தொன் ஆறு

உருசிய ஆறு

தொன் (Don, உருசியம்: Дон) என்பது உருசியாவின் முக்கியமான யூரேசிய ஆறுகளில் ஒன்றும், ஐரோப்பாவின் ஐந்தாவது நீளாமான ஆறும் ஆகும். இது பைசாந்திய வணிகர்களுக்கு மிகப்பெரும் பங்காற்றியது. தொன் வடிநிலமானது தினேப்பர் ஆற்று வடிநிலத்திற்கு மேற்கேயும், வோல்கா ஆற்று வடிநிலத்திற்கு கிழக்கேயும், ஓக்கா ஆற்று வடிநிலத்திற்கு வடக்கேயும் அமைந்துள்ளது.

தொன் ஆறு
தொன்னின் நீரேந்துப் பகுதி
பெயர்Error {{native name}}: an IETF language tag as parameter {{{1}}} is required (help)
அமைவு
நாடுஉருசியா
பிராந்தியம்தூலா, லீபெத்சுக், வரனியோசு, வோல்கோகிராது, ரசுத்தோவ்
நகரங்கள்வரனியோசு, தொன்-மீது-ரசுத்தோவ்
சிறப்புக்கூறுகள்
மூலம் 
 ⁃ அமைவுநவமொசுக்கோவ்சுக், தூலா மாகாணம்
 ⁃ ஆள்கூறுகள்54°00′43″N 38°16′41″E / 54.01194°N 38.27806°E / 54.01194; 38.27806
 ⁃ ஏற்றம்238 m (781 அடி)
முகத்துவாரம்அசோவ் கடல்
 ⁃ அமைவு
ககால்னிக், ரசுத்தோவ் மாகாணம்
 ⁃ ஆள்கூறுகள்
47°05′11″N 39°14′19″E / 47.08639°N 39.23861°E / 47.08639; 39.23861
 ⁃ உயர ஏற்றம்
0 மீ (0 அடி)
நீளம்1,870 கிமீ (1,160 மைல்)
வடிநில அளவு425,600 சதுரகிமீ
வெளியேற்றம் 
 ⁃ சராசரி935 m3/s (33,000 cu ft/s)
வடிநில சிறப்புக்கூறுகள்
துணை ஆறுகள் 
 ⁃ இடதுகோப்பியோர் ஆறு
 ⁃ வலதுசேவெர்சுக்கி தனியெத்சு ஆறு

மாஸ்கோவில் இருந்து 120 கிமீ தெற்கே அமைந்துள்ள துலாவுக்கு தென்கிழக்கே 60 கிலோமீட்டர் (37 மைல்) தூரத்தில் நவமாசுக்கோவ்சுக் நகரில் தொன் ஆறு ஆரம்பித்து, அசோவ் கடலுக்கு கிட்டத்தட்ட 1,870 கிலோமீட்டர் தூரத்திற்கு பாய்கிறது. அதன் மூலத்திலிருந்து, இவ்வாறு முதலில் தென்கிழக்கு வோரோனெசு வரை, பின்னர் தென்மேற்கில் அதன் வாயிலுக்குப் பாய்கிறது. இவ்வாற்றின் முக்கிய நகரம் தொன்-மீது-ரசுத்தோவ் ஆகும். இதன் முக்கிய துணை நதி சேவிர்சுக்கி தனியெத்சு ஆகும்.

வரலாறு

கூர்கன் கருதுகோளின் படி, வோல்கா-தொன் ஆற்றுப் பகுதி ஆதி இந்தோ-ஐரோப்பிய மக்களின் குடியேற்றப்பகுதியாக கிமு 4000 ஆம் ஆண்டுகளில் இருந்து வந்துள்ளது. தொன் நதி நாகரிகத்தின் வளமான தொட்டிலாக செயல்பட்டது, அங்கு அண்மைக் கிழக்கின் கற்கால உழவர் கலாச்சாரம் சைபீரிய குழுக்களின் வேட்டைக்காரக் கலாச்சாரத்துடன் இணைந்து செயல்பட்டது. இதன் விளைவாக புரோட்டோ-இந்தோ-ஐரோப்பியர்களின் நாடோடிக் கலாசாரம் உருவானது.[1] அந்தீசு மக்களின் கிழக்கு சிலாவிக் பழங்குடியினர் தொன் மற்றும் தெற்கு, மற்றும் மத்திய உருசியாவிலும் வாழ்ந்து வந்தனர்.[2][3] தொன் ஆற்றைச் சுற்றியுள்ள பகுதியில் பைசாந்தியரின் செல்வாக்கு அதிகமாக இருந்தது. தொன் ஆறு பைசாந்திய வணிகர்களுக்கு முக்கிய மையமாகத் திகழ்ந்தது.[4] பழங்காலத்தில், இந்த நதி ஐரோப்பாவிற்கும் ஆசியாவிற்கும் இடையிலான எல்லையாக சில பண்டைய கிரேக்க புவியியலாளர்களால் பார்க்கப்பட்டது.[5][6]

புளூட்டாக்கின் படி, தொன் ஆறு கிரேக்கத் தொன்மவியலின் அமெசான் பெண் போராளிகளின் இருப்பிடமாகவும் இருந்துள்ளது. ஆற்றின் கயவாயைச் சுற்றியுள்ள பகுதி கறுப்புச் சாவின் மூலமாக விளங்கியதாகவும் கருதப்படுகிறது.[7]

தொன்னின் கீழ்ப்பகுதிகள் பற்றி பண்டைய புவியியலாளர்களுக்கு நன்கு தெரிந்திருந்தாலும், அதன் நடுத்தர மற்றும் மேல் பகுதிகள் 16 ஆம் நூற்றாண்டில் மஸ்கோவிகளினால் படிப்படியாக கைப்பற்றப்படுவதற்கு முன்னர் எந்த துல்லியத்தன்மையுடனும் வரைபடப்படுத்தப்படவில்லை.

16 மற்றும் 17 ஆம் நூற்றாண்டுகளில் ஆற்றின் வளமான பள்ளத்தாக்கில் குடியேறிய தொன் கோசாக்குகளின் பெயரினால் இந்த நதிக்கு தொன் ஆறு எனப் பெயரிடப்பட்டது.

வரனியோசு மாகாணத்தில் தொன் ஆறு

"தொன்கோவ்" கோட்டை 14 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ரியாசான் இளவரசர்களால் கட்டப்பட்டது. இன்றைய நகரமான தான்கோவிலிருந்து சுமார் 34 கிலோமீட்டர் (21 மைல்) தொலைவில் உள்ள தொன் ஆற்றின் இடது கரையில் அமைந்திருந்த இக்கோட்டை 1568 வரை கிரிமியத் தத்தார்களினால் 1568 இல் அழிக்கப்பட்டது. ஆனால் விரைவில் ஒரு சிறந்த வலுவூட்டப்பட்ட இடத்தில் மீளவும் கட்டப்பட்டது. இது மெர்காதோரின் உலக நிலவரைபடத்தில் (1596) "தொன்கோ" எனக் காட்டப்பட்டுள்ளது,[8] 1618 ஆம் ஆண்டில் தொன்கோவ் கோட்டை மீண்டும் இடமாற்றம் செய்யப்பட்டது. இது 1645 ஆம் ஆண்டு ஜோன் பிளேயுவின் 1645 ஆம் ஆண்டு வரைபடத்தில் "தொககோரத்" எனக் காட்டப்பட்டுள்ளது.[9]

பிளேயு, மெர்காத்தோர் இருவரும் தொன் நதி "ரிசான்சுக்கோய் ஓசிரா" என்ற ஒரு பெரிய ஏரியில் இருந்து தோன்றியது என்ற 16 ஆம் நூற்றாண்டின் வரைபட மரபைப் பின்பற்றியவர்கள்.

இன்றைய நவீன இலக்கியத்தில், தொன் பகுதி நோபல் பரிசு பெற்ற மிகைல் சோலகவின் மற்றும் அமைதியான தொன் பாய்கிறது என்ற ஆக்கத்தில் இடம்பெற்றுள்ளது.[10]

அணைகளும் கால்வாய்களும்

கிழக்கு முனையில், தொன் நதி வோல்கா ஆறு அருகே பாய்கிறது. இரண்டு ஆறுகளையும் இணைக்கும் வோல்கா-தொன் கால்வாய் (நீளம் 105 கிலோமீட்டர் (65 மைல்)) ஒரு பெரிய நீர்வழிப்பாதையாகும். இப்பகுதியில் தொன்னின் நீர் மட்டம் சிம்லியான்ஸ்க் அணையால் உயர்த்தப்பட்டு, சிம்லியான்ஸ்க் நீர்த்தேக்கத்தை உருவாக்குகிறது.

அடுத்த 130 கிமீ (81 மைல்) தொலைவில், சிம்லியான்சுக்கு அணைக்குக் கீழே, தொன் ஆற்றில் போதுமான நீர் ஆழம் மூன்று அணை-கப்பல்-பூட்டு வளாகங்களினால் பராமரிக்கப்படுகிறது. இவை நிக்கோலாயெவ்சுக்கி கப்பல்பூட்டு, கான்ஸ்டான்டினோவ்சுக் கப்பல்பூட்டு, கோச்செடோவ்சுக்கி கப்பல்பூட்டு ஆகியனவாகும்.[11]

மேற்கோள்கள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
தொன் ஆறு
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=தொன்_ஆறு&oldid=3792376" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்