நிகில் கோசு

பத்ம பூசன் விருது பெற்ற இசையறிஞர்

நிகில் ஜோதி கோசு (Nikhil Ghosh) (1918-1995) இவர் ஓர் இந்திய இசைக்கலைஞர், ஆசிரியர் மற்றும் எழுத்தாளர் ஆவார், கைம்முரசு இணைத் தாளக் கருவி வாசிக்கும் திறமையால் இவர் அறியப்பட்டார். [1] உஸ்தாத் ஹபீஸ் அலிகான் விருதைப் பெற்றுள்ளார். இவரது பாணி தில்லி, அஜ்ரதா, பருகாபாத், இலக்னோ மற்றும் பஞ்சாப் கரானா இசையுடன் இணைந்ததாக அறியப்பட்டது. 1990 ஆம் ஆண்டில், இந்திய அரசு குடிமக்களின் மூன்றாவது உயரிய விருதான பத்ம பூசண் விருதை இவருக்கு வழங்கியது. [2]

சுயசரிதை

நிகில் கோசு டிசம்பர் 28, 1918 அன்று பிரித்தானிய இந்தியாவின் கிழக்கு வங்காளத்தில் (இன்றைய வங்காளதேசம்) ஒரு சிறிய கிராமமான பரிசாலில் பிறந்தார். இவர் இந்துஸ்தானி இசையால் நன்கு அறியப்பட்ட புல்லாங்குழல் கலைஞர் பன்னலால் கோசுவின் தம்பியாவார். [3] [4] உள்ளூரில் அறியப்பட்ட சித்தார் கலைஞராக இருந்த இவரது தந்தை அக்‌சய் குமார் கோசுடமிருந்து ஆரம்பகாலத்தில் இசைப் பயிற்சி பெற்ற பிறகு, அகமது ஜான் திரக்வா, அமீர் உசேன் கான் மற்றும் ஞானன் பிரகாசு கோசு போன்ற பல பிரபல இசைக்கலைஞர்களின் கீழ் குரல் மற்றும் கைம்முரசு இணையில் பயிற்சி பெற்றார். ஃபயாஸ் கான், ஹபீஸ் அலி கான், அலாவுதீன் கான், ஓம்கார்நாத் தாக்கூர், படே குலாம் அலிகான், அமீர் கான், பன்னலால் கோசு, ரவிசங்கர், அலி அக்பர் கான், விலாயாத் கான், பீம்சென் ஜோஷி, நிகில் பானர்ஜி ஆகியோர் அடங்கிய இவரது காலத்தின் குறிப்பிடத்தக்க இசைக்கலைஞர்கள், வசந்த் ராய், பண்டிட் ஜஸ்ராஜ், அம்ஜத் அலிகான் மற்றும் சிவ்குமார் சர்மா போன்ற புகழ் பெற்ற கலைஞர்களுடன் மேடையில் பல நிகழ்ச்சிகளையும் நிகழ்த்தியுள்ளார். [5]

கோசு 1956 ஆம் ஆண்டில் இந்துஸ்தானி இசைக் கல்விக்காக அர்ப்பணிக்கப்பட்ட பள்ளியான சங்கீத மகாபாரதியை நிறுவினார். [5] இங்கே, இவர் பல ஆர்வமுள்ள இசைக்கலைஞர்களுக்குப் பயிற்சியளித்தார். அவர்களில் சிலர் இந்திய இந்துஸ்தானி இசையில் தங்கள் பெயர்களை உருவாக்கியுள்ளனர்; அனீஷ் பிரதான், ஏக்நாத் பிம்பாலே, தத்தா யாண்டே, கரோடிலால் பட், கெர்ட் வெக்னர் மற்றும் கீத் மானிங் போன்றவர்கள் அவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர். [6] இவர் தனது மகன்களான நயன் கோசு மற்றும் துருபா கோசு [7] ஆகியோரை முறையே கைம்முரசு இணை மற்றும் சாரங்கி வாசிக்க கற்றுக் கொடுத்தார். குரல் பாடகரான இவரது மகள் துலிகா கோசுக்கும் [8] பயிற்சி அளித்தார். இவர்கள் அனைவரும் பள்ளியில் கற்பித்தல் பணியில் இவருக்கு உதவுகிறார்கள். [9]

கோசு இந்தியாவிலும் வெளிநாட்டிலும் பல நிகழ்ச்சிகளை நிகழ்த்தியுள்ளார். ஆல்டர்பர்க் (1958), எடின்பர்க் (1958), பிராட்டிஸ்லாவா (1980, 1982), ஹெல்சின்கி (1985), ரோம் (1985), ஏதென்ஸ் (1985) மற்றும் 1978 இல் பாரிஸ் யுனெஸ்கோவில் இசை விழாக்களில் தனி இசை நிகழ்ச்சிகளை இவர் நிகழ்த்தியுள்ளார் . [5] பல பல்கலைக்கழகங்களில் வருகை ஆசிரியராகவும் பணியாற்றினார். வழக்கமான இசைக் குறியீட்டு முறைமையில் மேம்பாடுகளைச் செய்த இவர், தனது அமைப்பை விவரிக்கும் இராகம் மற்றும் தாளத்தின் அடிப்படைகள்: ஒரு புதிய அமைப்பு குறியீட்டுடன் என்ற ஒரு புத்தகத்தை எழுதியுள்ளார். [10] [11]

1990 ஆம் ஆண்டில் இந்திய அரசு இவருக்கு பத்ம பூசண் விருது வழங்கி கௌரவித்தது. [2] மேலும் இவர் 1995 இல் உஸ்தாத் ஹபீஸ் அலிகான் விருதைப் பெற்றுள்ளார். 1955 இல் இவருக்கு உஷா நயம்பள்ளி என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இவர் 1995 மார்ச் 3, அன்று தனது 76 வயதில்இறந்தார். [5]

மேலும் காண்க

குறிப்புகள்

வெளி இணைப்புகள்

மேலும் படிக்க

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=நிகில்_கோசு&oldid=3652768" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்