நீர் விலக்கு விளைவு

நீர் விலக்கு விளைவு (Hydrophobic effect) என்பது முனைவுறும் தன்மையற்ற பொருட்களை நீர்க்கரைசலில் திரட்டுவதற்கும் மற்றும் நீரின் மூலக்கூறுகளை நீக்குவதற்கும் வேதியியல் பொருள்களால் வெளிப்படுத்தப்படும் ஒரு போக்கு ஆகும்.[1][2]  இது நீர் மற்றும் முனைவற்ற தன்மை கொண்ட பொருட்களைத் தனியாகப் பிரித்தலை விவரிக்கிறது. இப்பண்பானது, தண்ணீரின் மூலக்கூறுகளுக்கிடையில் ஐதரசன் பிணைப்புகளை அதிகரித்து, மேலும் தண்ணீர் மற்றும் முனைவுத்தன்மையற்ற மூலக்கூறுகளுக்கிடையேயான தொடும் பரப்பைக் குறைக்கிறது.

ஒரு நீர்த்துளி நீர் விலக்கும் இலையின் மேற்பரப்புடன் தொடர்பைக் குறுக்கிக் கொள்வதற்காக கோள வடிவத்தை எடுத்துள்ளது.

நீர் விலக்கு விளைவானது, எண்ணெய் மற்றும் நீர் இவற்றின் கலவையை அதன் இரண்டு கூறுகளாக பிரிப்பதற்கான காரணமாக அமைகிறது. செல் சவ்வுகள் மற்றும் வெசிக்கிள்கள் உருவாக்கம், புரத மடிப்பு, புரத சவ்வுகளை முனைவுத்தன்மையற்ற கொழுமிய சூழல் மற்றும் புரதக்கூறு அளவிலான சிறு மூலக்கூறு சேர்க்கைகளில் உட்செருகுதல் போன்ற உயிரியல் தொடர்புடைய விளைவுகளுக்கும் நீர் விலக்கு விளைவானது காரணமாக அமைகிறது. ஆகவே, நீர் விலக்கு விளைவானது உயிர் வாழ்தலுக்கும் அவசியமானதாக உள்ளது.[3][4][5][6] இந்த விளைவைத் தருகின்ற அல்லது ஆட்படுகின்ற பொருட்கள் நீர்விலக்கிகள் (hydrophobes) என அழைக்கப்படுகின்றன.

மேற்கோள்கள்

🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்