நெக்கென்
நெக்கென் நகரம் (Nekhen)[2] மிசிரி மொழி: الكوم الأحمر[3]) மூன்றாம் நக்காடா பண்பாட்டுக் காலத்திய வரலாற்றுக்கு முந்தைய எகிப்து (கிமு 3200–3100) மற்றும் எகிப்தின் துவக்க கால அரச மரபுகள் (கிமு 3100–2686) காலத்தில் தெற்கு எகிப்தின் ஆன்மீகம் மற்றும் அரசியல் தலைநகரமாக நெக்கென் நகரம் விளங்கியது. இது எகிப்தின் பண்டைய நகரங்களில் மிகவும் பழமையானதாகும்.
நெக்கென் | |
---|---|
இருப்பிடம் | அஸ்வான் ஆளுநனரகம், எகிப்து |
ஆயத்தொலைகள் | 25°5′50″N 32°46′46″E / 25.09722°N 32.77944°E |
வரலாறு | |
கட்டுமானப்பொருள் | தொல்பொருட்கள் கொண்ட தொல்லியல் களம் |
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/c/c4/Gebel_el-Arak_Knife_ivory_handle_%28back%29.jpg/220px-Gebel_el-Arak_Knife_ivory_handle_%28back%29.jpg)
இந்நகரம் ஓரசு கடவுளின் வழிபாட்டு மையமாக விளங்கியதால், கோவில்கள் அதிகம் இருந்தது. இந்நகரத்தை ஆங்கிலேய தொல்லியல் மற்றும் எகிப்தியவியல் அறிஞர்களான ஜேம்ஸ் கியுபெல் மற்றும் பிரடெரிக் டபிள்யு. கிரீன் ஆகியோர் 19-ஆம் நூற்றாண்டின் இறுதியில் அகழ்வாய்வு செய்து தொல்பொருட்களை கண்டுபிடித்தனர். இந்நகரத்தின் அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட தொல்பொருட்களில் முக்கியமானவைகள் கெபல் எல்-அராக் கத்தி மற்றும் நார்மெர் கற்பலகை ஆகும்.
தொல் பொருட்கள்
சிற்பங்கள்
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/5/52/Hierakonpolis_ivory_objects.jpg/220px-Hierakonpolis_ivory_objects.jpg)
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/2/27/Human_figurine_from_the_Hierakonpolis_Main_Deposit.jpg/220px-Human_figurine_from_the_Hierakonpolis_Main_Deposit.jpg)
- தந்தத்திலான தலை
- சுண்ணாம்புக் கல் தலை
- ஆண்குறி உறைகளுடன் கூடிய ஆண் சிலைகள்.
- நெக்கென் நகரக் கோயிலின் சிதிலமடைந்த அடித்தளம்
- மூன்றாம் நக்காடா பண்பாட்டுக் காலத்திய நெக்கென் சுண்ணாம்புக் கல் உருளை
- சுண்ணாம்புக் கல் உருளை ஜாடி மீது பருந்து, தேள், வில், பறவைகள் உருவங்கள்
ஓவியங்கள்
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/4/41/Tomb_100_Hierakompolis%2C_Naqada_II_culture_%28c._3500-3200_BCE%29.jpg/354px-Tomb_100_Hierakompolis%2C_Naqada_II_culture_%28c._3500-3200_BCE%29.jpg)
- விலங்குகளின் தலைவன்
- விலங்கு வேட்டையாளர்கள் ஓவியம்
- வேட்டை நாய் ஓவியம்
- படகு ஓவியம்
தொல்பொருட்கள்
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/a/a9/Hierakonpolis_objects_at_time_of_discovery.jpg/220px-Hierakonpolis_objects_at_time_of_discovery.jpg)
உருளை முத்திரைகள்
- தந்ததிலான உருளை முத்திரை (ஓவியம்)
- தந்ததிலான உருளை முத்திரையில் மண்டியிட்ட மனிர்கள் (ஓவியம்)
- முத்திரையில் விலங்குகள்
- மன்னர் ஒரு கைதியை அடிப்பது போன்ற தோற்றம்[4]
அழகிய தட்டுகள்
- நெக்கென் நகரத்தின் இரண்டு நாய் உருவங்களுடன் கூடிய வண்ணத்தட்டு [5]
படைக்கருவிகள்
- பார்வோன் இரண்டாம் இசுகோர்ப்பிய்னின் சூலாயுதம் (முன் பக்கம்)
- பார்வோன் இரண்டாம் இசுகோர்ப்பிய்னின் சூலாயுதம் (பின் பக்கம்)
- நார்மெர் காலத்திய போர்க்கருவிகள்
- போர் விலங்குகள்