நம்ரதா சிரோத்கர்

இந்திய நடிகை

நம்ரதா சிரோத்கர் (Namrata Shirodkar)(பிறப்பு: சனவரி 22, 1972) என்பவர் முன்னாள் இந்திய நடிகை மற்றும் வடிவழகி ஆவார்.[1] இவர் 1993-ல் பெமினா மிஸ் இந்தியா பட்டத்தை வென்றார்.

நம்ரதா சிரோத்கர்

பிறப்பு22 சனவரி 1972 (1972-01-22) (அகவை 52)
மும்பை, மகாராட்டிரம், இந்தியா
பணி
  • நடிகை
  • வடிவழகி
வாழ்க்கைத்
துணை
பிள்ளைகள்2
அழகுப் போட்டி வாகையாளர்
பட்டம்பெமினா இந்திய அழகி 1993
பெமினா இந்திய அழகி
செயல் ஆண்டுகள்1993–2002; 2022

கச்சே தாகே (1999), எழுபுன்னா தரகன் (1999), வாஸ்தவ்: தி ரியாலிட்டி (1999) மற்றும் புகார் (2000) போன்ற படங்களில் நடித்ததற்காக இவர் மிகவும் பிரபலமானவர். இதற்காக இவர் பன்னாட்டு இந்தியத் திரைப்பட நிறுவன சிறந்த துணை நடிகை விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டார்.[2] அஸ்தித்வா (2000), தில் வில் பியார் வியார் (2002), எல். ஓ. சி. கார்கில் (2003), மற்றும் அண்ட் ப்ரெஜுடிஸ் (2004), இது வெளிநாடுகளில் குறிப்பாக ஐக்கிய இராச்சியத்தில் வெற்றிகரமாக ஓடியது.[3] இவர் 2005-ல் தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவை மணந்தார்.[4]

இளமை

நம்ரதா சிரோத்கர் 22 சனவரி 1972 அன்று கோவா வம்சாவளியைச் சேர்ந்த மகாராட்டிர குடும்பத்தில் பிறந்தார்.[1][5][6] இவர் நடிகை சில்பா சிரோத்கரின் மூத்த சகோதரி[7] மற்றும் பிரம்மச்சாரி (1938) படத்தில் நடித்த பிரபலமான மராத்தி நடிகை மீனாட்சி சிரோத்கரின் பேத்தி ஆவார்.[6][8]

வடிவழகி தொழில்

சிரோத்கர் ஒரு வடிவழகியாக பணிபுரிந்தார். மேலும் 1993-ல் இந்திய அழகிப் பட்டம் பெற்றார்.[9] பிரபஞ்ச அழகிப் போட்டியில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தி ஆறாவது இடத்தைப் பிடித்தார். அதே ஆண்டு, இவர் ஆசியா பசிபிக் அழகிப் போட்டியில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். இப்போட்டியில் இரண்டாமிடம் பெற்றார்.

நடிப்பு வாழ்க்கை

நம்ரதா 1977ஆம் ஆண்டு ஷீரடி கே சாய் பாபா திரைப்படத்தில் சத்ருகன் சின்காவுடன் குழந்தை நட்சத்திரமாக ஒரு சிறிய பாத்திரத்தில் தோன்றினார்.[10]

சிரோத்கரின் முதல் படம் புரப் கி லைலா பச்சிம் கி சாய்லாவாக இருந்தது. இதில் அக்சஷய் குமார் மற்றும் சுனில் செட்டி ஆகியோர் முன்னணியிலிருந்தனர். இப்படத்திற்கு நதீம் சரவன் இசையமைத்தார். இந்தப் படம் வெளியாகவே இல்லை. இவரது ஓய்வுக்குப் பிறகு திரைப்படம் முடிக்கப்பட்டது. இப்படத்தின் பெயர் ஹலோ இந்தியா என மாற்றப்பட்டது. ஆனால் இதுவும் இன்னும் வெளியீட்டிற்காகக் காத்திருக்கிறது. சிரோத்கர் சல்மான் கான் மற்றும் டுவிங்கிள் கன்னாவுடன் ஜப் பியார் கிசிஸே ஹோதா ஹை (1998) திரைப்படத்தில் ஒரு சிறிய பாத்திரத்தில் அறிமுகமானார். பின்னர் இவர் வாஸ்தவ் மற்றும் கச்சே தாகே (இரண்டும் 1999) ஆகிய வெற்றிப் படங்களில் நடித்தார். இவரது நடிப்பு பாராட்டப்பட்டது. இவர் பாலிவுட்டில் நன்கு அறியப்பட்ட நடிகையானார்.[11]

தனிப்பட்ட வாழ்க்கை

2000 ஆம் ஆண்டில், சிரோத்கர் தெலுங்கு திரைப்படத்துறை நடிகர் மகேஷ் பாபுவை வம்சி திரைப்படத்தின் தளத்தில் சந்தித்தார். படப்பிடிப்பு முடிந்த சிறிது நேரத்திலேயே இவர்கள் குலாவுதல் செய்ய ஆரம்பித்தனர்.[12] இவர்கள் 10 பிப்ரவரி 2005 அன்று மேரியட் மும்பை ஜூஹுவில் அத்தடு படப்பிடிப்பின் போது திருமணம் செய்து கொண்டனர். சிரோத்கர் தற்போது தனது கணவருடன் ஐதராபாத்தில் வசித்து வருகிறார்.[13] இத்தம்பதியருக்கு ஒரு மகன், ஒரு மகள் என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.[4][14]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=நம்ரதா_சிரோத்கர்&oldid=3946564" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்