தோலுறைவு

தோலுறைவு (Frostbite) மிகவும் குறைவான (குளிர்ந்த) வெப்பநிலையில் தோல் மற்றும் இழையங்கள் சேதப்படும் ஓர் ஓரிடத்து நோய் ஆகும். இது இதயத்திலிருந்து மிகவும் தள்ளி உள்ள உடலுறுப்புகளிலும் மிகுந்த தோல்பரப்பினை வெளிப்படுத்தும் உடலுறுப்புகளிலும் பெரும்பாலும் நேர்கிறது. மிகக் கூடுதலாக கால் விரல்களில் நேர்கிறது.[1]

தோலுறைவு
தோலுறைந்த கைகள்
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள்
சிறப்புஅவசர மருத்துவம்
ஐ.சி.டி.-10T33.-T35.
ஐ.சி.டி.-9991.0-991.3
நோய்களின் தரவுத்தளம்31167
மெரிசின்பிளசு000057
ஈமெடிசின்emerg/209 med/2815 derm/833 ped/803
பேசியண்ட் ஐ.இதோலுறைவு
ம.பா.தD00562

வகைப்பாடு

மிகுந்த குளிர்மையினால் ஏற்படும் இழையச் சேதம் பலவாறாக வகைப்படுத்தப்படுகின்றது.

  • கலங்களுக்கு சேதமில்லாது மேலோட்டமாக இழையங்கள் மட்டுமே குளிர்வது தோலுறை கிள்ளல் (Frostnip) எனப்படுகிறது.[2]
  • சில்பிளைன்சு அல்லது குளிர்ப்புண்கள் (Chilblains) எனப்படுவது இவ்வாறு நேரக்கூடியவருக்கு அடிக்கடி குளிர்ந்த வெப்பநிலைக்கு வெளிபடுத்தப்பட்டு தோலில் ஏற்படும் மேலோட்டமான புண்கள் ஆகும்.
  • தோலுறைவில் இழையங்கள் அழிக்கப்படுகின்றன.

நோய்குறிகளும் உணர்குறிகளும்

மலையேற்றத்திற்கு இரண்டு மூன்று நாட்கள் கழித்து தோலுறைந்த கால் விரல்களின் படிமம்

0 °C (32 °F) வெப்பநிலை அல்லது அதற்கு கீழே தோல்களுக்கு அண்மையில் உள்ள குருதிக்குழல்கள் சுருங்கத் தொடங்குகின்றன. உடல் வெப்பநிலையை சீராக வைத்திருக்க உதவும் குளோமசு தோற்பாகத்தின் செயலால் உடலின் மிக முனைப்பகுதிகளுக்கு குருதி செல்லாமல் தடுக்கப்படுகிறது. மிகுந்த வேகத்தில் வீசும் காற்றினாலும் இதே செயற்பாடு நிகழும். இது உடலின் உட்பாகங்களின் வெப்பநிலையை சீராக வைத்திருக்க உதவுகிறது. மிகுந்த குளிர்மையாலோ, மிக நீண்ட நேரத்திற்கு குளிரில் இருந்தாலோ இத்தகைய செயற்பாட்டால் உடலின் சில பகுதிகளுக்கு குருதி மிகக் குறைவாகவே எட்டும் வாய்ப்பு ஏற்படுகிறது. போதிய குருதியோட்டம் இல்லாமையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தோல் இழையங்கள் உறைந்து இறக்கின்றன. தோலுறைவில் நான்கு நிலைகள் இருக்கின்றன. ஒவ்வொரு நிலையிலும் உணரப்படும் வலியின் அளவு வெவ்வேறானது. .[3]

முதல் நிலை

இது தோலுறைக் கிள்ளல் (frostnip) எனப்படுகிறது. இந்த நிலையில் தோலின் மேற்புறம் மட்டுமே பாதிக்கப்படுகிறது. இது தோன்றும்போது அரிப்பும் வலியும் ஏற்படுகிறது. தோல் உணர்வின்றிப் போவதுடன் தோலில் வெள்ளை, சிவப்பு, மஞ்சள் திட்டுகள் காணப்படுகின்றன. தோலின் மேற்புறம் மட்டுமே பாதிக்கப்படுவதால் தோலுறைக் கிள்ளலால் பாதிக்கப்பட்ட பகுதி நிரந்தரமாக சேதமடைவதில்லை. வெப்பத்திற்கும் குளிருக்கும் நீண்ட காலத்திற்கு உணர்ச்சி குன்றி இருக்கலாம்.

இரண்டாம் நிலை

குளிர்ந்த நிலை நீடிக்குமேயானால் தோல் உறைபட்டு கடினமடையத் தொடங்குகிறது. ஆனால் இன்னமும் ஆழத்திலுள்ள இழையங்கள் பாதிக்கப்படாது மிருதுவாகவும் வழமையாகவும் உள்ளன.இரண்டாம் நிலைக் காயங்களில் ஓரிரண்டு நாட்களில் தோலுறைந்து கொப்புளங்கள் ஏற்டுகின்றன.இந்தக் கொப்புளங்கள் கடினமாகவும் கறுத்தும் காணப்படலாம். அவற்றின் தன்மையைவிட மோசமானவையாகத் தென்படும். பெரும்பாலான காயங்கள் ஒரு மாதகால அளவில் ஆறி விடும்; ஆனால் பாதிக்கப்பட்ட பகுதி குளிர்/வெப்பத்திற்கு நிரந்தரமாக உணர்விழக்கும்.

மூன்றாம் நான்காம் நிலைகள்

12 நாட்கள் கழித்த தோலுறைவு

பாதிக்கப்பட்ட தோற்பகுதி மேலும் உறையுமானால் ஆழ்ந்த தோலுறைவு ஏற்படுகிறது. தசைகள், தசைநாண்கள், குருதிக்குழல்கள், மற்றும் நரம்புகள் அனைத்தும் உறையத் தொடங்குகின்றன. தோல் கடினமாவதுடன் மெழுகு போல உணரப்படுகிறது; அப்பகுதி தற்காலிகமாக பயனற்றுப் போகின்றது. நோய் மிகவும் முற்றிய நிலையில் நிரந்தரமாகவும் பயனிழக்கிறது. இறுதியில் கறுக்கும் செவ்வூதா வண்ணக் கொப்புளங்கள் உருவெடுக்கின்றன. இந்தக் கொப்புளங்களில் குருதி நிறைந்திருக்கும். நரம்புச் சேதமேற்பட்டால் உணர்ச்சி இழக்க நேரிடும். மிகவும் மோசமான தோலுறைவினால் இழைய அழுகல் ஏற்பட்ட கை, கால் விரல்கள் நீக்கப்பட வேண்டியிருக்கும். மருத்துவ சிகிச்சை மேற்கொள்ளப்படா விட்டால் இந்த உறுப்புகள் தாமாகவே விழுந்து விடும். இத்தகைய தோலுறைவில் குளிர்மையால் ஏற்பட்ட பாதிப்புகளை கண்டறிய பல மாதங்கள் ஆகலாம். இதனால் இறந்த இழையங்களை நீக்க மேற்கொள்ளப்படும் அறுவை சிகிச்சை பெரும்பாலும் தாமதமடைகிறது.[4]

காரணங்கள்

சுற்றுச்சூழல் வெப்பநிலை உறைநிலைக்கு கீழே இருக்கும்போது குருதி சுற்றோட்டம் போதுமானதாக இல்லாமையினால் தோலுறைவு ஏற்படுகின்றது. இது உடல் தனது உட்பகுதி வெப்பநிலையை சீராக வைத்திருக்கவும் முரண்பாடான உடையவிழ்ப்பு தவிர்க்கவும் தனது முனைப்பகுதிகளுக்கு குருதியோட்டத்தை குறைப்பதால் ஏற்படலாம். இந்த நிலையில் முரண்பாடான உடையவிழ்ப்பிற்கான அதே காரணங்கள் (மிகுந்த குளிர், குறைந்த ஆடை, நனைந்த ஆடைகள், காற்றுக் குளிர்மை) தோலுறைவிற்கும் காரணமாகலாம். இறுக்கமான உடைகள், இறுக்கமான காலணிகள், நெருக்கமான உடல் இருப்பு, சோர்வு, சில மருந்துகள், புகை பிடித்தல், மதுப் பயன்பாடு, நீரிழிவு நோய் போன்ற குருதிக் குழல்களை பாதிக்கும் நோய்கள் போன்றவற்றாலும் குருதிச் சுற்றோட்டம் தடைபடலாம்.[5]

நீர்மநிலை நைட்ரசன் போன்ற கடுங்குளிர்நிலை நீர்மங்களும் தோலுறைவிற்கு காரணமாகலாம். காற்றுக்கூழ்தொங்கல் தெளிப்புகளும் நீண்டநாட்களுக்கு தோலில் பட்டால் தோலுறைவு ஏற்படலாம். இது நாற்றங்கொல்லி தீப்புண் எனப்படுகிறது.

சூழிடர் காரணங்கள்

தோலுறைவிற்கான சூழிடர் காரணங்களாக இரத்த அழுத்தத்திற்கு எடுத்துக் கொள்ளும் பீட்டா பிளாக்கர் மருந்துகளும் நீரிழிவு நோய் மற்றும் சுற்றயல் நரம்புப் பீடை போன்ற நோய்களும் குறிப்பிடப்படுகின்றன.

சிகிச்சை

தோலுறைவுற்ற பகுதியை உறைவு நீக்கும் முடிவு நிலையான, இளஞ்சூடான சூழலுக்கு எவ்வளவு அருகில் நோயாளி உள்ளார் என்பதைப் பொறுத்தது. மீள்சூடாக்கப்பட்டால் உறைதல் மீண்டு மேலும் இழையத்திற்கு பாதிப்பு ஏற்படும் நிலை உருவாகலாம். தோலுறைந்த இழையம் வெகுவாக நகரக்கூடாது; இழையங்கள் நகர்ந்தால் இழையத்தில் ஏற்பட்டுள்ள பனிக்கட்டிகள் மேலும் பாதிப்பை உண்டாக்கும். முனைப் பகுதிகளை எலும்புக்கட்டு அல்லது துணி சுற்றிக் கட்டுப் போட்டு இத்தகைய இழைய நகர்தலை தடுக்கப் பரிந்துரைக்கப்படுகிறது. இதே காரணத்திற்காக, தேய்ப்பது, பிசைந்து விடுதல், ஆட்டுதல், அல்லது வெளி இயக்க விசை கொண்டு பாதிப்படைந்த இழையங்களை சூடாக்குவது மிகவும் ஆபத்தாக முடியும்.[6]

கீழ்வரும் இரண்டு முறைகளில் ஒன்றினால் சூடாக்கலாம்:

முனைப்பற்ற மீள்சூடாக்கல்[7] முறை என்பது உடலின் வெப்பம் அல்லது சூழலின் வெப்பத்தை நோயாளியின் உடற்பகுதியை சூடாக்கப் பயன்படுத்துவதாகும். போர்வைகள் கொண்டு போர்த்துவது அல்லது சூடான சூழலுக்குக் கொண்டு செல்வது போன்றவையாகும்.[8]

முனைப்புள்ள மீள்சூடாக்கல் முறை என்பது நோயாளிக்கு நேரடியாக வெப்பம் அளிப்பதாகும். இது முனைப்பற்ற மீள்சூடாக்கல் முறையுடன் கூடுதலாக மேற்கொள்ளப்படும்.[7] இதற்கு கூடுதல் கருவிகள் தேவையாதலால் மருத்துவமனைக்கு முந்தைய சிகிச்சைக்கு இந்த முறை ஒவ்வாததாகும். [6] முனைப்பான மீள்சூடாக்கலில் பாதிக்கப்பட்ட இழையங்களுக்கு விரைவாக, அதே நேரம் தீப்புண் உண்டாக்காது, சூடு கொடுக்கப்படுகின்றது. மிக விரைவாக இழையங்கள் மென்மையுற அந்தளவில் இழையத்திற்கான பாதிப்பும் குறையும் என்பதால் இந்த சிகிச்சை முறை விரும்பத் தக்கது.[6] பெரும்பாலும் இந்த சிகிச்சை முறையில் பாதிப்படைந்த இழையத்தை 40-42°C (104-108F) வெப்பநிலையில் உள்ள நீர்த்தொட்டியில் மூழ்கி வைத்திருப்பதாகும். முனைப்பகுதியிலுள்ள இழையங்களை சூடாக்குவதால் இப்பகுதியிலிருந்து கூடிய குருதியோட்டம் உடலின் மையப்பகுதிக்குச் செல்லும். இது உடலின் மையப்பகுதியின் வெப்பநிலையைக் குறைப்பதால் இதயத்துடிப்பு ஒழங்கிசைவு வேறுபாடுகளுக்கான சூழிடர் காரணியாகலாம்.[9]

அறுவை சிகிச்சை

திசு நீக்கம் அல்லது உறுப்பு நீக்கம் பொதுவாக இறுதி சிகிச்சையாக எடுத்துக்கொள்ளப்படுகிறது. இதனால் "சனவரியில் உறைவு, சூலையில் நீக்குஅறுவை" என்ற சொலவடை எழுந்துள்ளது.[10] ஏதேனும் தொற்று ஏற்பட்டாலோ காற்றடைத்த திசு அழுகல் ஏற்பட்டாலன்றி உறுப்பு நீக்கம் உடனடியாகச் செய்யப்படுவதில்லை.[11]

மேற்சான்றுகள்

வெளி இணைப்புகள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
தோலுறைவு
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=தோலுறைவு&oldid=3894085" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்