நிகர் சுல்தானா (நடிகை)

இந்திய நடிகை

நிகர் சுல்தானா (Nigar Sultana) (21 சூன் 1932 - 21 மே 2000) இந்திப் படங்களில் பணியாற்றிய ஓர் இந்திய நடிகையாவார். இவர், ஆக் (1948), பதங்கா (1949), ஷீஷ் மஹால் (1950), மிர்சா காலிப் (1954), யஹுதி (1958), தோ காளியான் (1968), போன்ற திரைப்படங்களில் தோன்றினார். ஆனால் முகல்-இ-அசாம் (1960) என்ற வரலாற்று காவியத் திரைப்படத்தில் "பஹார் பேகம்" என்ற வேடத்தில் நடித்ததற்காக இவர் மிகவும் குறிப்பிடத்தக்கவரானர். இவர் திரைப்படத் தயாரிப்பாளர் கே. ஆசிப்பின் மனைவியாவார். இவர் மே 2000இல் மும்பையில் இறந்தார்.

நிகர் சுல்தானா
பிறப்பு(1930-06-21)21 சூன் 1930
ஐதராபாத்து, ஐதராபாத் இராச்சியம், பிரித்தானிய இந்தியா
இறப்பு21 ஏப்ரல் 2000(2000-04-21) (அகவை 69)
மும்பை, மகாராட்டிரம், இந்தியா
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
1946–1986
வாழ்க்கைத்
துணை
கே. ஆசிப்
பிள்ளைகள்5

ஆரம்பகால வாழ்க்கையும் கல்வியும்

நிகர் சுல்தானா, 21 சூன் 1932 அன்று இந்தியாவின் ஐதராபாத்தில்[1] ஐந்து பேர் கொண்ட குடும்பத்தின் இளைய மகளாக பிறந்தார். இவருக்கு இரண்டு சகோதரர்களும் இரண்டு சகோதரிகளும் உள்ளனர். இவர் தனது குழந்தைப் பருவத்தை ஐதராபாத்தில் கழித்தார். அங்கு இவரது தந்தை ஐதராபாத் நிசாமின் இராணுவத்தில் படைத்தலைவராக பணியாற்றினார்.[2]

இவர் குறைந்த காலமே பள்ளிக்குச் சென்றார். பின்னர் வீட்டிலேயே படித்தார். இவர் ஒரு நிகழ்ச்சியில் பள்ளி நாடகத்தில் பங்கேற்ற பின்னர், நடிப்பில் ஆர்வம் காட்டினார்.[2]

தொழில்

ஹம் தும் அவுர் வோ (1938) என்ற திரைப்படத்தை பார்த்த இவர் நடிப்பின் மீது ஆர்வம் கொண்டார். தன்னுடைய தந்தையின் நண்பரான ஜெகதீஷ் சேதி, தான் தயாரிக்கும் ஒரு படத்தில் மோகன் பவானியுடன் கதாநாயகியாக வாய்ப்பு வழங்கியபோது, இவர் அந்த வாய்ப்பை உடனே ஒப்புக்கொண்டார்.[2]

1946ஆம் ஆண்டு வெளியான ரங்கபூமி படத்தின் மூலம் இவர் திரைப்படங்களில் நுழைந்தார். ராஜ் கபூரின் ஆக் (1948) பாலிவுட்டில் இவரது முதல் பெரிய வெற்றியாகும். அப்படத்தில் இவர் "நிர்மலா" என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். இது விமர்சகர்களாலும், பார்வையாளர்களாலும் வெகுவாக பாராட்டப்பட்டது. அதன் பிறகு, இவர் பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்தார்.[3]

நிகர் சுல்தானாவின் உருவப்படம்

இவரது முதல் பெரிய வெற்றிப் படம் ஷிகாயத் (1948), புனேவில் தயாரிக்கப்பட்டது. பின்னர் ரஞ்சித் என்பவரின் தயாரிப்பில் பெலா (1947) என்ற படம் வெளி வந்தது. அதற்குப் பிறகு மேலும் பல முன்னணி கதாபாத்திரங்களில் நடித்தார். இளவரசர் சலீம் ( திலீப் குமார் ) அனார்க்கலி ( மதுபாலா ) என்ற அரசவை நடனக் கலைஞர் மீது அன்பைக் காட்டும் முகல்-இ-அசாம் (1960) திரைப்படத்தில் அனார்கலி மீது பொறாமையைக் கொண்டுள்ள 'பஹார்' என்ற பாத்திரத்தில் இவர் நடித்தார். தேரி மெஹ்ஃபில் மெய்ன், ஜப் ராத் ஹோ ஐசி மத்வாலி ஆகிய பாடல்கள் இவர் நடித்து படமாக்கப்பட்டன.[3] இவரது மற்ற படங்களில் தாரா (1953), கைபர் ஆகியவை அடங்கும்.[2]

சொந்த வாழ்க்கை

கேல் படத்திலிருந்து நிகர் சுல்தானா சித்திரம்
ஆக் (1948) திரைப்படத்தில் சுல்தானா

நிகர் சுல்தானா, பாக்கித்தான் நடிகர் தர்பன் குமாருடன் தொடர்பு கொண்டிருந்தார்.[4] சூன் 13, 1959 அன்று, இவர் ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பை நடத்தி, தான் பாக்கித்தான் நடிகரை திருமணம் செய்து கொண்டதாக வெளியான செய்திகளை மறுத்தார்.[5]

பின்னர், முகல்-இ-ஆஸம் (1960) படத்தின் தயாரிப்பாளரும், இயக்குனருமான கே. ஆசிப்பை மணந்தார்.

இவர், நடிகை ஹீனா கவுசரின் தாயார்.[6] ஹீனா கவுசர் 1970களிலும், 1980களின் தொடக்கத்திலும் அதிக எண்ணிக்கையிலான படங்களில் இரண்டாம் பாத்திரங்களில் தோன்றினார். 1950களின் திரையுலகில் நடித்து வந்த இரண்டு நடிகைகளான, சித்ரா (பிறப்பு அப்சர்-அன்-நிசா) என்பவ்ரும் பராஸ் (பிறப்பு யூசுப்-உன்-நிசா) என்பவரும் இவரது மருமகள்கள் ஆவர்.[7]

பாக்கித்தானிய திரைப்பட இயக்குநர் எஸ். எம். யூசுப் இந்தியாவில் வாழ்ந்தபோது அவருடனும் இவருக்கு திருமண உறவு ஏற்பட்டது. இவர்களுக்கு ஒரு குழந்தையும் இருந்தது. இவர்களது திருமணம் ஐந்தாண்டுகள் நீடித்திருந்தது.[8]

இறப்பு

இவர் 21 ஏப்ரல் 2000 அன்று மும்பையில் இறந்தார்.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்