீண்டும் திரையிடப்பட்டது.[5][6]நேகா சர்மாவுக்கு வரும் அனைத்து திரைப்பட வாய்ப்புகளையும் ஏற்றுக் கொள்ளாமல், வித்தியாசமான கதாப்பாத்திரங்களைக் கொண்ட திரைப்படங்களை மட்டுமே ஏற்றுக் கொள்கிறார். இவர் சில குறும்படங்களிலும் பங்கு பெற்றுள்ளார்.[7] இதுவரை அவர் நடித்த திரைப்படங்களில் பட்டியல்.

வருடம்திரைப்படம்கதாப்பாத்திரம்மொழிகுறிப்புகள்
2007சிறுத்தஸஞ்சனாதெலுகுதெலுகில் அறிமுகம்
2009குர்ராடுஹேமாதெலுகு
2010க்ரூக்ஸுகானிஇந்திஇந்தியில் அறிமுகம்
2012தெரி மெரி ககானிமீராஇந்திசிறப்புத் தோற்றம்
க்யா சூப்பர் கூல் ஹெய்ன் ஹும்'சிம்ரன்இந்தி
2013ஜெயந்தபி கி லவ் ஸ்டோரிசிம்ரன்இந்தி
யாம்லா பெக்லா தீவானா 2சுமன் கன்னாஇந்தி
2014யங்கிஸ்தான்அந்விதா சவுகான்இந்தி
2016கிரித்திகிரித்திஇந்திகுறும்படம்
யுவாங்சாங் இந்தி, மாண்டரின்
தும் பின் IIதரண்இந்தி
2017முபாரகான் இந்திசிறப்புத் தோற்றம்
சோலோஅகஷ்ராமலையாளம்
சோலோதமிழ்
2018ஜூங்காதமிழ்தயாரிப்பில்

அங்கீகாரங்கள்

  • 2010 ஆம் ஆண்டில் வேகமாக முன்னேறிவரும் இந்திய மனிதர்களில் ஐந்தாவது இடத்தினைப் பெற்றார்.[8]
  • டைம்ஸ் ஆஃப் இந்தியா வெளியிட்ட இந்தியாவின் மிகவும் விரும்பக்கூடைய நபர்கள் பட்டியலில் 31 வது இடத்தினைப் பெற்றார்.[9]
  • இந்தியாவின் கவர்ச்சிகராமான பெண்மணி வரிசையில் முதலிடத்தினைப் பெற்றார்.[10]
  • உலகளவில் கவர்ச்சிகரமான பெண்களின் வரிசையில் ஏழாவது இடத்தினைப் பெற்றார்.[11]

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=நேகா_சர்மா&oldid=3944537" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்