தென்மேற்கு பினாங்கு தீவு மாவட்டம்

மலேசியாவின் பினாங்கு மாநிலத்தில் உள்ள மாவட்டம்

தென்மேற்கு பினாங்கு தீவு மாவட்டம் (ஆங்கிலம்: Southwest Penang Island District; மலாய்: Daerah Barat Daya Pulau Pinang; சீனம்: 西南县); ஜாவி: دايره بارت داي ڤولاو) என்பது மலேசியாவின் பினாங்கு மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டம். இந்த மாவட்டத்தின் பெரும் நகரமாக பாயான் லெப்பாஸ் நகரம் உள்ளது.

தென்மேற்கு
பினாங்கு தீவு மாவட்டம்
Southwest Penang Island District
பினாங்கு
தென்மேற்கு பினாங்கு தீவு மாவட்டம்
தென்மேற்கு பினாங்கு தீவு மாவட்டம்
Map
தென்மேற்கு பினாங்கு தீவு மாவட்டம் is located in மலேசியா
தென்மேற்கு பினாங்கு தீவு மாவட்டம்
      தென்மேற்கு பினாங்கு தீவு மாவட்டம்
ஆள்கூறுகள்: 5°18′N 100°10′E / 5.300°N 100.167°E / 5.300; 100.167
நாடு மலேசியா
மாநிலம் பினாங்கு
மாவட்டம்தென்மேற்கு பினாங்கு தீவு
தொகுதிபாயான் பாரு
அரசு
 • உள்ளூராட்சிபினாங்கு தீவு மாநகராட்சி
பரப்பளவு
 • மொத்தம்175 km2 (68 sq mi)
மக்கள்தொகை
 (2020)
 • மொத்தம்1,88,603
நேர வலயம்மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00
அஞ்சல் குறியீடு
110xx, 119xx
தொலைபேசி எண்கள்+604
வாகனப் பதிவெண்கள்P

இந்த மாவட்டம் பினாங்குத் தீவின் தென்மேற்குப் பகுதியில் பாதியை உள்ளடக்கியது; மற்றும் கிழக்குப் பகுதியில் வடகிழக்கு பினாங்கு தீவு மாவட்டத்தின் எல்லையாக உள்ளது.

இது 175 km2 (68 sq mi) பரப்பளவைக் கொண்ட மாநிலம். மற்றும் 2020-ஆம் ஆண்டு நிலவரப்படி இதன் மக்கள்தொகை 197,131. இந்த மாவட்டத்தின் நிர்வாக மையமாக பாலிக் புலாவ் நகரம் உள்ளது. பாயான் லெப்பாஸ் நகரம் இந்த மாவட்டத்தின் மிகப்பெரிய நகரமாகும்.[2]

வரலாறு

1786-ஆம் ஆண்டில், பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம் (British East India Company), பினாங்குத் தீவின் கட்டுப்பாட்டைத் தன்னகப் படுத்தியது. பினாங்குத் தீவின் வடகிழக்கு முனையில் ஜார்ஜ் டவுன் நகரத்தை நிறுவியது.[3][4]

அதன் பின்னர் பல பத்தாண்டுகளாக, ஜார்ஜ் டவுன் நகரில் இருந்து பினாங்குத் தீவு நேரடியாக நிர்வாகம் செய்யப்பட்டு வந்தது. அந்தக் கட்டத்தில், பினாங்கில் எந்த ஒரு நிர்வாகப் பிரிவும் அமைக்கப்படவில்லை.

பாலிக் பூலாவ்

1888-ஆம் ஆண்டில், பினாங்குத் தீவின் தென்மேற்கில் உள்ள பாலிக் புலாவ் பகுதியில் ஒரு மாவட்டமும்; ஒரு நில அலுவலகமும் நிறுவப்பட்டது. இவ்வாறு தான், தென்மேற்கு பினாங்கு தீவு மாவட்டம் உருவாக்கப்பட்டது.

அந்த வகையில், அப்போதையக் காலக்கட்டத்தில், பினாங்கு தீவு இரண்டு பெரும் மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டு இருந்தது. இரண்டு மாவட்டங்களும் 1890-ஆம் ஆண்டுகளில் பினாங்கின் அதிகாரப்பூர்வ வரைபடங்களில் காட்சிப்படுத்தபட்டு இருந்தன.[5]

புவியியல்

இந்தத் தென்மேற்கு பினாங்கு தீவு மாவட்டம்; பினாங்குத் தீவின் தெற்குப் பகுதியையும் மற்றும் பினாங்குத் தீவின் மேற்குப் பகுதியில் உள்ள மத்திய மலைத் தொடர்களின் சில பகுதிகளையும் உள்ளடக்கியது. மாவட்டத்தின் கீழ் பின்வரும் நகரங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகள் உள்ளன.

நகரங்கள்

  • தெலுக் பகாங் (Teluk Bahang)

குடியிருப்பு பகுதிகள் மற்றும் கிராமங்கள்

  • பத்து மாவுங் (Batu Maung)
  • பாயான் பாரு (Bayan Baru)
  • கெர்தாக் சங்குல் (Gertak Sanggul)
  • பந்தாய் அச்சே (Pantai Acheh)
  • பெர்மாத்தாங் டாமார் லாவுட் (Permatang Damar Laut)
  • சுங்கை ஆரா (Sungai Ara)
  • தெலுக் கும்பார் (Teluk Kumbar)
  • தெலுக் தெம்போயாக் (Teluk Tempoyak)


தென்மேற்கு பினாங்குத் தீவு மாவட்டத்தின் தமிழ்ப்பள்ளிகள்

மலேசியா; பினாங்கு; தென்மேற்கு பினாங்கு தீவு மாவட்டத்தில் (North Seberang Perai District); 2 தமிழ்ப்பள்ளிகள் உள்ளன. அவற்றில் 201 மாணவர்கள் பயில்கிறார்கள். 28 ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள். மலேசியக் கல்வியமைச்சு 2020 ஜனவரி மாதம் வெளியிட்ட புள்ளிவிவரங்கள்.[6]

பள்ளி
எண்
இடம்பள்ளியின்
பெயர்
மலாய்
பள்ளியின்
பெயர்
தமிழ்
அஞ்சல் குறியீடுவட்டாரம்மாணவர்கள்ஆசிரியர்கள்
PBD3031பாயான் லெப்பாஸ்SJK(T) Bayan Lepas[7][8]பாயான் லெப்பாஸ் தமிழ்ப்பள்ளி11900பாயான் லெப்பாஸ்8914
PBD3032சுங்கை ஆராSJK(T) Sungai Ara[9]சுங்கை ஆரா தமிழ்ப்பள்ளி11900பாயான் லெப்பாஸ்11114

பினாங்கு மாநிலத்தில் உள்ள மாவட்டங்கள்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்