தூம் 2

தூம் 2 (Dhoom 2) ( English:Blast 2, D:2, D2, Dhoom 2: Back In Action) என்பது 2006 ஆம் ஆண்டில் வெளிவந்த இந்தியத் திரைப்படம் ஆகும். சஞ்சய் காத்வி என்பவர் இப்படத்தை இயக்கியுள்ளர். ஆதித்யா சோப்ரா மற்றும் யாஷ் சோப்ரா ஆகியோர் இணைந்து இப்படத்தைத் தயாரித்துள்ளனர். இந்தப்படத்தை சுமார் 350 மில்லியன் டாலர் மதிப்பில் யாஷ் ராஜ் ஃபிலிம்ஸ் தயாரித்துள்ளது.

தூம் 2
இயக்கம்சஞ்சய் காத்வி
தயாரிப்புஆதித்யா சோப்ரா
திரைக்கதைவிஜய் கிருஷ்ணா ஆச்சார்யா
ஒளிப்பதிவுநீரவ் ஷா
படத்தொகுப்புஎஸ் பகத்
விநியோகம்யாஷ் ராஜ் ஃபிலிம்ஸ்
வெளியீடு24 நவம்பர் 2006 (2006-11-24)
நாடுஇந்தியா
மொழிஇந்தி
ஆக்கச்செலவு350 மில்லியன்[1][2]

இது தூம் படத்தின் தொடர்ச்சியாகும். அபிசேக் பச்சன் மற்றும் உதய் சோப்ரா ஆகிய இருவரும் காவல்துறை உயர் அதிகாரிகளாக நடித்துள்ளனர். இவர்கள் இணைந்து திரு. எக்ஸ் ( Mr.X) எனும் ஒரு தொழில்முறை திருடனைப் பிடிப்பதற்கான பொறுப்பைப் பெறுகின்றனர். இவன் உலகில் அரியதாக, விலை மதிப்புமிக்க பொருட்களை நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தித் திருடுகிறான். இதில் பிபாசா பாசு, மற்றும் ஐஸ்வர்யா ராய் (நடிகை) ஆகியோர் முக்கிய பெண் காதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். தூம் 2 படத்தின் பெரும்பகுதி இந்தியாவில் தான் நடைபெற்றது. மேலும் சில காட்சிகள் டர்பன், இரியோ டி செனீரோ , பிரேசில் போன்ற இடங்களில் நடைபெற்றது.[3][4] பிரேசிலில் படப்பிடிப்பு நடத்திய முதல் பாலிவுட் திரைப்படம் இதுவாகும், பெப் ஜீன்ஸ் மற்றும் கொக்கக் கோலா நிறுவனங்களுடன் இணைந்து இந்தப் படத்திற்கான விளம்பரத்தை மேற்கொண்டனர். நவம்பர் 24, 2006 ஆம் ஆண்டில் இது வெளியிடப்பட்டது. இந்தியா முழுவதும் சுமார் 1800 அச்சுப்பிரதிகள் எடுக்கப்பட்டன.

இந்தத் திரைப்படம் இந்தியில் வெளியான அதே சமயத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியானது, தமிழ் மொழியில் பாடகர் விஜய் பிரகாஷ் ஏ சி பி ஜெய் தீக்சித்திற்கு பின்னணிக் குரல் கொடுத்திருந்தார்.

தூம் 2 திரைப்படம் விமர்சகர்கள் மற்றும் பார்வையாளர்கள் ஆகிய இரு தரப்பிடமும் நேர்மறையான விமர்சனங்களையே பெற்றது. மேலும் குழந்தைகள் மற்றும் இளைஞர்களிடத்திலும் நல்ல வரவேற்பைப் பெற்றது. 2006 ஆம் ஆண்டில் வெளிவந்த பாலிவுட் திரைப்படங்களிலேயே அதிக வசூலைப் பெற்றது. மேலும் அதுவரை வெளிவந்த பாலிவுட் படங்களில் அதிக வசூலைப் பெற்றது இந்தத் திரைப்படம் தான். தற்போது வரை வெளிவந்த பாலிவுட் படங்களில் அதிக வசூலைப் பெற்ற படங்களின் வரிசையில் ஏழாவது இடத்தைப் பிடித்தது.[5] மொத்தம் சுமார் .5 பில்லியன் அளவிற்கு வசூலானது.

தயாரிப்பு

தூம் திரைப்படத் தொடரின்  இரண்டாம் பாகமானது 2004 [6] ஆம் ஆண்டில் அதன் முதல் பாகத்தின் போதே முடிவு செய்யப்பட்டது. முதல் பாகத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.[7][8] ரசிகர்களிடம் கிடைத்த வரவேற்பைப் போன்று விமர்சகர்களிடம் கிடைக்கவில்லை.[9] எனவே அடுத்த பாகத்தை எடுக்க இயக்குனர் திட்டமிட்டு அதற்கு தூம் 2 மறுபடியும் அதிரடியில் எனப் பெயர் வைத்தார் (Dhoom 2: Back in Action).[10][11]  இந்த பாகத்தில் ஜான் ஆபிரகாமை மாற்றினார். முதல் பாகத்தில் இருந்து சற்று மாற்றம் வேண்டும் என நினைத்தார். மேலும் இந்த பாகத்தில் கிருத்திக் ரோஷன் மற்றும் ஐஸ்வர்யா ராய் (நடிகை) போன்றவர்களை முக்கிய எதிராளியாக நடிக்க வைத்தார் .ஐஸ்வர்யா ராயின் கதாப்பாத்திரமானது கேட்வுமன் கதாப்பாத்திரத்தைப் போன்று இயக்குனர் வடிவமைத்திருந்தார். மேலும் பிரைட் அண்டு பிரீஜுடைஸ் எனும் படத்திற்காக அதிகரித்திருந்த எடையை குறைக்க வேண்டுமென்று கேட்டுக்கொண்டதால் அவர் தன்னுடைய எடையைக் குறைத்தார். அதுபோலவே தயாரிப்பாளர் கேட்டுக் கொண்டதன்பேரில் கிருத்திக் ரோசனும் தனது எடையை 12 பவுண்டு அளவிற்குக் குறைத்தார்.[12]

விருதுகள்

பிலிம்பேர் விருதுகளில் 5 பிரிவுகளில் இந்தத் திரைப்படம் பரிந்துரைக்கப்பட்டது.[13] ஆனால் சிறந்த ஆண் நடிகர் விருது மட்டும் ஹிர்திக் ரோசனுக்கு வழங்கப்பட்டது.

2007 ஆம் ஆண்டு நடந்த எம் தொலைக்காட்சி நடத்திய சிறந்த பாங்கு (ஸ்டைலிஷ்) விருதுகளில் பெரும்பான்மையான விருதுகளை தூம் 2 திரைப்படம் பெற்றது.[14]

சிறந்த பாங்கு திரைப்படம்: தூம் 2

சிறந்த பாங்கு (நடிகர்) : கிருத்திக் ரோஷன்

சிறந்த பாங்கு (புதிய தோற்றம்) : கிருத்திக் ரோஷன்

சிறந்த பாங்கு (உடல் வாகு) : கிருத்திக் ரோஷன்

சிறந்த பாங்கு (ஜோடி) : கிருத்திக் ரோஷன், ஐஸ்வர்யா ராய் (நடிகை)

சிறந்த பாங்கு பாலிவுட் ஆடை வடிவமைப்பாளர் : அனைதா ஷ்ராஃப்

சான்றுகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=தூம்_2&oldid=3587256" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்