நிமய் பட்டாச்சார்யா

நிமய் பட்டாச்சார்யா (Nimai Bhattacharya 10 ஏப்ரல் 1931 – 25 ஜூன் 2020) ஓர் வங்காள எழுத்தாளர் ஆவார். இவர் மகுரா மாவட்டத்தில் உள்ள சலிகாவில் பிறந்தார்.[1] இவர் 25 ஜூன் 2020 அன்று கொல்கத்தாவில் 89 வயதில் காலமானார். 

நிமய் பட்டாச்சார்யா
নিমাই ভট্টাচার্য
பிறப்பு10 April 1931
சலிகா, மகுரா மாவட்டம், பிரித்தானிய இந்தியா, வங்காளதேசம்
இறப்புசூன் 25 ,2020 (aged 89)
கொல்கத்தா
தேசியம்இந்தியன்
குறிப்பிடத்தக்க படைப்புகள்மெம்சாகேப்

ஆரம்ப கால வாழ்க்கை

பட்டாச்சார்யாவின் தாயார் இவருக்கு மூன்று வயதாக இருந்தபோது இறந்தார். இவர் பணிநிமித்தம் காரணமாக கிழக்கு வங்கத்திலிருந்து மேற்கு வங்கத்திற்கு குடிபெயர்ந்தார்.[1] பின்னர் கல்கத்தாவின் ரிப்பன் கல்லூரியில் ஐ.ஏ மற்றும் இளங்கலைப் பட்டம் பெற்ற பின்னர் இவர் பத்திரிகைத் துறையில் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். இவர் எழுதிய ஒரு புதினம் 1963 இல் அமிர்தோபஜாரில் வெளியிடப்பட்டது.[2] இவரது அடுத்த நான்கு புதினங்கள் செய்தித்தாளில் வெளியிடப்பட்டன. அதன் பிறகு, இவர் தொழில்முறை எழுத்தாளாராக ஆனார். 

குறிப்பிடத்தக்க படைப்புகள்

இவர் 150 க்கும் மேற்பட்ட நூல்களை எழுயுள்ளார்.[3]மெம்சாஹேப் மிகவும் பரவலாக அறியப்பட்ட நூலாகும்.[4][5] இந்த நூலினை அடிப்படையாக வைத்து உத்தம்குமார் மற்றும் அபர்ணா சென் ஆகியோர் முக்கியக் கதாப்பாத்திரத்தில் ஒரு திரைப்படம் வெளியானது.[6] அவரது குறிப்பிடத்தக்க புத்தகங்கள் சில:

  • மெம்சாஹேப்
  • மினிபஸ்
  • மாடல்
  • இன்குலாப்
  • பேச்சலர்
  • கேரணி
  • ராஜதானி எக்ஸ்பிரஸ்
  • ஆங்கிலோ இந்தியன்
  • டார்லிங்
  • யுவர் ஆனர்
  • காக்டெய்ல்
  • போத்தர் ஷேஷே

சான்றுகள்

வெளி இணைப்புகள்

🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்