நானக்சாகி நாட்காட்டி

நானக்சாகி நாட்காட்டி (Nanakshahi calendar) என்பது, முக்கியமான சீக்கிய நிகழ்வுகளைக் தீர்மானிப்பதற்காக சிரோமணி குருத்துவாரா பிரபந்தக் குழுவினரால் ஏற்றுக்கொள்ளப்பட்ட வெப்பமண்டல சூரிய நாட்காட்டி ஆகும். பிரபல சீக்கிய அறிஞரான பேராசிரியர் கிர்பால் சிங் பதுங்கர் அக்குழுவின் தலைமைப் பொறுப்பில் இருந்தபோது சீக்கியத் தலைவர்களின் முன்னிலையில் இந்த நாட்காட்டி நடைமுறைப்படுத்தப்பட்டது.[1] 1998ல் இருந்து பயன்பாட்டில் உள்ள இந்த நாட்காட்டி, இதற்கு முன்னர் புழக்கத்தில் இருந்த இந்தியத் தேசிய நாட்காட்டிக்குப் பதிலாக நடைமுறைக்கு வந்தது. இதை வடிவமைத்தவர் பால் சிங் புரேவால் என்பவர் ஆவார். சீக்கியத்தின் முதல் குருவான குரு நானக் பிறந்த 1469ம் ஆண்டே இந்த நாட்காட்டியின் தொடக்கமாகக் கொள்ளப்படுகிறது. புத்தாண்டு கிரகோரிய நாட்காட்டியின்படி ஒவ்வோராண்டும் மார்ச் 14ம் தேதி வருகிறது.[1]

குரு நானக் தேவ் ஜி

இந்த நாட்காட்டி உலகெங்கிலும் உள்ள 90% குருத்துவாராக்களினால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. சீக்கிய உலகின் சில பழமைவாதக் குழுக்களிடையே இதை ஏற்பது குறித்த சர்ச்சைகள் உள்ளன. குருமார்களின் காலத்திலிருந்தே இருந்து வருகின்ற தம்டமி தக்சால் போன்ற சில அமைப்புக்களும் இதை ஏற்றுக்கொள்ளவில்லை.

கூறுபாடுகள்

நானக்சாகி நாட்காட்டியின் சில முக்கியமான கூறுபாடுகள் வருமாறு:

  • இது ஒரு வெப்பமண்டலச் சூரிய நாட்காட்டி.
  • சீக்கியத்தின் நிறுவனர் குரு நானக்கின் பெயரைத் தழுவி நானக்சாகி என அழைக்கப்படுகிறது.
  • குரு நானக் பிறந்த ஆண்டே (கிபி 1469) இந்த நாட்காட்டியின் முதல் ஆண்டு.
  • மேற்கத்திய நாட்காட்டியின் பெரும்பாலான அம்சங்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது.
  • ஆண்டின் கால அளவு மேற்கத்தைய ஆண்டுக்குச் சமமானது. (365 நாட்கள் 5 மணி 48 நிமிடம் 45 நொடிகள்)
  • 31 நாட்கள் கொண்ட 5 மாதங்களையும் தொடர்ந்து 30 நாட்கள் கொண்ட 7 மாதங்களையும் உள்ளடக்குகிறது.
  • ஒவ்வொரு 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை கடைசி மாதத்தில் ஒரு நாள் கூட்டப்படுகிறது.

மாதங்கள்

நானக்சாகி நாட்காட்டியின் மாதங்கள் வருமாறு:[1][2]

No.பெயர்பஞ்சாபிநாட்கள்கிரகரிய மாதங்கள்
1செட்ਚੇਤ3114 மார்ச் – 13 ஏப்ரில்
2வைசாக்ਵੈਸਾਖ3114 ஏப்ரில் – 14 மே
3ஜெட்ਜੇਠ3115 மே – 14 யூன்
4ஹார்ਹਾੜ3115 யூன் – 15 யூலை
5சாவன்ਸਾਵਣ3116 யூலை – 15 ஆகத்து
6பாதன்ਭਾਦੋਂ3016 ஆகத்து – 14 செப்டெம்பர்
7அஸ்சுਅੱਸੂ3015 செப்டெம்பர் – 14 அக்டோபர்
8கட்டக்ਕੱਤਕ3015 அக்டோபர் – 13 நவம்பர்
9மகர்ਮੱਘਰ3014 நவம்பர் – 13 டிசம்பர்
10போஹ்ਪੋਹ3014 டிசம்பர் – 12 சனவரி
11மாக்ਮਾਘ3013 சனவரி – 11 பெப்ரவரி
12பகுன்ਫੱਗਣ30/3112 பெப்ரவரி – 13 மார்ச்

மேற்கோள்கள்

🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்