நண்பர்கள் (திரைப்படம்)

ஷோபா சந்திரசேகர் இயக்கத்தில் 1991 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

நண்பர்கள் (Nanbargal) ஷோபா சந்திரசேகர் இயக்கத்தில், 1991 ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ்த் திரைப்படமாகும். விஜய் தயாரிப்பில், பபுள் போஸ் மற்றும் சங்கீதா ராஜன் இசை அமைப்பில், 14 பிப்ரவரி 1991 ஆம் ஆண்டு வெளியானது. நீரஜ், மம்தா குல்கர்னி, விவேக், தினேஷ், சுந்தர், ஷிலி கபூர், நாகேஷ், மனோரமா, சங்கீதா மற்றும் பலர் நடித்துள்ள இப்படத்திற்கு திரைக்கதை எழுதியவர் எஸ். ஏ. சந்திரசேகர் ஆவார். வணிக ரீதியாக வெற்றி பெற்ற இப்படத்தை, ஹிந்தி மொழியில் மேரா தில் தேரே லியே என்ற பெயரில் மறு ஆக்கம் செய்யப்பட்டு வணிகரீதியாகத் தோல்வி அடைந்தது.[1][2][3]

நண்பர்கள்
இயக்கம்சோபா சந்திரசேகர்
தயாரிப்புவிஜய்
கதைசோபா சந்திரசேகர்
திரைக்கதைஎஸ். ஏ. சந்திரசேகர்
இசைபாடல்கள்:
பாபுல் போஸ்
பின்னணி இசை:
சங்கீத ராஜன்
நடிப்பு
  • நீராஜ்
  • மம்தா குல்ராணி
ஒளிப்பதிவுஎஸ். ஜெயச்சந்திரன்
படத்தொகுப்புடி. ஷியாம் முகர்ஜி
கலையகம்வி. வி. கிரியேஷன்ஸ்
வெளியீடுபெப்ரவரி 14, 1991 (1991-02-14)
ஓட்டம்140 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்

நீரஜ், மம்தா குல்கர்னி, விவேக் (நகைச்சுவை நடிகர்), தினேஷ், சுந்தர், ஷிலி கபூர், நாகேஷ், மனோரமா (நடிகை), சங்கீதா, பிரதாபச்சந்திரன், வெண்ணிற ஆடை மூர்த்தி, அஜய் ரத்தினம், குமரிமுத்து.

கதைச்சுருக்கம்

நல்ல நண்பர்களான விஜய் (நீரஜ்), கோபி (விவேக்), சலீம், பீடா, பீமா ஆகியோர் ஒரே வகுப்பில் படித்து வருகிறார்கள். பணம்படைத்த, கர்வமுள்ள பெண்ணான ப்ரியாவிற்கு, துவக்கத்தில் விஜயுடன் மோதல் ஏற்படுகிறது. ஆனால், ப்ரியாவை விஜய் விரும்பினான். அதை நிராகரித்து, விஜயை காயப்படுத்தினாள் ப்ரியா. அதனால், பிரியாவிற்கு பாடம் புகட்ட எண்ணிய விஜயின் நண்பர்களிடமிருந்து விஜய் ப்ரியாவை காப்பாற்றுகிறான். நாளடைவில், ப்ரியாவும் விஜயை விரும்பதுவங்கினாள். ஆனால், செல்வாக்குள்ள தொழிலதிபரான ப்ரியாவின் தந்தைக்கு, தன் மகளின் காதல் விவகாரம் சற்றும் பிடிக்கவில்லை.

பின்னர், ப்ரியாவின் தந்தையை சமாளித்து அந்த காதலை நண்பர்கள் எவ்வாறு சேர்த்து வைத்தனர் என்பதே மீதிக் கதையாகும்.

ஒலிப்பதிவு

இப்படத்தின் இசையை அமைத்தவர் பபுள் போஸ் ஆவார். வைரமுத்து மற்றும் புலமைப்பித்தன் பாடல்களின் வரிகளை எழுதினர். ஏழு பாடல்களை கொண்ட ஒலித்தொகுப்பு 1991 ஆம் ஆண்டு டி-சீரிஸ் நிறுவனத்தால் வெளியிடப்பட்டது.[4]

பாடல்களின் பட்டியல்
ட்ராக்பாடல்பாடியதுநீளம்
1ஆச்சு வெள்ளம்மனோ. சித்ரா6:45
2அத்தெரி பாச்சாமனோ. சித்ரா6:23
3என்னுயிரேசித்ரா5:57
4என்னுயிரேசித்ரா, சதீஷ்6:51
5காதல் என் பாவம்மனோ, ஷோபா6:38
6காலங்களால் அழியாததுமனோ, விஜய்ரமணி, சதீஷ், பிரபாகர்5:53
7வெள்ளை ரோஜாவேசித்ரா, சதீஷ்6:25

வரவேற்பு

படத்தின் வேகம், சில கதாபாத்திரங்கள் நல்ல விமர்சனத்தை பெற்றாலும், அறிமுக இசை அமைப்பாளரின் இசை எதிர்மறையான விமர்சனத்தை பெற்றது.[சான்று தேவை]

மேற்கோள்கள்

🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்