நசீம் மிர்சா சங்கேதி

நசீம் மிர்சா சேஞ்ச்சி (1910 - 2018 ஏப்ரல் 12) [1] ஓர் இந்திய சுதந்திர போராட்ட வீரர். இவர் இறக்கும் போது இந்தியாவில் வாழ்ந்த மிகப் பழமையான நபர்களில் ஒருவர் என்றும் நம்பப்படுகிறார்.[2][3]

நசீம் மிர்சா சேஞ்ச்சி
பிறப்பு1910
இறப்பு2018 ஆம் ஆண்டு ஏப்ரல் 12 (108 வயது)
பழைய டில்லி, புது டில்லி, இந்தியா
படித்த கல்வி நிறுவனங்கள்சாகிர் உசேன் டில்லி கல்லூரி
பணிசுதந்திர போராட்ட வீரர்

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி

முகலாய பேரரசர் ஷாஜகானின் காலத்திலிருந்து பழைய தில்லியில் நசீம் மிர்சா சேஞ்ச்சி தனது குடும்பத்தின் வேர்களைக் கண்டுபிடித்துள்ளார். இப்போது சாகிர் உசேன் டெல்லி கல்லூரி என்று அழைக்கப்படும் ஆங்கிலோ அரபு கல்லூரியில் கல்வி பயின்றார். பல ஆண்டுகளாக, உருது மற்றும் பாரசீக மொழிகளில் ஏராளமான புத்தகங்களை சேகரித்துள்ளார்.[4]

இவர் புரட்சிகர சுதந்திர போராட்ட வீரர் பகத்சிங்கை 1929 ஆம் ஆண்டில் சந்தித்தார். பகத்சிங் பிரித்தானிய இந்தியாவின் மத்தியச் சட்டமன்றத்தில் குண்டு வீசுவதற்கான தனது நோக்கங்களைப் பற்றி இவரிடம் சொன்னார். மேலும் இதில் தான் மறைவாக இருப்பதற்கு ஒரு பாதுகாப்பான வீட்டைக் கண்டுபிடிப்பதில் நசீம் உதவியை பகத்சிங் விரும்பினார். பகத் தனது பணியை மேற்கொண்ட பின்னர் நசீம் குவாலியரில் தலைமறைவாகிவிட்டார். [4]

தனிப்பட்ட வாழ்க்கை

2016 ஆம் ஆண்டில், இவர் தனது 90 வயதான மனைவி அம்னா கன்னம் மற்றும் 60 வயது மகன் மிர்சா சிக்கந்தர் பேக் சேஞ்ச்சி ஆகியோருடன் பழைய டெல்லி பகுதியில் வசித்து வந்தார். இவரது இளைய மகன் மிர்சா தாரிக் பேக் பாகிஸ்தானின் கராச்சியில் வசித்து வருகிறார்.சேஞ்ச்சிக்கு ஏழு மகள்கள் மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர். இவர்களில் பலர் இன்னும் பழைய டெல்லி பகுதியில் வசிக்கின்றனர். இவருக்கு 20 பேரக்குழந்தைகள் உள்ளனர்.[5]

2016 ஆம் ஆண்டில், நசீம் மிர்சா சேஞ்ச்சி தனக்கு 106 வயது என்று கூறினார்.[2][4][6]

சிறப்பு

நசீம் தனது வாழ்நாளில், இந்திய மற்றும் உலக வரலாற்றில், முதலாம் உலகப் போர், ஜலியன்வாலா பாக் படுகொலை, சத்தியாகிரகம் (வன்முறையற்ற எதிர்ப்பு போராட்டம்), கிலாபத் இயக்கம், புதுதில்லி உருவாக்கம், இரண்டாம் உலகப் போர், வெள்ளையனே வெளியேறு இயக்கம் மற்றும் இறுதியாக இந்தியாவின் சுதந்திரம் பார்த்ததாகக் கூறினார்.[2] இவரது வாழ்க்கை கதையை பல செய்தித்தாள்கள் மற்றும் தொலைக்காட்சி ஆவணப்படங்கள் உள்ளடக்கியுள்ளன.[4]

2016 ஆம் ஆண்டின் மார்ச் மாதம் தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், தில்லி சட்டப்பேரவையில் இந்திய சுதந்திர இயக்கத்தின் காரணத்திற்காக உயிர் கொடுத்த புகழ்பெற்ற மூன்று தியாகிகள் பகத் சிங், சிவரம் ஹரி ராஜ்குரு மற்றும் சுக்தேவ் தாபர் ஆகியோரை வெளியிட்டார் . உத்தியோகபூர்வ விழாவில் கூட்டத்தில் உரையாற்ற நசீம் மிர்சா சேஞ்ச்சி தேர்ந்தெடுக்கப்பட்டார். "இந்தியாவில் உள்ள அனைத்து மதங்களும் பிரிவுகளும் ஒற்றுமையாக வாழ வேண்டும் " என்று தியாகி பகத்சிங் கூறியதாக விழாவில் நசீம் குறிப்பிட்டார் .[6]

குறிப்புகள்

🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்