துட்டன்காமன் முகமூடி

துட்டன்காமன் முகமூடி (mask of Tutankhamun) பண்டைய எகிப்தின் புது எகிப்து இராச்சியத்தை ஆண்ட 18-ஆம் வம்சத்தின் இறந்த 13-வது பார்வோன் துட்டன்காமன் (ஆட்சிக் காலம்: கிமு 1334 - 1325) மம்மியின் முகத்திற்கு மேல் அணிவிக்கப்பட்ட மரண முகமூடியாகும். பண்டைய எகிப்தியர்களின் இறுதிச் சடங்குகளின் போது துட்டன்காமன் மம்மிக்கு அணிவித்த மரண முகமூடியானது தங்கம் மற்றும் பல வண்ண நிற நவரத்தினக் கற்கள் வேலைப்பாடுகளுடன் கூடியது. [4][5]

துட்டன்காமன் முகமூடி
செய்பொருள்தங்கம், அடர் நீல படிகக்கல், செம்பவளம், பளிங்குக் கல், பச்சைக்கல் மற்றும் கண்ணாடிப் பசை[1]
அளவு54 × 39.3 × 49 செமீ
எழுத்துபண்டைய எகிப்திய மொழி பட எழுத்துக்களில்
உருவாக்கம்ஏறத்தாழ கிமு 1323
கண்டுபிடிப்பு28 அக்டோபர் 1925[2]
தற்போதைய இடம்எகிப்திய அருங்காட்சியகம், கெய்ரோ
அடையாளம்Carter no. 256a; Journal d'Entrée no. 60672; Exhibition no. 220[3]

துட்டன்காமன் முகமூடி 54 cm (21 அங்) உயரத்துடன், 39.3 cm (15.5 அங்) அகலத்துடன் மற்றும் 49 cm (19 அங்) ஆழத்துடன்,10.23 kg (22.6 lb) எடையுடன் கூடியது. [6]துட்டன்காமன் மரண முகமூடியின் பின்புறத்திலும் மற்றும் தோள் பகுதியிலும் பத்து செங்குத்து மற்றும் இரண்டு கிடைமட்ட கோடுகளில் எகிப்திய மொழியில் பட எழுத்துக்களில் குறிப்புகள் பொறிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானிய தொல்லியல் அறிஞர் ஓவர்டு கார்ட்டர், தீபை நகரத்தின் மன்னர்களின் சமவெளியில் கல்லறை எண் 62ஐ 1923-இல் அகழாய்வு செய்த போது துட்டன்காமனின் பிணமனைக் கோயில் கண்டிபிடித்தார். 1925-இல் துட்டன்காமனின் சவப்பெட்டி கண்டிபிடித்த போது, துட்டன்காமன் முகமூடியும் கண்டிபிடிக்கப்பட்டது. துட்டன்காமனின் மரண முகமூடி பண்டைய எகிப்தியர்களின் நாகரீகத்திற்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டாகும்.[7][4].

எகிப்தியவியல் அறிஞர் நிக்கோலசு ரிவீசின் கூற்றுப்படி, துட்டன்காமன் மரண முகமூடியானது, பண்டைய எகிப்தின் மிகவும் பிரபலமான தொல்பொருள் ஆகும்.

துட்டன்காமன் மரண முகமூடியின் பின்பக்கத்தில் எகிப்திய மொழியில் பட எழுத்துக்களில் குறிப்புகள் பொறிக்கப்பட்டுள்ளது

படக்காட்சிகள்

இதனையும் காண்க

மேற்கோள்கள்

ஆதாரங்கள்

வெளி இணைப்புகள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Funerary mask of Tutankhamun
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்