தென்னிந்திய சர்வதேசத் திரைப்பட விருதுகள்

திரைப்பட விருது வழங்கும் விழா

தென்னிந்திய சர்வதேசத் திரைப்பட விருதுகள் (SIIMA விருதுகள்) தென்னிந்திய திரையுலக கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்ப சாதனைகளை கௌரவப்படுதும் விழாவாகும். இவ்விழாவில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் திரைப்பட உலகினர்கள் கலந்துகொள்கின்றனர்.

தென்னிந்திய சர்வதேசத் திரைப்பட விருதுகள்
தற்போதைய: 2வது சீமா விருதுகள்
விளக்கம்தென் இந்திய சினிமா
நாடுஇந்தியா
வழங்குபவர்விஷ்ணுவர்தன் இந்துரி
முதலில் வழங்கப்பட்டது2012
இணையதளம்siima.in

இதில் நான்கு மொழிகளிலும் சிறந்த படம், சிறந்த நடிகர், நடிகைகள், இயக்குனர்கள், இசை அமைப்பாளர்கள், ஒளிப்பதிவாளர்கள் உள்பட 19 பிரிவுகளில் விருது வழங்கப்படும். இவ்விழா இரண்டு நாட்கள் நடைபெறும். முதல் SIIMA விழா (துபாய் உலக வர்த்தக மையத்தில்)[1] ஜூன் ஜூன் 21 மற்றும் 22 ஆம் தேதி 2012 ஆம் ஆண்டு அன்று நடைபெற்றது.

சீமா விருதுகள் 2012

தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருது விழா, முதல்முறையாக 2012ம் ஆண்டு தொடங்கியது. இந்த விழா துபாயில் ஜூன் 21–22, 2012ம் ஆண்டு ஆரம்பித்தது. இவ்விழாவுக்கு தினகரன் நாளிதழ் அச்சு ஊடக உதவிகளை வழங்கியது. இவ்விழாவில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் திரைப்பட உலகினர் கலந்துகொள்கின்றனர்.

இதில் நான்கு மொழிகளிலும் சிறந்த படம், சிறந்த நடிகர், நடிகைகள், இயக்குனர்கள், இசை அமைப்பாளர்கள், ஒளிப்பதிவாளர்கள் உள்பட 19 பிரிவுகளில் விருது வழங்கப்பட்டது.

விருது நிகழ்ச்சிக்கிடையே பிரமாண்டமான கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகின்றது. இக்கலை நிகழ்ச்சியில் சமீரா ரெட்டி, சுருதி ஹாசன், ஹன்சிகா மோத்வானி, சார்மி, அமலா பால், தீட்சா சேத், பிரியாமணி, நிதி சுப்பையா, ஐன்ட்ரிதா ராய், பாரூல் யாதவ், கேத்ரின், பூர்ணா, ஹரிப்ரியா மற்றும் இசை அமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத் உள்பட பலர் பங்கேற்கின்றனர். மற்றும் நான்கு மொழிகளிலும் இருந்து ஏராளமான திரையுலகத்தினர் கலந்துகொண்டனர்.[2][3][4][5]

தமிழ் திரையுலகினர் பெற்ற விருதுகள் பின்வருமாறு

  • சிறந்த நடிகர் : தனுஷ் (ஆடுகளம்)
  • சிறந்த நடிகர் சிறப்பு விருது : விக்ரம் (தெய்வத்திருமகள்)
  • சிறந்த நடிகை : அசின் (காவலன்)
  • சிறந்த நடிகை சிறப்பு விருது : ரிச்சா கங்கோபத்யாய் (மயக்கம் என்ன), (தெலுங்கு)
  • சிறந்த இயக்குனர் : வெற்றிமாறன் (ஆடுகளம்)
  • சிறந்த படம் : கோ
  • சிறந்த ஒளிப்பதிவாளர் : ஆர்.வேல்ராஜ் (ஆடுகளம்)
  • சிறந்த துணை நடிகர் : சரத்குமார் (காஞ்சனா)
  • சிறந்த நெகட்டிவ் வேடம் : அஜ்மல் (கோ)
  • சிறந்த பாடலாசிரியர் : நா.முத்துக்குமார்
  • சிறந்த இசை அமைப்பாளர் : ஜி.வி.பிரகாஷ் (ஆடுகளம்)
  • சிறந்த பாடகி : சின்மயி (சர சர சார காத்து...)
  • சிறந்த பாடகர் : தனுஷ் (ஓட ஓட... தூரம் குறையல)
  • சிறந்த நகைச்சுவை நடிகர் : சந்தானம் (வானம்)
  • சிறந்த அறிமுக நடிகை : ஹன்சிகா மோத்வானி (மாப்பிள்ளை)
  • சிறந்த அறிமுக நடிகர் : ஷர்வானந்த் (எங்கேயும் எப்போதும்)
  • சிறந்த அறிமுக இயக்குனர் : எம். சரவணன் (எங்கேயும் எப்போதும்)

சீமா விருதுகள் 2013

இது செப்டம்பர் மாதம் 12, 13ம் தேதிகளில் சார்ஜாவில் பிரமாண்டமாக நடந்தது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் திரைத்துறையினர் கலந்துகொண்டனர்.

நான்கு மொழியிலும் சிறந்த படம், சிறந்த இயக்குனர், நடிகர், நடிகைகள் உட்பட 19 பிரிவுகளில் விருது வழங்கப்பட்டது. விழாவை ஆர்யா, ஸ்ரேயா சரண், தெலுங்கு நடிகர் ராணா, இந்தி நடிகர் சோனு சூத் ஆகியோர் தொகுத்து வழங்கினார்கள்.

நடிகர்கள் மோகன் லால், பிரித்விராஜ், தனுஷ், பாலகிருஷ்ணா, அல்லு அர்ஜுன், புனித் ராஜ்குமார், உபேந்திரா, சொஹைல் கான், நடிகைகள் ஸ்ரீதேவி, அசின், காஜல் அகர்வால், பிரியாமணி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர். விருது வழங்கும் விழாவில் நடிகைகள் சுருதி ஹாசன், ஹன்சிகா, தமன்னா, ஸ்ரேயா, சார்மி, ரம்யா, ரிச்சா உள்ளிட்டோர் நடனமாடினார்கள். விழாவில் வாழ்நாள் சாதனையாளர் விருது சவுகார் ஜானகிக்கு வழங்கப்பட்டது. த்ரிஷா, காவ்யா மாதவனுக்கு சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டன.

தமிழ் திரையுலகினர் பெற்ற விருதுகள் பின்வருமாறு

விழா

விழாதிகதிதொகுப்பாளர்கள்இடம்நகரம்
1வது தென்னிந்திய சர்வதேசத் திரைப்பட விருதுகள்ஜூன் 21–22, 2012லட்சுமி மஞ்சு
மாதவன்
பார்வதி ஓமனகுட்டன்
துபாய் உலக வர்த்தக மையம் துபாய்
2வது தென்னிந்திய சர்வதேசத் திரைப்பட விருதுகள்செப்டம்பர் 12–13, 2013ஆர்யா
சிரேயா சரன்
ராணா டக்குபாதி
சோனு சூட்
பார்வதி ஓமனகுட்டன்
சாம்பல் சாண்ட்லர்
எக்ஸ்போ மையம் சார்ஜா சார்ஜா
விழாதிகதிதொகுப்பாளர்கள்இடம்நகரம்நாடுமேற்கோள்
1வது21–22 ஜூன் 2012லட்சுமி மஞ்சு, மாதவன், பார்வதி ஓமனகுட்டன்துபாய் உலக வர்த்தக மையம்துபாய்  ஐக்கிய அரபு அமீரகம்[3][4][6][7]
2வது12-13 செப்டம்பர் 2013ஆர்யா, சிரேயா சரன், ராணா டக்குபாதி, சோனு சூட், பார்வதி ஓமனகுட்டன், சாம்பல் சாண்ட்லர்எக்ஸ்போ மையம் சார்ஜாஷார்ஜா  ஐக்கிய அரபு அமீரகம்[8][9][10][11]
3வது12–13 செப்டம்பர் 2014நவ்தீப், ஷ்ரத்தா தாஸ் (தெலுங்கு)
சிவா, பூஜா ராமசந்திரன் (தமிழ்)
ஸ்டேடியம் நெகாராகோலாலம்பூர்  மலேசியா[12][13][14][15]
4வது6 - 7 ஆகஸ்ட் 2015ரானா தக்குபாடி, அலி,ஸ்ரீமுகி (தெலுங்கு)
சிவா, சுசித்ரா (தமிழ்)
துபாய் உலக வர்த்தக மையம்துபாய்  ஐக்கிய அரபு அமீரகம்[16][17][18][19]
5வது30 - 1 ஜூலை 2016அல்லு சிரீஷ், லட்சுமி மஞ்சு (தெலுங்கு)
சிவா, சதீஷ், தன்யா பாலகிருஷ்ணா (தமிழ்)
ரஞ்சினி ஹரிதாஸ் (மலையாளம்)
சுண்டெக் கன்வென்ஷன் சென்டர்சிங்கப்பூர்  சிங்கப்பூர்[20]
[21][22][23][24]
6வது30 – 1 ஜூலை 2017அல்லு சிரீஷ், லட்சுமி மஞ்சு (தெலுங்கு)
சதீஷ், தன்யா பாலகிருஷ்ணா (தமிழ்)
அபுதாபி தேசிய கண்காட்சி மையம்அபுதாபி  ஐக்கிய அரபு அமீரகம்[25][26][27]
[28][29]
7வது14–15 செப்டம்பர் 2018ராகுல் ராமகிருஷ்ணா, பிரியதர்ஷி புல்லிகொண்டா, ஸ்ரீமுகி (தெலுங்கு)
விஜய் ராகவேந்திரா, சம்யுக்தா ஹெட்ஜ் (கன்னடம்)
துபாய் பூங்காக்கள் மற்றும் ரிசார்ட்ஸ்துபாய்  ஐக்கிய அரபு அமீரகம்[30][31][32][33][34]
8வது15–16 ஆகஸ்ட் 2019ராகுல் ராமகிருஷ்ணா, பிரியதர்ஷி புல்லிகொண்டா, சுமா கனகலா (தெலுங்கு)
ஜனனி ஐயர், மிர்ச்சி சிவா (தமிழ்)
விஜய் ராகவேந்திரா, அனுபமா கவுடா (கன்னடம்)
முத்து மானி (மலையாளம்)
லுசெயில் விளையாட்டு அரங்கம்தோஹா  கத்தார்[35][36][37][38][39]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்